Home
News

மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்குக்கு கிரீன் சிக்னல்.. என்ன நடக்குது Neuralink?

மனித மூளைக்குள் மைக்ரோசிப் (Microchip) பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் 1,500 விலங்குகள் உயிரிழந்தாக கிளம்பிய சர்ச்சைக்கு மத்தியில் நியூராலிங்க் (Neuralink) நிறுவனத்துக்கு மனிதர்களிடம் ஆராய்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் எலான் மஸ்க் (Elon Musk) மிகப்பெரும் வரலாற்று சம்பவத்தை நிகழ்த்த காத்திருக்கிறார்.

இந்த நியூராலிங்க் நிறுவனம் என்ன செய்கிறது, மனித மூளைக்குள் ஏன் மைக்ரோசிப் பொருத்த வேண்டும், இதுகுறித்த முழு விவரங்கள் இதோ. டெஸ்லா (Tesla), ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் ட்விட்டர் (Twitter) நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், நியூராலிங்க் நிறுவனம் மூலம்
நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு தொழில்நுட்பம் மூலம் மருத்துவ டிவைஸ்களை தயாரிப்பதை ஊக்குவித்து வருகிறார்.

மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்குக்கு கிரீன் சிக்னல்.. Neuralink சாதனை!

இந்த நியூராலிங்க் நிறுவனம், நரம்பியல் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும் (பக்கவாதம் - Paralysis), பார்வை குறைபாடு (Visual Impairment) உள்ளவர்களும் ஸ்மார்ட்போன் (Smartphone), கம்ப்யூட்டர் (Computer) போன்ற ஸ்மார்ட் டிவைஸ்களை எளிதாக பயன்படுத்தும் நோக்குடன் அவர்களது மூளையில் மைக்ரோ சிப்பை பொருத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த சிப்பை பொருத்துவதன் மூலம் அவர்கள் ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர்களை தொடாமலேயே அவற்றை பயன்படுத்த முடியும். இவர்கள் மூளையின் சிந்தனையை அந்த சிப் கமெண்ட்டுளாக பதிவு செய்து கொள்ளும். எளிதாக சொல்லவேண்டும் என்றால், ஸ்மார்ட் டிவைஸ்களை மைண்ட் கன்ட்ரோல் செய்துகொள்ள முடியும்.

இது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எலான் மஸ்க், அந்த நிறுவனத்தை தொடங்கியதுபோது தெரிவித்திருந்தார். இந்த ஆராய்ச்சி 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. முதலில் குரங்குகள், எலிகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளை வைத்து நியூராலிங்க் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுவந்தது.

இவற்றில் குரங்குகளின் மூளையில் பொருத்தப்பட்ட சிப்கள் சிறப்பாக வேலை செய்துள்ளன. சில குரங்குகள் கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தியும் இருக்கின்றன. இதுதொடர்பான ஆய்வறிக்கைகளை நியூராலிங்க் நிறுவனம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் (US Food and Drug Administration) எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்து, அடுத்தக்கட்டமாக மனித உடலில் ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டது.

இதனிடையே நியூராலிங்க் நிறுவனத்தில், 2018ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பரிசோதனையில், செம்மறி ஆடுகள், குரங்குகள், பன்றிகள் மற்றும் எலிகள் என
1,500 விலங்குகள் உயிரிழந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. இந்த எண்ணிக்கை தோராயமானது, பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்திருக்க கூடும் என்று நியூராலிங்க் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம், நியூராலிங்க் நிறுவனம், மனிதர்களிடம் ஆய்வு நடத்த அனுமதி அளிக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், நியூராலிங்க் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை தொடர்ந்து, நியூராலிங்க் நிறுவனம் அடுத்த சில மாதங்களில் மனித மூளையில் மைக்ரோசிப்பை பொருத்தி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
US FDA approval for Elon Musk Neuralink to study of brain implants in humans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X