Home
News

மிஸ் பண்ணாதீங்க.. Internship போனாவே மாதம் ரூ.7 லட்சம்.. டாப் 10 நிறுவனங்கள் லிஸ்ட்!

இந்தியாவில் மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்குவதே கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ள நிலையில், பல வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் இன்டெர்ன்ஷிப்புக்கு (Internship) வருவோர்களுக்கே மாதம் ரூ. 7 லட்சம் வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?.

உண்மையில் அப்படி சம்பளம் வழங்கும் டாப் 10 டெக் நிறுவனங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் வேலைவாய்ப்பின்மை பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல்வேறு மாநிலங்களில் படித்து முடிக்கும் இளைஞர்களுக்கு அவர்களது துறைகளிலேயே வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. சொல்லப்போனால், சிறுவயது முதலே ஆசைப்பட்டு தேர்வு செய்து படித்த படிப்புக்கே இங்கு வேலை கிடைக்காமல் உள்ளதான் உண்மை.

Internship-க்கு மாதம் ரூ.7 லட்சம்.. டாப் 10 நிறுவனங்கள் லிஸ்ட்!

இதனால், படித்த டிகிரிக்கு துளியும் சம்பந்தமில்லாத துறையில் பல இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்படியொரு பக்கம் இருக்க, ஏற்கனவே வேலைக்கு சென்ற இளைஞர்களின் பாடும் கவலைக்கிடமாகவே உள்ளது. படித்த முடித்த உடன் அனைவருக்கும் சொந்த மாவட்டத்திலேயே வேலை கிடைத்துவிடாது.

அந்தந்த மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மட்டுமே வேலை கிடைக்கும் என்பதால் அவர்களும் அங்கே சென்று பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்களின் சம்பளத்துக்கும், அங்கு இருக்கும் விலைவாசிக்கும் துளியும் ஒத்துப்போகாது. அன்றாட செலவுகளிலேயே மொத்த சம்பளமும் செலவாகும் நிலையிலேயே லட்சக்கணக்கான இளைஞர்கள் இன்றளவும் வேலை செய்து வருகின்றனர்.

அதற்கு காரணமும் இருக்கிறது. நாளடைவில் தங்களது சம்பளம் உயரும் என்ற எண்ணமே அவர்களை தொடர்ந்து வேலை செய்ய வைக்கிறது. அப்படி பெரும்பாலான இளைஞர்கள் எதிர்பார்க்கும் சம்பளம் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரமாகத்தான் இருக்கும். ஆனால், அமெரிக்காவில் பல்வேறு டெக் நிறுவனங்களில் இன்டெர்ன்ஷிப்புக்கு வருவோர்களுக்கே மாத சம்பளம் என்பது குறைந்தது ரூ. 7 லட்சமாக உள்ளது.

இதுபோன்ற வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் தங்களது திறமையால் பெற்றக்கொள்ள முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளை எப்படி பெறுவது என்பதிலேயே நமது சாமர்த்தியம் இருக்கிறது. ஆகவே, இன்டெர்ன்ஷிப்புக்கு வருவோர்களுக்கே மாதம் ரூ. 7 லட்சம் வழங்கும் டாப் 10 அமெரிக்க டெக் நிறுவனங்களில் பட்டியலை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இந்த பட்டியலை வேலைவாய்ப்பு நிறுவனமான கிளாஸ்டோர் ( Glassdoor ) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியல் பின்வருமாறு.

  1. ஸ்டிரிப் (Stripe ): 9,064 டாலர்கள் - ரூ.7.4 லட்சம்
  2. ராப்லோக்ஸ் ( Roblox): 9,017 டாலர்கள் - ரூ. 7.4 லட்சம்
  3. என்விடியா (NVIDIA ): 8,280 டாலர்கள் - ரூ. 6.7 லட்சம்
  4. காயின்பேஸ் (Coinbase): 8,206 டாலர்கள் - ரூ 6.7 லட்சம்
  5. மெட்டா (Meta ): 8,160 டாலர்கள் - ரூ. 6.6 லட்சம்
  6. கேப்பிடல் ஒன் ( Capital One): 8,050 டாலர்கள் - ரூ. 6.6 லட்சம்
  7. கிரெடிட் சூய்ஸ் ( Credit Suisse) : 7,947 டாலர்கள் - ரூ. 6.5 லட்சம்
  8. பெயின் & கோ ( Bain & Co ): 7,873 டாலர்கள் - ரூ. 6.4 லட்சம்
  9. அமேசான் ( Amazon): 7,809 டாலர்கள் - ரூ. 6.4 லட்சம்
  10. இஒய்-பர்தேனன் (EY - Parthenon): 7,651 டாலர்கள் - ரூ. 6.2 லட்சம்
Best Mobiles in India

English summary
US based tech companies paying Rs 7 lakh per monthly for interns
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X