Home
News

டிச.1 அமலுக்கு வந்தது.. 3 புதிய விதிகள்.. பென்ஷன் பணம்.. வருமான வரி.. யுபிஐ பரிவர்த்தனை.. என்னென்ன மாறியது?

2025 டிசம்பர் 1ஆம் தேதியான (December 1) இன்று முக்கியமாக மூன்று புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. நவம்பர் 30ஆம் தேதி கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. இந்த விதிகள் நேரடியாக பணம் பரிவர்த்தனைகளில் மாற்றத்தை கொண்டுவருகின்றன. ஆகவே, அந்த விதிகளை பற்றி கட்டாயம் தெரிந்து வேண்டும்.

1. யுபிஸ் (UPS) காலக்கெடு முடிந்தது: மத்திய அரசு ஊழியர்களுக்காக கொடுக்கப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (Unified Pension Scheme) சேருவதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதியோடு முடிந்தது. அதாவது, தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (National Pension System) மாற விரும்பிய ஊழியர்களுக்காக இந்த மாறுதல் அவகாசம் கொடுக்கப்பட்டது.

டிச.1 அமலுக்கு வந்தது.. 3 புதிய விதிகள்.. பென்ஷன் பணம்.. வருமான வரி!

சிஆர்ஏ போர்டல் (CRA Portal) வழியாக ஆன்லைனில் மாற்றத்தை செய்து முடிக்க கால அவசாகம் கொடுக்கப்பட்டது. மேலும், நோடல் அதிகாரிகளிடமும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து மாறவும் காலக்கெடு இருந்தது. இப்போது டிசம்பர் 1ஆம் தேதியில் அந்த காலக்கெடு முடிந்துவிட்டது. மத்திய அரசு அதை நீட்டிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

2. ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க காலக்கெடு முடிந்தது: ஓய்வூதியதாரர்கள் தடையின்றி ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்வதற்காக வருடாந்திர ஆயுள் சான்றிதழை (Annual Life Certificate) நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டது. ஜீவன் பிரமான் டிஜிட்டல் சிஸ்டம் (Jeevan Pramaan Digital System) மூலமாக இதை செய்ய முடிந்தது.

அதேபோல வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாகவும் வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க காலக்கெடு கொடுக்கப்பட்டது. இந்த கெடு டிசம்பர் 1ஆம் தேதியில் முடிந்துவிட்டது. ஆகவே, வருடாந்திர ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்காத ஓய்வூதியதாரர்கள் கொடுக்கப்படும் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதை ஆன்லைனில் எப்படி செய்யலாம்.

* ஆதார் நம்பர், பென்ஷன் வகை, பிபிஓ நம்பர், ஓய்வூதிய ஒப்புதல் ஆத்தாரிட்டி, பென்ஷன் அக்கவுண்ட் நம்பர் அல்லது ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் கருவிழி வெரிபிகேஷன் ஆகியவை இருக்க வேண்டும். லேப்டாப் மற்றும் பிசி மூலமாகவும், ஸ்மார்ட்போன் மூலமாகவும் இதை செய்து கொள்ளலாம். ஆனால், கேமரா கண்டிப்பாக இருக்க வேண்டும்.

* அதேபோல பயோமெட்ரிக் டிவைஸ்கள் இருக்க வேண்டும். இது என்னென்ன டிவைஸ் என்பதை ஜீவன் பிரமான் போர்டல் மூலமாக தெரிந்து கொள்ளுங்கள். கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து ஆதார்பேஸ்ஆர்டி (AadhaarFaceRD) மற்றும் ஜீவன் பிரமான் பேஸ் (Jeevan Pramaan Face) ஆப்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

* ஆபரேட்டர் அங்கீகார செயல்முறையை (Operator Authentication Process) செய்து முடிக்க வேண்டும். இதில் ஆபரேட்டரின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டி இருக்கும். இதை ஓய்வூதியதாரர் செய்யலாம் அல்லது உறவினர்கள் செய்து கொடுக்கலாம். ஆனால், ஓய்வூதியதாரர் முகம் மட்டுமே ஸ்கேன் செய்யப்பட வேண்டும். பிறகு கேட்கப்படும் விவரங்களை கொடுக்க வேண்டும்.

* ஸ்மார்ட்போனின் செல்பீ கேமரா அல்லது லேப்டாப் கேமராவை பயன்படுத்தி கிளியரான போட்டோவை பிடித்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த சமர்பிப்பு முடிந்தவுடன் ஜீவன் பிரமான் லிங்குடன் கூடிய எஸ்எம்எஸ் ஓய்வூதியதாரர் மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். இதை சரிபார்த்துவிட்டால் போதும். மூன்றாவது விதிகளை இப்போது பார்க்கலாம்.

3. வரி செலுத்துவோர் டிடிஎஸ் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு முடிந்தது: இந்த விவரங்களில் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S பிரிவுகளின் கீழ் அக்டோபரில் செய்யப்பட்ட விலக்குகளும் இருக்கின்றன. பிரிவு 92E இன் கீழ் பரிமாற்ற-விலை நிர்ணய கடமைகள் கொண்ட நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு குழுக்கள் படிவம் 3CEAA ஆகியவையை சமர்ப்பித்திருக்க வேண்டும்.

மேலும், டிசம்பர் 31ஆம் தேதி முதல் யுபிஐ பேமெண்ட்களில் புதிய விதிகள் வருகின்றன. ஆட்டோபோ மேன்டேட்களை ஒரு ஆப் வழியாக பார்த்து கொள்ளும்படியான விதிகள் கொண்டுவரப்படுகின்றன. ஆகவே, எந்த ஆப்களில் ஆட்டோபே மேன்டேட்களை செய்திருந்தாலும், அதை ஒரே ஆப்பின் கீழ் பார்க்க முடியும். இதற்காக போர்ட் செய்ய வேண்டி இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X