போர் பீதியை கிளப்பும் அமெரிக்கா மற்றும் வடகொரியா..!

Written By:

தனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியானதொரு நிலைப்பாட்டுக்குள் இருக்கும் நாடு தான் வடகொரியா.

போர் பீதியை கிளப்பும் அமெரிக்கா மற்றும் வடகொரியா..!

வடகொரியாவை - நவீன காலத்தின் 'ஹிட்லர் பிராந்தியம்' என்றே கூறலாம். தந்தையின் மறைவிற்கு பிறகு பகிரங்கமாக அடுத்த வடகொரியத்தலைவர் என்று அறிவிக்கப்பட்டார் 'கிம் ஜொங்-உன்'னை, கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி என்றே கூறலாம், அப்படியான நடவடிக்கைகளை கொண்டவர் கிம் ஜொங்-உன். உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கும் - ஹைட்ரஜன் வெடி குண்டு பரிசோதனை சர்ச்சை ஓய்வதற்க்குள் அதைவிட பெரிய போர் பீதி கிளம்பியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஏவுகணையை கொண்ட செயற்கைகோள் :

ஏவுகணையை கொண்ட செயற்கைகோள் :

பேல்லிஸ்டிக் மிசைல் (Ballistic missile) தொழில்நுட்ப ஆயுதமான, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணையை கொண்ட செயற்கைகோள்தனை பெரும் எதிர்ப்புகளை மீறி வடகொரியா விண்ணில் செலுத்தியுள்ளது.

வெளிப்படையாக மிரட்டல் :

வெளிப்படையாக மிரட்டல் :

இந்த ஏவுதலை நிகழ்த்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று தென்கொரியா வெளிப்படையாக மிரட்டல் விடுத்து இருந்ததை மீறி வடகொரியா செயற்கைகோளை செலுத்தியுள்ளது.

கட்டவிழ்த்துவிடும் :

கட்டவிழ்த்துவிடும் :

இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்குள் அமெரிக்கா மற்றும் சியோல் தலைவர்கள் அதிநவீன மேம்பட்ட ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை (advanced missile defence system) கட்டவிழ்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்டி-பேல்லிஸ்டிக் மிசைல் :

ஆன்டி-பேல்லிஸ்டிக் மிசைல் :

உடன் தென்கொரியா, கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க வரும் ஏவுகணையை தடுத்து அழிக்கும் ஆன்டி-பேல்லிஸ்டிக் மிசைல் சிஸ்டம்தனை (Anti-ballistic missile system) ஏவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கண்டனம் :

கண்டனம் :

இது ஒரு "பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்" என்று உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அந்த கம்யூனிஸ்ட் தேசத்தை தண்டிக்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகளை வலியுறுத்தினார் உள்ளனர்.

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை :

ஹைட்ரஜன் குண்டு பரிசோதனை :

கடந்த மாதம் தென்கொரிய நிலத்தில் அதிர்வு ஏற்படும் வகையிலான ஹைட்ரஜன் குண்டு பரிசோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மசோதா :

மசோதா :

அமெரிக்க செனட் ஆனது, கிம் ஜோங்-உன் அணு திட்டங்களுக்கான தடைகளை இன்னும் கடுமையாக்க வேண்டி ஒரு மசோதாவை உருவாக்கியத்தோடு, கடந்த வாரம் வடகொரியா நிகழ்த்திய ஏவுதலுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.

 தடுப்பு :

தடுப்பு :

வடகொரியாவிற்கு எதிரான அமெரிக்க தாக்குதலை 'தடுத்துக்கொண்டிருக்கும்' சீனா மீதும் விமர்சகர்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
US to install missile defences after North Korea's satellite launch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot