இனி சாதாரண பட்டன் போன்களிலும் பணம் அனுப்பலாம்: புதிய வசதியை அறிமுகம் செய்த RBI.!
தற்போது சாதாரண பட்டன் (கீபேட்) போன்களுக்கான பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. எனவே சாதாரண பட்டன் போன் உபயோகிக்கும் 40 கோடி நபர்களால் இனி பணப் பரிவத்தனை செய்ய முடியும். அதேபோல் ஒரு பில்லியன் சில்லறை பணப்
பரிவத்தனைகளை கூடுதலாக செயல்படுத்த இந்த தொழில்நுட்பம் உதவும் என்று கூறப்படுகிறது.

யு.பி.ஐ என அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட்போன்கள் மூலம் பனம் செலுத்தும் முறை இப்போது மிகவும்பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானலும்
யுபிஐ மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

தற்போது இந்தியாவில் பீச்சர் போன் எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களை பயன்படுத்துவோர் சற்று அதிகளவில் உள்ளனர். இந்த நிலையில் கீபேட் போன் பயன்படுத்தும் மக்களுக்கு UPI பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, ரிசர்வ் வங்கி.

குறிப்பாக கீபேட் போன் பயனர்களுக்கு பயன்படும் வகையில் புதிய அம்சங்கள் கொண்ட தனித்துவமான 123pay யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இப்போது அறிமுகம் செய்துள்ளார். குறிப்பாக 123pay யுபிஐ வசதி மூலம் இந்தியாவில் கீபேட் போன் உபயோகிக்கும்40 கோடி நபர்களால் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

மேலும் இது தொடர்பான தகவல்களை பெற பிரத்யேக திட்டமும் தொடங்கப்படும் என்றும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு இந்தசேவைகள் பெரிதும் பயனளிக்கும் எனவும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

சாதாரண பட்டன் (கீபேட்) போன் வைத்திருப்பவர்கள், முதலில் தங்களின் வங்கி கணக்கை இணைக்க வேண்டும். அதன்பின்பு டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்ட் உருவாக்க வேண்டும். அன்பின்பு பரிவத்தனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது மொபைல் எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். பின்னர் அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்து பாஸ்வேர்டு போட்டால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையில் இணைய வசதி இல்லாமலேயே பரிவத்தனை மேற்கொள்ளலாம் என்பது தான் சிறப்பு. மேலும் இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றை செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம, ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று
கூறப்பட்டுள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications