UPI பயனர்களுக்கு எச்சரிக்கை.. தெரியாம கூட வாய்ஸ் கால் இணைப்பில் சிக்கிடாதீங்க.. மொத்த பணமும் திருடு போய்டும்..
NPCI என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India), இந்தியாவில் உள்ள அணைத்து யுபிஐ பயனர்களுக்கு புதிய எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. நீங்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடியம் (Paytm) அல்லது SBI வங்கி UPI சேவை, கனரா (Canara) வங்கி UPI சேவை என்று எந்தவிதமான UPI சேவையை பயன்படுத்திக்கொண்டிருந்தாலும், இந்த பதிவு மிகவும் முக்கியமானது மக்களே. ஒரே ஒரு போன் அழைப்பு மூலம் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் ஒட்டுமொத்த பணத்தையும் இழக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், UPI சேவையை பயன்படுத்தும் அணைத்து பயனர்களையும் கால் மெர்ஜிங் ஸ்கேம்மில் (Call Merging Scam) இருந்து கவனமாக இருக்கும் படி எச்சரித்துள்ளது. சைபர் குற்றவாளிகள் (cyber criminals) மக்கள் ஏமாற்றி பணம் திருடும் பல புதிய மோசடி (new call merging scam) முறைகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள்.

UPI பயனர்களுக்கு எச்சரிக்கை.. தெரியாம கூட வாய்ஸ் கால் இணைப்பில் சிக்கிடாதீங்க மக்களே.. உஷார்:
சமீபத்தில் நடைபெற்ற மிஸ்டு கால் மோசடிக்கு (missed call scam) பிறகு, இந்த வாய்ஸ் கால் மெர்ஜிங் மோசடி (voice call merging scam) மூலம் முகம் தெரியாத மோசடிக்காரர்கள் மக்களை பணத்தை திருடி, பெரியளவில் பொதுமக்களை பாதிப்படைய செய்து வருகின்றனர். இந்த கால் மெர்ஜிங் மோசடி எப்படி செயல்படுகிறது? எப்படி உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் மொத்தமாக சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள் என்பது பற்றியும் NPCI விளக்கமாக தெளிவுரை வழங்கியுள்ளது.
உங்களை ஏமாற்றி, உங்கள் வங்கி கணக்கில் (bank account) இருக்கும் பணத்தை மொத்தமாக திருட திட்டமிட்ட ஸ்கேமர்கள், உங்களை ஒரு வாய்ஸ் கால் அழைப்பு மூலம் தொடர்புகொள்வார்கள். உங்கள் மொபைல் நம்பரை (mobile number) உங்கள் வட்டத்தில் இருக்கும் நெருங்கிய நண்பர் ஒருவர் (mutual friend) வழங்கியதாக பொய் சொல்லி உங்களிடம் சில அறிவிப்புகளை தெரிவிப்பார்கள். ஒரு பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு இலவச பாஸ் தருவதாகவோ,
தெரியாமல் கூட வாய்ஸ் கால் அழைப்புகளை மெர்ஜ் செய்து இணைத்துவிடாதீர்கள்:
அல்லது அதிக சம்பளத்துடன் புதிய வேலைப்பை வழங்குவதாக கூறியோ உங்களை அழைப்பில் தொடர வைப்பார்கள். நீங்கள் அழைப்பில் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், உங்கள் மொபைல் எண்ணிற்கு மற்றொரு வாய்ஸ் கால் அழைப்பு வெயிட்டிங்கில் (second call on waiting) வரும், அந்த அழைப்பு உங்கள் நண்பருடையது தான் அதன் அட்டண்ட் (attend call) செய்து, எங்கள் வாய்ஸ் காலையும் அதனுடன் இணையுங்கள் (conference call or add call) என்று அழைப்பில் உள்ள நபர் உங்களுக்கு சில அறிவுரையை வழங்குவார்.
இரண்டாம் அழைப்பில் வரும் நண்பர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் நீங்களும் அந்த அழைப்பை ஏற்ற்றுவிடுவீர்கள், அழைப்பை ஏற்றதும் உங்கள் அழைப்பை மற்றொரு அழைப்பில் இருக்கும் நபர் ஒட்டுக்கேட்க துவங்கிவிடுவார். உங்களுக்கு இரண்டாம் அழைப்பாக வந்த வாய்ஸ் கால் அழைப்பு, உங்கள் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பெறப்பட்ட OTP தகவல் உள்ளடக்கிய வாய்ஸ் கால் (banking voice call) என்பது உங்களுக்கு தெரியாது.
OTP தகவலை ஒட்டு கேட்டு மொத்த பணத்தையும் திருடும் புது மோசடி.. உஷார் மக்களே:
உங்கள் OTP தகவலை ஒட்டுக்கேட்கும் ஸ்கேமர்கள் (scammers) அந்த OTP விபரங்களை உங்களுக்கே தெரியாமல் உள்ளிட்டு, உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மொத்தமாக திருடி விடுவார்கள். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு தான் உங்கள் வங்கி கண்களில் இருக்கும் ஒட்டுமொத்த பணமும் திருடப்பட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்குள் மோசடிக்காரர்கள் உங்கள் பணத்துடன் எஸ்கேப் ஆகியிருப்பார்கள்.
பயனர்கள் இரண்டு முக்கிய வழிகளில் OTP தகவல்களைப் பெறுகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். SMS அல்லது மின்னஞ்சல் (e-mail) அல்லது தொலைபேசி அழைப்பு (phone call) மூலம் இப்போது மக்கள் OTP விபரங்களை பெற முடியும். ஒரு பயனர் தங்கள் OTP-ஐ அழைப்பின் மூலம் கேட்கத் தேர்வுசெய்தால், மோசடி செய்பவர்கள் இந்தத் தகவலை எளிதாக ஒட்டுகேட்டு உங்கள் பணத்தை மொத்தமாக திருட அதிக வாய்ப்புள்ளது என்பதனால் NPCI மக்களை கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளது.
தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், அதைப் புறக்கணித்து, அறிமுகமில்லாத தொடர்புகளிலிருந்து வரும் அழைப்புகளை ஒன்றிணைப்பதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம என்று NPCI அணைத்து UPI பயனர்களை எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications








