Home
News

இனி Google Pay, PhonePe வழியாக PIN நம்பர் இல்லாமல் பணம் அனுப்பலாம்.. UPI சேவையில் மிகப்பெரிய மாற்றம்!

என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (National Payments Corporation of India) ஆனது, யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூனிஃபைடு பேமண்ட் இன்டர்பேஸ் (Unified Payments Interface) சேவையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் முக்கியமான அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது.

பின் (PIN) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தனிநபர் அடையாள எண்ணை (Personal identification number) உள்ளிடுவதற்கு மாற்றாக, முக அங்கீகாரம் (Facial recognition) மற்றும் கைரேகைகள் (Fingerprints) போன்ற பயோமெட்ரிக்ஸ் (Biometrics) விவரங்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க உதவும் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வரவுள்ளதாக பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்ஸின் (Business Standards) சமீபத்திய அறிக்கை கூறுகிறது.

இனி Google Pay, PhonePe வழியாக PIN நம்பர் இல்லாமல் பணம் அனுப்பலாம்!

இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் படி, யுபிஐ சேவைக்கு வரும் இந்த புதிய அப்டேட் (UPI Service New Update) ஆனது பாதுகாப்பு மற்றும் வசதியை (Security and convenience) மேம்படுத்துவதோடு மட்டுமின்றி பின் நமபர் திருட்டு (PIN Number Theft) மற்றும் பின் நம்பர் மோசடி (PIN Number fraud) குறித்த வளர்ந்து வரும் சிக்கல்களையும் குறைக்கும்.

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் (Digital Transactions) 80 சதவீதத்திற்கும் அதிகமாக யுபிஐ சேவை பங்களிக்கும் இந்த நேரத்தில் என்பிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும் பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்ஸின் அறிக்கையானது என்பிஐசி ஆனது இந்த புதிய அம்சத்தில் பணியாற்றி வருவதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன என்றும் குறிப்பிடுள்ளது.

யுபிஐ (UPI) தொடர்பான மற்ற முக்கிய செய்திகளை பொறுத்தவரை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ (NPCI) ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டு வருகிறது.

இதன் கீழ் 4 மாற்றங்கள் அமலுக்கு வரும்: முதலாவதாக - பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள்: ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே என்கிற வரம்பு. இரண்டாவதாக - மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள்: ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே என்கிற வரம்பு அமலுக்கு வரவுள்ளது.

மூன்றாவதாக - ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்கிற புதிய முறை. நான்காவது மற்றும் கடைசியாக - தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும் என்கிற வரம்பு என பல மாற்றங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

இதேபோல எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) சேவையில் முக்கியமான மாற்றம் அமலுக்கு வரவுள்ளது. இது ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதன்கீழ் குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட சப் பிராண்டட் கிரெடிட் கார்டுகளுடன் முன்னர் வழங்கப்பட்ட இலவச விமான விபத்து காப்பீட்டு தொகை ஆனது எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் கிடைக்காது.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான இந்த காப்பீடு, யுசிஓ வங்கி, மத்திய வங்கி, கரூர் வைஸ்யா வங்கி மற்றும் அலகாபாத் வங்கி போன்ற வங்கிகளுடன் இணைந்து வழங்கப்பட்ட எலைட் (ELITE) மற்றும் ப்ரைம் (PRIME) கார்டுகளின் வழியாக கிடைத்தது. இந்த பலன் தற்போது நீக்கப்படுவதால் அடிக்கடி விமானங்களில் பயணிப்பவர்கள் பயணக்காப்பீட்டிற்கு கூடுதலாக செலவிட வேண்டியிருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI users soon to send money using biometrics like Facial recognition fingerprints instead of PIN Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X