போர் பயிற்சி வீடியோவை வெளியிட்டது அமெரிக்கா: ஈரானுக்கு நேரடி எச்சரிக்கை.!
தற்சமயம் அமெரிக்க போர்கப்பல்கள், அரபிக்கடலில் கூட்டு பயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு ஏவுகனை அமைப்புகளையும், போர் கப்பலையும் அமெரிக்க அனுப்பி வைத்து வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்க ராணுவம் மீது தாக்குதல் நடத்தப்படலாம்
என்ற அச்சுறுத்தல் எழுந்திருப்பதால், டிரம்ப் நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்பட்டது.

ஈரான் கதை முடிந்து விடும்
இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறுமா, என்ற அச்சம் நீடித்து வருகிறது. குறிப்பாக ஈரான் தாக்குதல் நடத்தினால், ஈரான் கதை முடிந்து விடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப்
மேலும் டிரம்ப் தனது டுவிட்டரில் ஈரான் எங்களுடன் சண்டையிட விரும்பினால், ஈரான் அதோடு முடிந்து விடும், அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.

வீடியோ
தற்சமயம் அமெரிக்க போர்கப்பல்கள், அரபிக்கடலில் கூட்டு பயற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை அந்நாட்டின் கடற்படை வெளியிட்டுள்ளது. பின்பு அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்க
அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் விமானம் தாங்கிய கப்பல், போர் விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

2நாட்கள் கூட்டு பயிற்சி
பின்பு அவ்வப்போது கூட்டு பயிற்சிகளையும் அமெரிக்கா நடத்தி வருகிறது, அந்த வகையில் கடற்படையின் பல்வேறு படையணிகள் அரபிக்கடலில், 2நாட்கள் கூட்டு பயிற்சி நடத்திய நிலையில் அதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








