'டிரம்ப்'பின் அடுத்த முடிவு இந்தியர்களுக்கு பெரிய அடி! அதிகம் பாதிக்கப்படப்போவது இவர்கள் தான்!
கொரோனா தொற்று உலகையே உலுக்கியுள்ளது, பல நாடுகளை இந்த தொற்று கடுமையாகப் பாதித்து உள்ளது, இன்னும் சொல்லப் போனால் உலக பொருளாதார நிலையே உருக்குலைந்துள்ளது. இத்தனை பாதிப்புகளில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. வரலாறு காணாத அளவில் வேலையின்மை ஏற்பட்டு வரும் நிலையில், ஹெச் 1பி விசாவில் கடுமையான மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹெச் 1பி விசாவில் கடுமையான நடவடிக்கை
அமெரிக்காவில் பணிபுரியும் மற்ற நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு ஹெச் 1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக மற்ற நாடுகளிலிருந்து நல்ல திறமையுடன் செயல்படும் திறமைசாலிகளுக்குக் கொடுக்கப்படும் விசா தான் இந்த ஹெச் 1பி விசாவாகும். ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலைபார்க்கும் மக்கள் மீது நடவடிக்கைக் கடுமையாக்கப்படும் என்று கூறி டிரம்ப் சமீபத்தில் கூறியுள்ளார்.

அமெரிக்கர்களுக்கு வேலையில் முன்னுரிமை
இதனால், இன்னும் ஒரு சில நாட்களில் புதிய ஹெச் 1பி விசா குறித்து மாற்றங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள கடுமையான நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் மற்ற நாட்டவர்கள் மீதான நடவடிக்கையைக் கடுமையாக்கும் போது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேலையில் முன்னுரிமை கிடைக்கும் என்றும், இதனால் தான் டிரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுளள்து.

இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம்
குறிப்பாக ஹெச் 1பி விசா பெரும்பாலும் ஐ.டி நிறுவனங்களில் திறமை வாய்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதிலும், ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் நிலை என்ன?
குறிப்பாக இந்த விசா மூலம் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், வருடத்திற்கு சுமார் 85,000 பேரை அமெரிக்காவில் குடி பெயர்த்தி வருகிறது. ஹெச் 1பி விசா மூலம் கிட்டத் தட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.

அதிக பாதிப்பு இவர்களுக்கு தான்
டிரம்ப்பின் அறிவிப்புப் படி. இந்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தால் முதலில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்களாக மட்டும் தான் இருக்கக் கூடும் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் அமெரிக்காவில் தற்காலிகமாக புதிய குடியேற்றத்தையும் தடை செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் விசா காலம் முடிவடைந்த பின்னர், விசாவை புதுப்பிக்க முடியாமல் அனைவரும் நாடு திரும்பும் நிலை உருவாகும் என்று கருதப்படுகிறது.

டிரம்ப் வாக்கை நம்பலாமா?
இருப்பினும் அமெரிக்காவில் உள்ளஹெச் 1பி விசா பயனர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஹெச் 1பி விசா சட்டம் கடுமையாக்கப்பட்டால் இனி புதிதாக விசா கிடைப்பது என்பது இந்தியர்களுக்கும் மற்ற நாட்டவர்களுக்கும் கடினமான ஒன்றாக மாறி விடும்.

நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்
ஏற்கனவே ஊரடங்கு காரணத்தினால் இந்தியாவில் வேலையிழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த விசா விவகாரம் பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.டிரம்ப்பின் இந்த கடுமையான நடவடிக்கை, இந்தியப் பங்குச் சந்தைகளில் உள்ள ஐடி நிறுவனங்களின் பங்குகளைப் பெரிதும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான தகவலுக்கு காத்திருக்க வேண்டும்
ஹெச் 1பி விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இந்தியர்களின் நிலை இப்பொழுது மிகவும் மோசமாகியுள்ளது. டிரம்ப்பின் அதிகாரப்பூர்வமான ஹெச் 1பி விசா தகவல் வெளியானதும் இவர்களின் நிலை என்ன என்பது தெளிவாகத் தெரியும்.


Click it and Unblock the Notifications