Zoom வீடியோ காலில் 20 பேர் முன்னிலையில் தந்தையைக் கொன்ற மகன்!

|

ஜூம் பயன்பாடு பாதுகாப்பானது இல்லை என்று தெரிந்த பிறகும் கூட, இன்னும் ஜூம் பயன்பாட்டைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த மகன் தனது தந்தையை ஜூம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். இவர் தனது தந்தையைக் கொலை செய்த போது ஜூம் வீடியோ காலில் சுமார் 20 நபர்கள் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.

ஜூம் அழைப்பில் 20 பேர் முன்னிலையில் நடந்த கொலை

ஜூம் அழைப்பில் 20 பேர் முன்னிலையில் நடந்த கொலை

டுவைட் பவர்ஸ் என்ற 72 வயதான என்பவர், நியூயோர்கின் லாங் ஐலேண்ட் பகுதியில் உள்ள அமிடிவில்லில் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் ஜூம் வீடியோ காண்ப்பிரென்சிங் அழைப்பில் சுமார் 20 நபர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். இவர் வீடியோ காண்ப்பிரென்சிங் அழைப்பிலிருந்தபோது இவரது மகன் தாமஸ் ஸ்கல்லி பவர்ஸ், அவரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார்.

கொலையை நேரலையில் பார்த்த நபர்கள்

கொலையை நேரலையில் பார்த்த நபர்கள்

வீடியோ காண்ப்பிரென்சிங் அழைப்பிலிருந்த அனைவரும் திடீர் என்று நடந்த இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியாகியுள்ளனர். வீடியோ அழைப்பிலிருந்த பலரும் இந்த கொலையை நேரலையில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். டுவைட் பவர்ஸின் மகன் அவரை கத்தியால் குத்தியதும் அவர் கீழே சுருண்டு விழுந்ததாக அழைப்பில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அழைப்பிலிருந்த சிலர் உடனடியாக 911 அவசர உதவிக்கும் அழைத்து தகவலைத் தெரிவித்துள்ளனர்.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

நிர்வாணமாக அருகிலிருந்த நபர் யார்?

நிர்வாணமாக அருகிலிருந்த நபர் யார்?

டுவைட் பவர்ஸை அவரின் மகன் கொலை செய்த போது, அவருடன் வேறு ஒரு நபரும் நிர்வாணமாக அருகிலிருந்ததாக கூறப்படுகிறது. அவர் யார் என்று அழைப்பிலிருந்தவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். டுவைட் பவர்ஸை கீழே விழுந்ததும் பலமாக மூச்சுவிட்டதாகவும் அழைப்பிலிருந்தவர்கள் கவலைப்படத் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவரின் முகவரி யாருக்குமே தெரியாதா?

பாதிக்கப்பட்டவரின் முகவரி யாருக்குமே தெரியாதா?

அழைப்பில் உள்ளவர்கள் அவசர உதவிக்கு அழைத்து, போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் முகவரி அழைப்பில் இருந்த யாருக்கும் சரியாகத் தெரியாததால், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் செல்ல சிறிது நேரம் ஆகியுள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது டுவைட் பவர்ஸ் இறந்தே நிலையில் சடலமாகத் தரையில் கிடந்திருக்கிறார்.

விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

தப்பித்து ஓடிய மகன் கைது

தப்பித்து ஓடிய மகன் கைது

போலீசாரை கண்டதும் டுவைட் பவர்ஸின் மகன் தாமஸ் ஸ்கல்லி ஜன்னல் வழியாகக் குதித்துத் தப்பித்து ஓடியிருக்கிறார். தப்பித்து ஓடிய போது அவருக்கும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது, காயங்களுடன் தப்பித்து ஓடிய தாமஸ் ஸ்கல்லியை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தாமஸ் ஸ்கல்லி மீது 2வது நிலை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
US Man Stabs His Father In Front Of 20 Persons On Zoom Video Call : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X