கூகுள் பே இருக்கா? கட்டாயம் இந்த புது ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க.. இல்லன்னா சிக்கல் தான்.. ஏன்?
இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதுவும் சிறிய கடைகள் முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் இந்த யுபிஐ வசதி பயன்படுகிறது. ஆனாலும் யுபிஐ செயலியைப் பயன்படுத்தும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதாவது உங்களது ஒரு சிறிய கவனக்குறைவு உங்களின் யுபிஐ கணக்கை தற்காலிகமாக முடக்கிவிடக்கூடும். அதுவும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய விதிமுறை குறித்து பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சில சமயங்களில் நமது யுபிஐ ஐடி (UPI ID) செயலிழக்கச் செய்யப்படுகிறது. இதற்கான காரணம் நமக்குத் தெரிவதில்லை. அதுவும் பேமெண்ட் செய்யும் போது தோல்வியடையும் போது தான் கணக்கு முடக்கப்பட்டிருப்பதே பலருக்குத் தெரியவருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தவறான அல்லது காலாவதியான தகவல்களைப் பயன்படுத்துவதுதான்.
புதிய விதிமுறை
சமீபத்தில் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) கொண்டுவந்துள்ள புதிய விதிகளின்படி, ஒவ்வொரு யுபிஐ கணக்கும் தற்போது பயன்பாட்டில் உள்ள (Active) சரியான மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
குறிப்பாக ஒருவர் நீண்ட நாட்களாகத் தனது மொபைல் எண்ணைப் பயன்படுத்தாமல் இருந்தாலோ அல்லது அந்த எண் துண்டிக்கப்பட்டிருந்தாலோ (Disconnected) அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடி ஆபத்தானது என்று கருதப்படும்.
இதுதவிர அடையாளச் சரிபார்ப்பு (KYC) முழுமையடையாத அல்லது நீண்ட காலம் பணப்பரிமாற்றம் செய்யப்படாத கணக்குகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறை கொண்டுவரப்பட்ட காரணம்
அதாவது நாட்டில் சைபர் குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே இந்த சைபர் குற்றங்களைத் தடுக்கவும், பணமோசடியைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசான் பே
மேலும் சமீபத்தில் அமேசான் பே (Amazon Pay) செயலியில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம். அதாவது இந்த அமேசான் பே செயலி ஆனது இந்தியாவில் ஃபின்டெக் சேவையை வழங்கி வருகிறது. குறிப்பாக யுபிஐ, ரீசார்ஜ், டிராவல் புக்கிங், விமான டிக்கெட் பதிவு, சினிமா டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல சேவை வழங்குகிறது. இந்த நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்பு தொகை திட்டமும் இந்த அசேமசான் பே செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த அமேசான் பே செயலியில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறிப்பாக ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி தரக்கூடிய வகையிலான ஃபிக்சட் டெபாசிட் திட்டம் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஐந்து வங்கிகளுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். குறிப்பாக எந்த வங்கியை நாம் தேர்வு செய்கிறோம் அந்த முதலீடு பொருத்தும் ஆண்டுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பெண்களுக்குக் கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி வழங்கப்படும். பின்பு முத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.5 சதவீதம் வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








