Home
News

சீனாவில் இருந்து வந்த போலி AirPods.. Apple-க்கு ரூ.26,163 கோடி இழப்பு.. அசல் VS போலி அடையாளம் காண்பது எப்படி?

அசல் எது நகல் எதுனே தெரியலையே? அச்சு அசல் உண்மையான ஆப்பிள் தயாரிப்பு போல இருக்கும் போலி ஏர்போட்ஸ் (AirPods) மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனங்களை ஏர்போர்ட் அதிகாரிகள் கைப்பற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி எது? அசல் எது? என்பதை எப்படி கண்டறிவது? இந்த சந்தேகம் நாம் அனைவருக்கும் இருக்கும். அசல் என்று நம்பி அதிக விலை கொடுத்து போலி ஆப்பிள் தயாரிப்புகளை வாங்கி, மக்கள் இப்போது அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள். உண்மையான ஆப்பிள் தயாரிப்புகளை எப்படி கண்டறிவது என்று இந்த பதிவின் இறுதியில் பார்க்கப்போகிறோம். முதலில் விமான நிலையத்தில் எப்படி போலி ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சிக்கியது என்று பார்க்கலாம்.

சீனாவில் இருந்து வந்த போலி AirPods.. Apple-க்கு ரூ.26,163 கோடி இழப்பு!

அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 2.3 கோடி மதிப்புள்ள ஏராளமான போலி ஆப்பிள் தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. மார்ச் 15 ஆம் தேதி, டல்லஸில், வர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸ் கவுண்டியில் உள்ள முகவரிக்கு சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட நான்கு ஏற்றுமதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு வெளியீட்டின்படி, இந்த சோதனையில் 1050 போலி ஆப்பிள் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலியான பொருட்கள் என சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவற்றை விசாரணைக்காக பறிமுதல் செய்து வைத்துள்ளனர். மெஷினரி சென்டர்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் அண்ட் எக்ஸ்பெர்டைஸ் (CEE) வர்த்தக நிபுணர்கள் தயாரிப்புகளின் படங்களை ஆய்வு செய்து, அவை போலியானவை என்று முடிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி போலி ஆப்பிள் தயாரிப்புகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்போட்ஸ் (AirPods) மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோ (AirPods Pro) குறிப்பாக இந்த ஆண்டு அதிகப்படியான போலி தயாரிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளது. போலி தயாரிப்புகளின் பிரச்சினை ஆப்பிளுக்கு நீண்டகாலப் போராக இருந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது. இத்தகைய போலி ஆப்பிள் சாதனங்களால் ஆப்பிள் நிறுவனத்திற்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது தெரியுமா?

சீனாவில் இருந்து வந்த போலி AirPods.. Apple-க்கு ரூ.26,163 கோடி இழப்பு!

கடந்த 2021 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, போலி ஏர்போட்ஸ்களால் ஆப்பிள் சுமார் ரூ.26,163 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக, ஆப்பிள் iOS 16 இல் ஒரு அம்சத்தைச் சேர்த்தது. இது பயனர்கள் போலி ஏர்போட்களை (Fake AirPods) இணைத்தால் அவர்களுக்கு உடனே அது போலி என்பதை தெரிவிக்கும் அம்சத்துடன் வருகிறது. போலி ஏர்போட்களை அடையாளம் காண iOS-16 அப்டேட்டில் ஆப்பிள் ஒரு புதிய சரிபார்ப்பு சோதனை அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனர்கள் போலி ஏர்போட்களை இணைக்கும்போது அவர்களின் ஹெட்ஃபோன்கள் உண்மையானவை அல்ல என்பதைக் குறிக்கும் எச்சரிக்கையை iOS அவர்களுக்கு வழங்குகிறது. அதேபோல், நீங்கள் வாக்கும் ஆப்பிள் சாதனங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, அதன் சீரிஸ் எண்ணை நீங்கள் சரிபார்க்க பயன்படுத்தலாம். AirPods அல்லது AirPods Pro 2-க்கான சீரிஸ் எண் சார்ஜிங் கேஸ் மூடியின் அடிப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏர்போட்ஸ் மேக்ஸின் இடது இயர்கப் இல் சீரிஸ் எண் பாதிக்கப்பட்டுள்ளது. சீரிஸ் எண்ணைப் பெற்ற பிறகு checkcoverage.apple.com மூலம் சரிபார்ப்பை நீங்கள் சில நொடியில் செய்து முடிக்கலாம். ஏர்போட்ஸ்களின் உத்தரவாதம் மற்றும் கூடுதல் கவரேஜ் விவரங்கள் இந்த வலைப்பக்கத்தில் வழங்கப்படும். உங்கள் ஏர்போட்கள் உண்மையானதாக இருந்தால் சரியான முடிவுகள் காண்பிக்கப்படும். இல்லையென்றால், இணையதளத்தில் 'error' என்ற பிழைச் செய்தி காட்டப்படும்.

Best Mobiles in India

English summary
US Airport Customs Seized Fake AirPods and Apple Watch Worth Rs 2.3 Crore
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X