அதிக விலையில் போலி ஷூக்கள்: விசாரணைப்பிடியில் ப்ளிப்கார்ட்.!

By Prakash
|

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கும் நாள் அதிகரித்து வருகிறது. பொருட்களை விற்க புதிது, புதிதாக ஏராளமான நிறுவனங்கள் களம் புகுகின்றன. தற்சமயம் அமெரிக்க அடிப்படையிலான ஒரு நிறுவனத்தின் காலணி பிராண்ட் போலியானவை என்று தெரியவந்தது.

அதிக விலையில் போலி ஷூக்கள்: விசாரணைப்பிடியில் ப்ளிப்கார்ட்.!

டெக் இணைப்பு, யுனிசெம் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் மார்கோ வேகன் ஆகியவற்றின் விற்பனையாளர்களிடமிருந்து போலி விற்பனையை மீட்க தில்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள ஏழு இடங்களில் போலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ப்ளிப்கார்ட் மீது 15,000 ஜோடி போலி காலணி விற்பனை நடந்துள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படும் பொருட்களில், முன்னணி நிறுவனங்கள் பெயரில் போலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

ப்ளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் கூறியது என்னவென்றால் வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இடையே ஒரு இடைத்தரகராக மட்டுமே செயல்படும் என்று தகவல் தெரிவித்தார். மேலும் ப்ளிப்கார்ட் ஒரு ஆன்லைன் சந்தையாக உள்ளது இது விற்பனையாளர்கள் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுடன் இணைக்க உதவுகிறது. இருப்பினும், ஒரு பொறுப்பான நிறுவனமாக, போலி
தயாரிப்புகளை கண்டறிந்து களைவதற்கு ஒரு வலுவான அமைப்பு மற்றும் கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டுள்ளோம். என்று கூறினார்.

அதிக விலையில் போலி ஷூக்கள்: விசாரணைப்பிடியில் ப்ளிப்கார்ட்.!

போலி விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் இப்போது வந்துள்ளது, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் டாமி ஹில்ஃகிர், லாகோஸ்டே,
கால்வின் க்ளீன், லேவிஸ் மற்றும் சூப்பர் டிரை போன்ற பிராண்டுகளில் ஏராளமான போலி சோதனைகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்களில் 60% அளவிற்கும், உடைகள் பிரிவில் 40% அளவிற்கு போலிகள் இருப்பது தற்சமயம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
US Footwear Brand Drags Flipkart To Court For Allegedly Selling Fake Products On High Discount ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X