2 மணிநேரத்தில் 123 டுவிட்கள் மூலம் ஆத்திரத்தை வெளிப்படுத்திய டிரம்ப்: எதற்கு தெரியுமா?

|

சமூகவலைதளங்களில் டுவிட்டர் பக்கத்தை அதிகம் பயன்படுத்தும் முக்கிய தலைவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒருவர். அரசியல் திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் குறித்து டிரம்ப் டுவிட்டர் மூலமே தெரிவித்து வந்தார்.

டிரம்ப் பதவி விலகக்கோரி வாக்கெடுப்பு

டிரம்ப் பதவி விலகக்கோரி வாக்கெடுப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலகக்கோரி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், அவர், தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி 2 மணிநேரத்தில் 123 டுவிட்டை அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு

டிரம்ப் மீதான குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டி வேட்பாளரை சிக்க வைக்க உக்ரைன் நாட்டு அதிபருடன், தொலைபேசி வழியே பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பதவிநீக்க தீர்மானத்தின் முக்கிய நடவடிக்கை

பதவிநீக்க தீர்மானத்தின் முக்கிய நடவடிக்கை

இதுதொடர்பாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தை தயாரிக்கும் அமெரிக்கா நாடாளுமன்ற அவை நீதி குழு அவர் மீதான புகார்களை முறைப்படி வெளியிட்டுள்ளது. பதவி நீக்க தீர்மானத்தில் இதுமுக்கியமான நடவடிக்கையாகும்.

பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..

2 மணி நேரத்தில் 123 டுவிட்கள்

2 மணி நேரத்தில் 123 டுவிட்கள்

இது நடந்தால் அமெரிக்கா வரலாற்றில் பதவி பறிக்கப்பட்ட முதல் அதிபர் என டிரம்ப் அழைக்கப்படுவார். இதுகுறித்து அதிர்ந்த டிரம்ப், தன்னுடைய விளக்கத்தை டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். டுவிட்டரை தனது டைப் ரைட்டர் என குறிப்பிட்டுள்ள டிரம்ப், 2 மணிநேரத்தில் 123 டுவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டு நியாயமில்லை

குற்றஞ்சாட்டு நியாயமில்லை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் எந்த தவறும் செய்யாதபோது, குற்றஞ்சாட்டப்படுவது நியாயமில்லை, எதுவும் செய்யாத ஜனநாயகவாதிகள் வெறுக்கத்தக்க கட்சியாக மாறிவிட்டனர் என குறிப்பிட்டுள்ளார். நாட்டு அதிபர்கள் அனைவரும் ஜனநாயக தலைமைத்துவத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். தனது நிலைப்பாட்டை விளக்கி இது போன்ற பல டுவிட்டுகளை பதிவிட்டார்.

Best Mobiles in India

English summary
US President Donald Trump Appears to Hit New Twitter Record With 123 Tweets in a Day

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X