Google Pay, PhonePe யூசர்கள் தயாரா இருங்க.. 2025 இல் UPI சேவையில் இது நடக்கும்.. வல்லுநர்கள் கணிப்பு!
கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும்.. யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சேவையில் பல வகையான முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக கடந்த நவம்பர் மாதத்தில் மட்டுமே யுபிஐ தொடர்பான பல புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் (New Rules and Regulations) அமலுக்கு கொண்டுவரப்பட்டன.
அவைகளில் யுபிஐ லைட் சேவையின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்பட்டதும், ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டதும், யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையில் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மிகவும் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகின்றன. இதெல்லாம் சேர்ந்து 2025 ஆம் ஆண்டில் யுபிஐ சேவையில் பூதாகரமான வேலை ஒன்றை செய்ய உள்ளன.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் யுபிஐI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 25 பில்லியனை தொட்டாலும் கூட அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். அக்டோபர் 2024 இல் 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.23.50 லட்சம் கோடி வேல்யூவை எட்டிய பிறகு, கடந்த நவம்பர் மாதத்தில் யுபிஐ சேவையின் கீழ் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் ரூ.21.55 லட்சம் கோடி வேல்யூ பதிவாகி உள்ளது
ஒப்பீட்டளவில், கடந்த மாதம் சற்றே குறைவான யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்திருந்தாலும் கூட, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அமல் செய்யப்பட்டுள்ள மற்றும் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ள யுபிஐ விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஆனது, 2025 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பூதாகரமான யுபிஐ வளர்ச்சியை காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துக்கொன்டே போகும் ஸ்மார்ட்போன் ஊடுருவல், புதிய ஆப்களின் அறிமுகங்கள் மற்றும் ஃபீச்சர் போன்களில் யுபிஐ ஆதரவு போன்றவைகளின் விளைவாக 2025 ஆம் ஆண்டின் இறுதியில் யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மாதத்திற்கு 25 பில்லியனைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சுனில் ரோங்காலா (எஸ்விபி, ஹெட்-ஸ்டிராடஜி, இன்னோவேஷன் அண்ட் அனலிட்டிக்ஸ், வேர்ல்ட்லைன் இந்தியா) தெரிவித்துள்ளார்.
யுபிஐ லைட் பிளாட்ஃபார்மில் (UPI Lite platform) கொண்டுவரப்பட்ட முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை, கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கியின்படி யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பி ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) கூட ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதோடு சேர்த்து யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், அதை தானாகவே டாப்-அப் செய்யும் புதிய ஆட்டோ டாப்-அப் அம்சமும் (Auto top-up feature) அறிமுகம் செய்யப்பட்டது.
யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையில் அமல்படுத்தப்பட்ட முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை, யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது தற்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் உள்ள 400 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்களால் யுபிஐ 123பே ஆப் வழியாக ரூ.10,000 வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.
இதோடு சேர்த்து யுபிஐ 123பே சேவையில் ஆதார் அட்டை அடிப்படையிலான ஒடிபி அங்கீகாரம், ட்ராக்கிங் மற்றும் ரிப்போர்ட்டிங்காக புதிய (86) பர்போஸ் கோட் (Purpose code) போன்ற வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன, முக்கியமாக ஐவிஆர், மிஸ்டு கால்கள், ஃபீச்சர் போன் ஆப்கள் மற்றும் சவுண்ட்-பேஸ்டு டெக்னாலஜி (Sound-based technology) ஆகியவைகளின் கீழ் பணபரிமாற்ற செயல்முறையை தொடங்க உதவும் புதிய இனிஷியேஷன் மோட்கள் (New Initiation Modes) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








