Home
News

பாகிஸ்தான் சீனாவை தெறிக்கவிட இந்தியா வாங்கும் அமெரிக்கா டிரோன்.!

இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து, கார்டியன் டிரோன்களை வாங்க இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது, அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அச்

சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதி நவீன விங் லூங்-11 டிரோன்களை வாங்குகின்றது. இதற்கான ஒப்பந்தமும் கையெடுத்திட்டுள்ளது. இதில் 48 அதி நவீன டிரோன்களை பாகிஸ்தான் வாங்கவும் தீவிரமாகியுள்ளது. இதனால், இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சீனாவை தெறிக்கவிட இந்தியா வாங்கும் அமெரிக்கா டிரோன்.!

இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து, கார்டியன் டிரோன்களை வாங்க இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது, அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதனால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் விங் லூங்-11 டிரோன்:

சீனாவிடம் இருந்து விங் லூங்-11 என்ற அதி நவீன டிரோன்களை வாங்க பாகிஸ்தான் சீனாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் 48 டிரோன்களை பாகிஸ்தான் வாங்க இருக்கின்றது. இந்த டிரோன்களின் மதிப்பு வெளியிடப்படவில்லை. மேலும் இதன் விலை குறைந்தாக வே இருக்கும் என்று கூறுப்படுகின்றது.

டிரோன்களின் சிறப்பு:

டிரோன்களின் சிறப்பு:

விங் லூங்-11 டிரோன்களில் ஆளில்லாமல் இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த டிரோனில் பிஏ-7 ஏவுகணையும், வ்வைஇசட்-212 லேசர் வழிகாட்டி வெடிகுண்டு, வ்வைஇசட் 102ஏ ஆன்டி பர்சனல் வெடிகுண்டு, 50 கிலோ கிராம் எடை உள்ள எல்எஸ் 6 மினியேச்சர் வழிகாட்டி குண்டு உள்ளிட்டவை இருக்கின்றன. இந்த டிரோன்களை ஆளில்லாமல் அதில் பொருத்தியுள்ள அதிநவீன ஏன்டாக்களம் நவீன கேமராக்களின் வாயிலாக இலக்கை தாக்கி அழிக்கும்.

டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

டிரோன் எடை மற்றும் பறக்கும் திறன்:

இந்த விங் லூங்-11 டிரோன் 1,100 கிலோ எடை கொண்டது. மணிக்கு 280 கி.மீ வேகத்தில் செல்லும். 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். மேலும் வான் வெளியில் இருந்து கீழே உள்ள 16 ஆயிரம் அடி ( 5 ஆயிரம் மீட்டர்) இலக்கை தாக்கி அழிக்கும் தன்மை இருக்கின்றது.

இந்தியாவின் விருப்பம்:

இந்தியாவின் விருப்பம்:

பிரதமர் மோடி கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்தபோது, கண்காணிப்பு பணிக்கான ‘கார்டியன்' ஆளில்லா போர் விமானங்கள் (டிரோன்) வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆயுதங்களுடன் கூடிய டிரோன்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதற்கு அமெரிக்கா அனுமதி வழங்காமல் இருந்து வந்தது.

பாகிஸ்தான் மிரட்டல்:

பாகிஸ்தான் மிரட்டல்:

இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மறுநாள் பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பகுதியில் ஊடுருவி பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஏவுகணைகளை ஏவ தயங்கமாட்டோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்தது.

போர் விமானங்கள்:

போர் விமானங்கள்:

இந்நிலையில், இந்தியாவுக்கு நவீன போர் கருவிகள் தேவை என்பதை உணர்ந்த அமெரிக்கா, தனது எப்-18ஏ, எப்-21 ரக போர் விமானங்களையும் இந்தியாவுக்கு விற்க தயார் என கூறியது.

தற்போது ஆயுதங்களுடன் கூடிய கார்டியன் டிரோன், தொலை தூர ஏவுகணைகளை தடுக்கும் வான் பாதுகாப்பு கருவிகள் (டிஎச்ஏஏடி), எதிரி ஏவுகணைகளை, இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் ஏவுகணை கருவிகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு விற்க தயார் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராணுவ நிலைபாடு :

ராணுவ நிலைபாடு :

ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு கருவிகளை வாங்க இந்தியா சமீபத்தில்தான் ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் அமெரிக்காவும் தனது வான் பாதுகாப்பு கருவிகளை வழங்க முன்வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்றால் இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி செலவாகும். இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது இந்தியாவின் கையில்தான் உள்ளது என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Best Mobiles in India

English summary
US approves sale of armed drones to India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X