Home
News

Google Pay, PhonePe யூசர்களுக்கு எச்சரிக்கை! ரூ.5000 டெபாசிட்.. 15 நிமிடம் பேலன்ஸ் செக் பண்ண கூடாது! மீறினால்?

தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவானது (Cyber Crime Wing of Tamil Nadu Police) ஒரு புதிய மற்றும் அதிநவீன ஆன்லைன் பண மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்ப்ட் டெபாசிட் (Jumped Deposit) என்று அழைக்கப்படும் இந்த மோசடி எப்படி வேலை செய்யும்? இதனால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை தெரிந்துகொள்வது எப்படி? உடனே இதில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ விவரங்கள்:

சைபர் கிரைம் அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜம்ப்ட் டெபாசிட் மோசடியின் கீழ் அதிகம் குறிவைக்கப்படுவது யுபிஐ (UPI) பயனர்கள் தான். அதாவது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் பயனர்கள் தான் - இந்த ஜம்ப்ட் டெபாசிட் மோசடிக்கான முக்கிய இலக்காக உள்ளனர்!

Google Pay, PhonePe யூசர்களுக்கு எச்சரிக்கை!

இந்த ஜம்ப்ட் டெபாசிட் மோசடியின் கீழ், அதிகாரப்பூர்வ நோட்டிபிக்கேஷனை தூண்டுவதற்கும், செய்யப்பட்ட பணப்பரிவர்த்தனை ஆனது முறையானதாக தோன்றுவதற்கும், மோசடி செய்பவர் உங்கள் கணக்கிற்கு ஒரு உண்மையாகவே வைப்புத்தொகையை அனுப்புகிறார்கள். பொதுவாக ரூ.5,000 அனுப்புகிறார்கள்.

இப்படியாக ரூ.5000 டெபாசிட்டை செய்த உடனேயே, அவர்கள் உங்கள் அக்கவுண்டில் இருந்து அவர்களின் விவரங்களை பயன்படுத்தி பணத்தை திரும்ப பெறுவதற்கான வித்ட்ராவல் ரெக்வஸ்ட்டை (Withdrawal request) தொடங்குகிறார்கள். திடீரென ரூ.5000 பணம் வந்ததும், உங்களுடைய பேலன்ஸை சரிபார்த்து, அதற்காக உங்களுடைய பின் நம்பர் அல்லது செக்யூரிட்டி கோட்-ஐ பயன்படுத்தும் நேரத்தில், உங்களுக்கு தெரியாமலேயே வித்ட்ராவல் ரெக்வஸ்ட் அங்கீகரிக்கப்படும்.

இது நடந்த வேகத்தில், உங்கள் அக்க்வுண்டிற்கு திடீரென வந்த ரூ.5000 பணத்தோடு சேர்த்து, இன்னும் அதிக அளவிலான பணம் உங்கள் அக்கவுண்டில் இருந்து திருடப்படும். எதிர்பாராத டெபாசிட் குறித்த மக்களின் ஆர்வத்தை மோசடி செய்பவர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர்.

எனவே நீங்கள் எதிர்பாராத டெபாசிட் பணத்தை பெறும்போது, ​​உடனே உங்கள் பேலன்ஸை சரிபார்க்க வேண்டாம். மாறாக குறைந்தபட்சம் 15 - 30 நிமிடங்கள் காத்திருக்கவும். ஏனெனில் இந்த நேரத்திற்குள் அங்கீகரிக்கப்படாத பணத்தை திரும்ப பெறுபவதற்கான கோரிக்கை காலாவதியாகி விடும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

யுபிஐ சேவையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் மறுகையில், யுபிஐ தொடர்பான மோசடிகளும் கூட அதிகரித்துக்கொண்டே போகிறது. இதன் விளைவாகவே என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது ஒவ்வொரு மாதமும் யுபிஐ தொடர்பான புதிய விதிகளை, புதிய கட்டுப்பாடுகளை மற்றும் புதிய வழிமுறைகளை அமல் படுத்திக்கொண்டே இருக்கிறது.

தற்போது யுபிஐ லைட் சேவையில் தற்போது சிங்கிள் யுபிஐ லைட் ஆஃப்லைன் பரிவர்த்தனைக்கான (Single UPI Lite offline transaction) அதிகபட்ச வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடவே யுபிஐ லைட் வாலட்டின் மொத்த வரம்பு (UPI Lite Wallet Total Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆகவும், யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தப்பட்டு இருந்தது. மேலும் யுபிஐ லைட் சேவையில் ஆட்டோ டாப்-அப் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டது.

யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையிலும் கூட முக்கிய மாற்றம் ஒன்று அமல்படுத்தப்பட்டது. யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த மாற்றத்தின் கீழ், தற்போது இந்தியாவில் உள்ள 400 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்கள், தங்களுடைய மொபைல் போன்களில் உள்ள யுபிஐ 123பே ஆப் வழியாக ரூ.10,000 வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Users Alert New Jumped Deposit Scam Do Not Check Balance If You Get Rs 5000 Unexpected Deposit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X