அமெரிக்க கடற்படையின் லேசர் ஆயுதத்தை வைத்து டிரோன் தகர்ப்பு! சோதனை வெற்றியா?

|

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் மக்களின் வாழ்வியல் மிகவும் கலவரமயம் ஆகியுள்ளது. ஒரு புறம் வைரஸ் தொற்று, மறுபுறம் போர் முழக்கம் என உலகமே திக்குமுக்காடிப் போய் உள்ளது. எந்த நேரமும் போரை எதிர் பார்க்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா எச்சரிக்கை நடவடிக்கையாக, புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கி அதைச் சோதனை செய்து வெற்றிகண்டுள்ளது. திரைப்படங்களில் வருவது போன்ற சாலிட் லேசர் ஆயுதங்களை உருவாக்கியுள்ளது.

திட நிலை லேசர் (Solid state laser) ஆயுதம்

திட நிலை லேசர் (Solid state laser) ஆயுதம்

அமெரிக்கா கடற்படை பசிபிக் பெருங்கடலில் பறக்கும் ட்ரொன் ஒன்றைத் திட நிலை லேசர் (Solid state laser) ஆயுதம் மூலம் தகர்த்து சோதனை செய்துள்ளது. நடுக்கடலில் நடைபெற்ற இந்த சோதனையை அமெரிக்கக் கடற்படை வீடியோ பதிவு செய்துள்ளது. அந்த வீடியோ பதிவு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஆயுதம் சோதனை வெற்றியடைந்துள்ளது. தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

லேசர் தாக்குதல் சோதனை

லேசர் தாக்குதல் சோதனை

சான் அன்டோனியோ-வகுப்பு நீரிழிவு போக்குவரத்து கப்பலான (San Antonio-class amphibious transport dock ship) USS போர்ட்லேண்ட் (LPD 27) தனது டெக்னாலஜி மெட்சுரேஷன் லேசர் வெப்பன் சிஸ்டம் டெமோன்ஸ்ட்ரடோர் (Technology Maturation Laser Weapon System Demonstrator) மூலம் ஆளில்லா வான்வழி வாகனம் (unmanned aerial vehicle, UAV) ஒன்றைத் தாக்கும் சோதனை ஓட்டம் ஒன்றை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.

Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட்!Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட்!

திட நிலை லேசர் ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை

திட நிலை லேசர் ஆயுதம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை

உயர் ஆற்றல் கொண்ட திட நிலை லேசரை இவ்வாறு பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று கடற்படை துறையினர் கூறியுள்ளனர். உயர் ஆற்றல் கொண்ட திட நிலை லேசரை இவ்வாறு UAV மற்றும் சிறிய கலங்கள் மூலம் சோதனை செய்யும் பொழுதுதான் அதன் முழு திறனை நாம் ஆராய முடியும் என்று US கடற்படை கேப்டன் கர்ரேய் சாண்டர்ஸ் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார்.

திட நிலை லேசர் வெப்பன் சிஸ்டம்

மேலும், போர்ட்லேண்ட் கப்பலின் தனித் திறமையாக இந்த திட நிலை லேசர் வெப்பன் சிஸ்டம் கருதப்படுகிறது. இது ஆயுத மேம்பாட்டில் பெரிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதன் மூலம் கடல்சார் போர்களை எதிர்நோக்க கடற்படைக்கு ஒரு புதிய அணுகுமுறை கிடைத்துள்ளது என்றும் அமெரிக்கா கடற்படை தெரிவித்துள்ளது.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

30 கிலோவாட் லேசர் வெப்பன்

30 கிலோவாட் லேசர் வெப்பன்

இக்கண்டுபிடிப்பில் அவர்கள் இறங்குவதற்குக் காரணம் மற்ற நாடுகளின் UAV, ஆயுதம் ஏந்திய சிறிய படகுகள், விரோத நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் உளவு அமைப்புகளே என்று கடற்படையினர் கூறுகின்றனர். இதே போல் USS பொன்ஸிலும் 30 கிலோவாட் லேசர் வெப்பன் சிஸ்டம் இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நில ஏவுகணைகளை எதிர்கொள்ள புதிய ஆயுதம்

சீனாவின் நில ஏவுகணைகளை எதிர்கொள்ள புதிய ஆயுதம்

எதிரி நாடுகளின் டிரான்கள் மற்றும் தோலைத் தூர ஏவுகணைகளைக் கூட இந்த லேசர் வெப்பன் சிஸ்டம் மூலம் தகர்க்க முடியும். சீனாவின் நில ஏவுகணைகளை எதிர்கொள்ள கேரியர் குழு தடுமாறிய நிலையில் லேசர் ஆயுதங்களைக் கையில் எடுக்க நேர்ந்துள்ளது.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!

பீரங்கிகள் கூட தடுமாறும்

அமெரிக்கா ராணுவம் 300 கிலோவாட் மறைமுக தீ பாதுகாப்பு திறன் கொண்ட உயர் ஆற்றல் லேசர் (Indirect Fires Protection Capability-High Energy Laser, IFPC-HEL) ஒன்றை சுயமாக உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ராக்கெட்டுகள், பீரங்கிகள் மற்றும் மோர்ட்டர்களை கூட அவர்கள் இடையூறு செய்ய முடியும்.

53 மில்லியன் அமெரிக்கா டாலர்

53 மில்லியன் அமெரிக்கா டாலர்

கடந்த 2015 ஆம் ஆண்டு 150 கிலோவாட் LWSD உருவாக்கக் கடற்படை ஆராய்ச்சி நிறுவனம் நார்த்ரப் க்ரம்மனிற்கு 53 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் வழங்கியுள்ளது. ஒரு கேலன் டீசல் எரிபொருளின் விலைக்கு மிகவும் துல்லியமான ஆயுதங்களைக் கடற்படைக்கு வழங்கியுள்ளதாக இந்த திட்டத்தின் டைரக்டர் மற்றும் ப்ரோக்ராம் மேனேஜர் கை ரெனார்ட் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
US Navy Ship Use a Laser Weapon to Destroy a Flying Drone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X