Home
News

ஒவ்வொரு முறையும் கட்டணம்.. ரூ.5000 லிமிட்.. தினமும் GPay, PhonePe வழியா பணம் அனுப்புவீங்களா.. இது முக்கியம்!

ரூ.1000, ரூ.2000 ஆக இருந்தாலும் சரி அல்லது ரூ.50, ரூ.100 ஆக இருந்தாலும் சரி.. கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற யுபிஐ பேமண்ட் ஆப்களை வைத்து தினமும் ஒரு முறையாவது டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவீர்களா?

ஆம் என்றால் டெய்லி ரூ.5000 என்கிற லிமிட் உடன் கிடைக்கும் இந்த யுபிஐ வசதியை பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது ஆப்லைன் யுபிஐ (Offline UPI) வசதி ஆகும். அதாவது இண்டர்நெட் இல்லமால் யுபிஐ வழியாக பணம் அனுப்பும் வசதி.

ஒவ்வொரு முறையும் கட்டணம்.. ரூ.5000 லிமிட்.. UPI ஆப்லைன் வசதி!

இதன் கீழ் யுபிஐ சேவை இயக்கப்பட்டு இருக்கும் மொபைல் நம்பரின் வழியாக, அதாவது எந்த பேங்க் அக்கவுண்ட் உடன் உங்களுடைய யுபிஐ ஆப் இணைக்கப்பட்டு பணப்பரிமாற்றம் நடக்கிறதோ, அந்த மொபைல் நம்பரின் வழியாக ஆப்லைனில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அது எப்படி?

1. முதலில் உங்கள் மொபைல் நம்பர் உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதையும், உங்கள் வங்கியின் ஆப் அல்லது வலைத்தளம் மூலம் நீங்கள் யுபிஐ பின் (UPI PIN) அமைத்துள்ளதையும் உறுதிசெய்து கொள்ளுங்கள்.
2. உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பர் வழியாக *99# என்று டயல் செய்யுங்கள்.

3. இப்போது பணம் அனுப்பு (Send Money), பணம் கோரு (Request Money), பேலன்ஸ்-ஐ சரிபார்த்தல் (Check Balance) மற்றும் பல யுபிஐ விருப்பங்களுடன் ஒரு மெனு தோன்றும்.
4. தொடர்புடைய எண்ணை உள்ளிட்டு "பணம் அனுப்பு" (Send Money) என்பதை தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்த மெனு பெறுநரின் விவரங்களை பற்றி உங்களிடம் கேட்கும்: மொபைல் நம்பர், யுபிஐ ஐடி அல்லது ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விருப்பகளில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். பெறுநரின் விவரங்களை நீங்கள் வழங்கியதும், நீங்கள் அனுப்ப விரும்பும் தொகை கேட்கப்படும்
6. இறுதியாக ஆப்லைன் வழியிலான உங்கள் பரிவர்த்தனையை அங்கீகரித்து முடிக்க யுபிஐ பின்-ஐ உறுதிப்படுத்தவும்.

50 பைசா கட்டணம் மற்றும் ரூ.5000 லிமிட்: இந்த ஆப்லைன் யுபிஐ சேவை இலவசமாக கிடைக்காது . நீங்கள் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.0.50 செலுத்த வேண்டும். மேலும் இது ரூ.5000 வரையிலான பரிவர்த்தனைகளை மட்டுமே ஆதரிக்கிறது. இது அனைத்து டெலிகாம் நெட்வொர்க்குகள் மற்றும் மொபைல்களிலும் செயல்படும்

இதை இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் எளிதாக அணுக முடியும் மற்றும் ஆங்கிலம் புரியாதவர்களும் இதை பயன்படுத்தும்படி, இந்த சேவை வெவ்வேறு மொழிகளையும் ஆதரிக்கிறது. கூடுதலாக, இந்த சேவை 24/7 கிடைக்கிறது, எனவே நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதை அணுகலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்கள் யுபிஐ பின் அங்கீகாரம் தேவைப்படுவதால் இது பாதுகாப்பானது கூட!

யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது யுபிஐ 123பே (UPI 123Pay) என்கிற குரல் அடிப்படையிலான யுபிஐ கட்டண முறையை (Voice Based UPI Payments System) செயல்படுத்தி உள்ளது. இது பட்டன் போன்களின் வழியாக யுபிஐ சேவையை ஆதரிக்கும் ஒரு வசதி ஆகும்.

இதேபோல ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Junio Payments Private - JPPL) ஆனது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (Prepaid Payment Instruments - PPIs) வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (Reserve Bank of India - RBI) கொள்கை ரீதியான அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

இதன்கீழ் பயனர்கள் - குறிப்பாக டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் - யுபிஐ க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து வங்கி கணக்கு இல்லாமலேயே பணம் செலுத்த முடியும். இது இளம் பயனர்கள் தங்கள் பெற்றோரின் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டு, அதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Without Internet Offline UPI Payment Send Money Using Mobile Number Linked With Bank Account
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X