Home
News

மணல் துகள் அளவில் HD கேமராவா? உலகின் மிக சிறிய கேமராவே இது தான்.. கின்னஸ் சாதனை.. இது ஆபத்தா? நன்மையா?

அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்றிணைந்து உலகத்தின் முதல் மைக்ரோஸ்கோபிக் கேமரா (Microscopic-camera) சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. இதன் அளவு வெறும் ஒரு சிறிய மணல் துகள் போன்ற அளவில் அமைத்துள்ளது. இத்தகைய சிறிய வடிவ கேமராவை விஞ்ஞானிகள் எதற்காக உருவாக்கியுள்ளனர் என்று தெரியுமா?

வாருங்கள் விஷயத்தை நாங்கள் சொல்கிறோம். தொழில்நுட்ப (Technology) வளர்ச்சி நாளுக்கு நாள் வெகு வேகமாக வளர்ந்து கொண்டே செல்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் யதார்த்தத்தை விட அதிசயங்கள் போல் தெரிகிறது. அதிசயங்களை உருவாக்க உலக விஞ்ஞானிகள் ஒவ்வொரு படைப்புகளுக்கும் பின்னால், மிகப்பெரிய கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

மணல் துகள் அளவில் HD கேமராவா? கின்னஸ் சாதனை.. இது ஆபத்தா? நன்மையா?

சமீபத்தில், அமெரிக்க விஞ்ஞானிகளால் ஒரு அதிசய சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஒரு மைக்ரோஸ்கோபிக் கேமரா (Microscopic camera) ஆகும். இது மிகவும் சிறியது. அதை கையில் வைத்திருந்தாலும் கூட எளிதில் பார்க்க முடியாத அளவிற்கு சிறியது. உண்மையை சொல்ல போனால், இதன் அளவு ஒரு மணல் துகள் (sand grain size camera) போன்றது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போன்று.

இதன் சைஸ் மிக சிறியதாக இருந்தாலும், இதன் பிக்ச்சர் குவாலிட்டி (picture quality) வேறு லெவல் இருக்கிறது. ஆம், மக்களே இது எச்டி (HD) தரத்தில் படங்களை எடுக்க கூடியது என்று விஞ்ஞானிகள் பெருமிதமாக கூறியுள்ளனர். இந்த கேமராவின் அளவு அரை மில்லிமீட்டர் என்றும், இது கண்ணாடியால் ஆனது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறிய கேமராவால் என்ன பயன் என்று நீங்கள் யோசிக்கலாம். காரணம் இல்லாமல் இருக்குமா?

விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவலின் படி, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (Princeton University) மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (University of Washington) கூட்டாக இதை உருவாக்கி, 5 லட்சம் மடங்கு பெரிய படங்களை எடுக்க முடியும் என்று கூறுகின்றனர். இந்த கேமராவின் மிகப்பெரிய நன்மை மருத்துவத் துறையில் (medical field) இருக்கப் போகிறது. ஏனெனில் மருத்துவர்கள் நமது உடலின் உறுப்புகளை வெளியில் இருந்து பார்ப்பது மிகவும் சிரமமான காரியமாக உள்ளது.

இதை எளிதாக இந்த மைக்ரோஸ்கோபிக் கேமரா பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களையும் உணர்ந்து செயல்படக்கூடியது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஈதன் செங் கூறுகையில், ''இந்த கேமராவில் 1.6 மில்லியன் உருளை இடுகைகள் (1.6 million cylindrical posts) உள்ளன'' என்று கூறினார்.

மணல் துகள் அளவில் HD கேமராவா? கின்னஸ் சாதனை.. இது ஆபத்தா? நன்மையா?

"இந்த சிறிய நானோ-கட்டுமானங்களை (nano-structures) வடிவமைத்து, நீங்கள் விரும்பியதைச் செய்யும் வகையில் கட்டமைப்பது ஒரு சவாலாக இருந்தது'' என்றும் அவர் மேலும் கூறினார்.இந்த சாதனம் OV6948 என பெயரிடப்பட்டு அறியப்படுகிறது. இது அமெரிக்காவைச் சேர்ந்த ஓம்னிவிஷன் டெக்னாலஜிஸ் (OmniVision technologies) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இது 0.575 மிமீ x 0.575 மிமீ அளவுடன் 'வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய மிகச் சிறிய அளவு பட சென்சார் (The Smallest Image Sensor Commercially Available)' என்ற கின்னஸ் உலக சாதனையை (Guinness World Record) வென்றுள்ளது. இந்த கேமரா சிறியதாக இருந்தாலும், வைட் ஆங்கிள் புகைப்படங்களை எடுக்க முடியும். இதன் தரமும் ஹை-குவாலிட்டியில் நன்றாக இருக்கும்.

இதுவரை மைக்ரோ கேமராக்களில், படங்களின் விளிம்புகள் மங்கலாகி, வண்ணங்களில் சிக்கல்கள் இருக்கும். ஆனால், இந்த சிறிய கேமராவில் இந்த சிக்கல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது இயற்கை ஒளியில் சிறப்பாகச் செயல்படும் மற்றும் லேசர் ஒளியில் (laser light) கூட அதிகபட்ச தரமான படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டது என்பதும் கவனிக்கத்தக்கது. இது 120-டிகிரி பார்வைக் களம், நீட்டிக்கப்பட்ட ஃபோகஸ் வரம்பு 3மிமீ முதல் 30மிமீ வரை இருக்கும்.

இதன் மூலம் வினாடிக்கு 30 பிரேம்களை பதிவு செய்ய முடியும். உண்மையில் இது ஒரு அதிசய படைப்பு தான். மருத்துவ பணிக்காக மட்டும் இந்த கருவியை பயன்படுத்தினால் யாருக்கும் பாதிப்பு இருக்காது. ஒருவேளை தீயவர்களின் கைகளில் இந்த மணல் அளவு கேமரா கிடைத்தால், என்னவாகும்? ஹோட்டல் அறைகளிலும், பெண் விடுதிகளிலும் கேமராகள் கைப்பற்றப்படுவது ஆபத்தாக இருக்கும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு அச்சத்தை அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
US Scientists Invent World's Smallest Camera in The Size Of A Sand Grain Gets Into Guinness World Record
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X