சிறுநீர் மின்சாரம்

By Meganathan
|

படிம எரி-பொருட்களில் ஆரம்பித்து மாற்று சக்தியான காற்று, நீர், சூரியன் உட்பட விவசாயக்கழிவுகளில் இருந்து இது வரை மின் சக்தியை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். சிறுநீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா, ஆம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிரிஸ்டோல் ரோபோடிக் ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்து பல்கலைகழகத்துடன் இனைந்து மனித சிறுநீரில் இருந்து மின்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கிடைக்கும் மின்சாரத்தை ஸ்மார்ட்போன்களுக்கு சக்தியூட்டும் யூரின்ட்ரிசிட்டி எனப்படும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சாரம்

வனிக ரீதியாக ஸ்மார்ட்போன்களுக்கு யூரின்ட்ரிசிட்டி மூலம் சார்ஜ் செய்யும் விளக்க வீடியோ பி.ஆர்.எல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த முறையில் சிறுநீரில் இருந்து தண்ணீரை பிரித்து அதனுடன் உரத்தை கலந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.

இது எப்படி சாத்தியம்

எம்.எப்.சி மூலம் சிறுநீர் பாயும் பொழுது அதில் இருக்கும் எலக்ட்ரான்கள் பிரிக்கப்பட்டு அவை எலக்ட்ரோட்டுடன் இனையும், போது மின்சாரம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எப்.சி தொழில்நுட்பத்தின் தொடர்சியான செயல்திறன்
மூலம் கிடைக்கும் பயோபிலிம் உரத்தை சுத்தம் செய்யும்.இவ்வாறு எம்.எப்.சி செயல்திறன் அதிகமாகும் பொழுது சிறுநீர் உபயோகமும் அதிகமடையும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X