Home
News

Google Pay, PhonePe பயனர்களுக்கு நற்செய்தி.. ரூ.2000 வரை UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை! மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் ரூ.2000 வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், சாமானிய மக்கள் முதல் வணிகர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் யுபிஐ முக்கியமான பணப்பரிவர்த்தனை வழியாக மாறியுள்ளது. சில நொடிகளில் பணத்தைப் பரிமாறிக்கொள்ளும் வசதி இருப்பதால், நாளுக்கு நாள் யுபிஐ பயன்பாடு உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் கையாள்வது, சர்வர் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வங்கிகள் மற்றும் கட்டண சேவை நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுகின்றன.

Google Pay, PhonePe பயனர்களுக்கு நற்செய்தி..

இந்தச் செலவுகளை சமாளிக்க யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் எம்டிஆர் கட்டணம் அறிமுகப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ரூ.2,000-க்கும் அதிகமான தொகைக்கான யுபிஐ வணிகப் பரிவர்த்தனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி பொதுமக்களிடையே பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ரூ.2,000 வரை மேற்கொள்ளப்படும் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கும், ரூபே டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் அல்லது கட்டணச் சேவை நிறுவனங்கள் எந்தவிதமான கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு இயற்றப்பட்ட பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 10ஏ-ன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் விரிவுபடுத்துவதுடன், சில்லறை பணத்திற்கான தேவையை குறைக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி, மளிகை மற்றும் பழ வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கும், அவர்களிடம் பொருட்கள் வாங்கும் நுகர்வோருக்கும் கூடுதல் நிதிச்சுமை ஏற்படாத வகையில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என அண்மையில் பரவிய தகவல்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் நிலவிய குழப்பங்களுக்கும் தெளிவு கிடைத்துள்ளது.

போனில் நெட் இல்லாமலும் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி:

மேலும் சமீபத்தில் NFC வசதியுள்ள ஸ்மார்ட்போன் மூலம், இணையதள வசதி இல்லாமலேயே, 'UPI Tap & Pay' வழியாக பணம் செலுத்தும் புதிய வசதியை RBI அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

சில நேரங்களில் நம் மொபைலில் நெட் இல்லாமல் போனாலோ, சர்வர் பிரச்சனை ஏற்பட்டாலோ, டவர் சரியாக கிடைக்காததால் நெட் ஸ்லோவாக இருந்தாலோ UPI பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற பிரச்சனைகளில் பணப் பரிவர்த்தனை சரியாக நடக்காமல் போகலாம்.

இதுபோன்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தவிர்க்கவே தற்போது RBI புதிய வசதி ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அதாவது நெட் இல்லாமலே இனி UPI கட்டணம் செலுத்தலாம். அதற்கான வசதியை RBI அறிமுகம் செய்துள்ளது. அதாவது NFC வசதியுள்ள ஸ்மார்ட்போன் மூலம், இணையதள வசதி இல்லாமலேயே, 'UPI Tap & Pay' வழியாக பணம் செலுத்தும் புதிய வசதியை RBI அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களின் மொபைலில் இன்டர்நெட் டேட்டா ஆன் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

குறிப்பாக UPI Tap & Pay என்பது ஸ்மார்ட்போனில் உள்ள NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்த உதவும் நவீன வசதியாகும். இதன் மூலம் கடைகளில் உள்ள POS இயந்திரத்தின் அருகில் NFC வசதி கொண்ட மொபைல் போனை வைத்தவுடன், போனுக்கும் இயந்திரத்திற்கும் இடையே வயர்லெஸ் இணைப்பு ஏற்பட்டு, UPI வழியாக எளிதாகப் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

இந்த முறையைப் பயன்படுத்தும்போது உங்களது போனில் நெட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்டணம் செலுத்த கடைக்காரர்களிடம் இருக்கும் இயந்திரத்தின் இணைப்பே போதுமானது. மேலும் நம் போனை POS இயந்திரத்தின் டேப் செய்தாலே போதும், கட்டணம் செலுத்திவிடலாம்.

இந்த வசதியை மேலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், PIN இல்லாமல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கான பண வரம்பையும் RBI உயர்த்தியுள்ளது. இதனால், குறிப்பிட்ட வரம்புக்குள் PIN உள்ளிடாமல் விரைவாக பணம் செலுத்தும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கிறது.

Google Pay, PhonePe பயனர்களுக்கு நற்செய்தி..

அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.5,000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், UPI PIN-ஐ உள்ளிட வேண்டிய அவசியமில்லை. NFC வசதி கொண்ட மொபைல் போனை POS இயந்திரத்தின் அருகில் டேப் செய்தாலே, விரைவாக பணப்பரிவர்த்தனையை முடித்துவிடலாம். அதேசமயம் ரூ.5,000-க்கு மேல் தொகையை செலுத்தும்போது, பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்ய UPI PIN-ஐ உள்ளிடுவது கட்டாயமாகும். இந்த பாதுகாப்பு விதியை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

UPI Tap & Pay பயன்படுத்தும் வழிகள்

உங்கள் மொபைலில் செட்டிங்க்ஸுக்கு சென்று NFC-ஐ ஆன் செய்யவும்.

அடுத்து UPI செயலிகளில் Tap & Pay வசதியை தேர்வு செய்யவும்.

அதன்பின்பு கடைகளில் இருக்கும் POS இயந்திரத்தின் அருகில் சென்று டேப் செய்தால் கட்டணம் செலுத்தப்படும்.

Best Mobiles in India

English summary
UPI Users Get Major Relief! Government Bars Charges on Payments Up to Rs 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X