Home
News

சீனா, பாகிஸ்தானை நடுக்க வைக்கும் எம்ஹெச்60 ரோமியோ ஹெலிகாப்டர்.!

இந்நிலையில் சீனா அமெரிக்கா கப்பல்களையும் தாக்கும் விதமாக நடந்து கொண்டது. சீனாவின் எல்லை மீறி செயலால் கடும் ஆத்திரமடைந்திருந்தது அமெரிக்கா. மேலும், இந்திய கடல் பகுதியில், பாகிஸ்தானும் சீனாவும் அத்தும

இந்திய கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை வாங்க முடிவு செய்திருந்தது.

இந்நிலையில் சீனா அமெரிக்கா கப்பல்களையும் தாக்கும் விதமாக நடந்து கொண்டது. சீனாவின் எல்லை மீறி செயலால் கடும் ஆத்திரமடைந்திருந்தது அமெரிக்கா.

சீனா, பாகிஸ்தானை நடுக்க வைக்கும் எம்ஹெச்60 ரோமியோ ஹெலிகாப்டர்.!

மேலும், இந்திய கடல் பகுதியில், பாகிஸ்தானும் சீனாவும் அத்துமீறி நுழைந்து கடல் பகுதியை சொந்தம் கொண்டாடி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்கா எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க முன் வந்துள்ளது.

 ஆழ்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்:

ஆழ்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்:

ஆழ்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மற்ற நாடுகளில் அருகே தனது போர்கப்பலையும் நிறுத்தி அச்சுறுத்தி வருகின்றது. போர் செய்யும் பணியில் நீர் மூழ்கி கப்பலையும் இந்திய எல்லை பகுதியின் அருகே கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சீனாவுக்கு ஒத்துழைப்பு பாகிஸ்தான்:

சீனாவுக்கு ஒத்துழைப்பு பாகிஸ்தான்:

சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை சாலையும் அமைத்துள்ளது சீனா. அங்கு தனது படைகளையும் அனுப்பி வருகின்றது. மேலும், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் போர் கப்பலையும் கொடுத்துள்ளது. ஓரே ரேத்தில் இருந்து பாகிஸ்தான், சீனாவும் தாக்குதல் நடத்தினால், தப்பிப்பது இந்தியாவின் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

ஆழ்கடல் பகுதியிலும் ஆப்பு:

ஆழ்கடல் பகுதியிலும் ஆப்பு:

நீர்மூழ்கி கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினால், இதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா பச்சை கொடி:

அமெரிக்கா பச்சை கொடி:

இந்திய பெருங்கடல் பகுதியை பாதுகாக்க 24 எம்ஹெச் ரோமியோ ஹெலிகாப்டரை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது. இந்த ஹெலிகாப்படர் இந்தியா

இந்தியாவிடம் அரிஹந்த்:

இந்தியாவிடம் அரிஹந்த்:

உள்நாட்டு உற்பத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இது எதிரி நாட்டு நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழித்து விடும்.

ரஷ்யாவுடன் 2 போர் கப்பல் கட்டுகிறது:

ரஷ்யாவுடன் 2 போர் கப்பல் கட்டுகிறது:

கோவா கப்பல்கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் ரஷ்யாவும் கையொப்பமிட்டுள்ளன. ரஷ்யாவின் கிரிகோரோவிச் வகைப் போர்க்கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கோவா கப்பல்கட்டும் தளத்தில் அவ்வகைக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.

கையெழுத்தானது:

கையெழுத்தானது:

இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான 3565கோடி ரூபாய் மதிப்புள்ள உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.

2027ம் ஆண்டு கடற்படை:

2027ம் ஆண்டு கடற்படை:

ரஷ்யத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் போர்க்கப்பல்கள் 2027ஆம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்படும். கிரிகோரோவிச் வகையைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்களை 7131கோடி ரூபாய் மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் உடன்படிக்கை கையொப்பமாகிச் சில வாரங்களிலேயே இந்தத் தொழில்நுட்பப் பரிமாற்ற உடன்படிக்கை செய்து கொள்ளப்படுகின்றது.

2022 ரஷ்ய போர் கப்பல்:

2022 ரஷ்ய போர் கப்பல்:

ரஷ்யாவின் கலினின்கிராட் துறைமுகத்தில் கட்டப்பட்டு வரும் அந்தக் கப்பல்கள் 2022ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும். இதனால் இந்தியாவுக்கு சீனாவாலும், பாகிஸ்தானலும் ஓரே நேரத்தில் பேரர் தொடுத்தாலும், அதை வெற்றிகரமாக முறியடித்து விடும்.

நடுங்கும் சீனா, பாகிஸ்தான்:

நடுங்கும் சீனா, பாகிஸ்தான்:

இந்தியா அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து போர் கப்பல், நீர் மூழ்கி கப்பல், ஹெலிகாப்படர்கள் என அடுத்தடுத்து வாங்கி குவிப்பதால், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது, பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
US Approves Sale Of Anti-Submarine Choppers For $2.6 Billion To India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X