அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வீட்டை சுற்றி வரும் ரோபோ நாய்.. என்ன காரணம்? இது பாதுகாப்பா? அல்லது ஆயுதமா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (US President Donald Trump) வீட்டை இரவு பகலாக, சுற்றி-சுற்றி வளம் வரும் ரோபோ நாய் (Robo dog) குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ரோபோ நாய் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புளோரிடா எஸ்டேட்டை 24 மணிநேரமும் சுற்றி வருவது ஊடக நண்பர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோட் டாக் (Robot Dog) எதற்காக அதிபர் மாளிகையை சுற்றி வளம் வருகிறது? இது பாதுகாப்பிற்காக மாளிகைக்குள் வைக்கப்பட்டுள்ளதா?
அல்லது வளர்ப்பு நாயாக வளர்க்கப்படுகிறதா? அல்லது இது பயங்கரமான ஒரு ஆயுதமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. உண்மையில், இந்த ரோபோட் நாய் எதற்காக அமெரிக்க அதிபர் மாளிகையை சுற்றி வருகிறது என்று தெளிவான தகவலை பார்க்கலாம். புளோரிடா மாநகரத்தில் அமைந்துள்ள மார்-ஆ-லகோ (Mar-a-Lago) எஸ்டேட்டில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தங்கியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் உடன் மிக நெருக்கமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்தலில் வெற்றி வாகை சூடியுள்ளார். கமலா ஹாரிஸுக்கு எதிரான நெருங்கிய தேர்தலுக்குப் பிறகு டிரம்ப் தனது புதிய நிர்வாகத்தைத் திட்டமிடுவதில் மும்முரமாக உள்ளார். இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புளோரிடா எஸ்டேட், மார்-ஏ-லாகோ பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சீக்ரட் சர்வீஸ் பாதுகாப்பின் கீழ் புதிதாக ஒரு ரோபோட் நாய் பாதுகாவலர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட் நாய் அதிநவீனமான தொழில்நுட்பத்துடன், சூப்பர் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தீவிரமான கண்காணிப்பு அம்சங்களுடன் ஒரு நம்பகமான பாதுகாவலனாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் புளோரிடா எஸ்டேட், மார்-ஏ-லாகோவை சுற்றி வளம் வருகிறது.
இரவு பகல் பாராமல் இந்த ரோபோட் டாக் முழு எஸ்டேட்டையும் கண்காணிக்கிறது. இந்த ரோபோட் நாய்யை பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது நான்கு இரும்பு கால்களுடன், பல அதிநவீன அட்வான்ஸ்டு கண்காணிப்பு கருவிகளுடன் வீட்டை சுற்றி முழு விழிப்புடன் சுற்றி வருகிறது. இதை டிரம்ப்பின் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் "கார்ட் டாக்" (Guard dog) என்று அழைக்கிறார்கள்.
இந்த ரோபோ நாயின் மீது 'DO NOT PET' என்ற வாக்கியம் அச்சடிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுமையான அர்த்தம், மக்கள் இதை விளையாட்டு நோக்கத்துடனோ அல்லது நட்பு ரீதியாகவோ நெருங்கவே வேண்டாம் என்ற எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெளிவாக குறிக்கிறது. இதுவொரு பாதுகாப்பு சாதனம் மற்றும் மெஷின் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கிறது.
இந்த ரோபோ டாக் பாதுகாப்பு தவிர ஆயுதமாக பயன்படுத்தப்படுமா என்பது குறித்த தகவலை பாதுகாப்பு படை தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபரின் பாதுகாப்பிற்காக இந்த ரோபோட் டாக் இப்போது அவர் இருக்கும் இடத்தை சுற்றி வருகிறது. இந்த ரோபோட் மூலம், மனித பாதுகாவலர்கள் ஆபத்தான தருணங்களை சந்திப்பதை குறைக்க முடியுமென்று நம்பப்படுகிறது. அதேபோல், இந்த ரோபோட் நாய் பல மறைமுக அம்சங்களையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் டிரம்ப் பிரச்சாரத்தில் இருந்த பொழுது அவர் மீது தொடர்ந்து இரண்டு முறை தாக்குதல் நடத்தப்பட்டதால், கூடுதல் பாதுகாப்பிற்காக இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தை பாதுகாப்பு குழு களமிறக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications