Home
News

பேங்க் அக்கவுண்ட்.. Google Pay, PhonePe வழியாக ரூ.1,000 கூட போகாது.. டிச.13 க்கு வருகிறது.. எந்த பேங்க்?

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் வழியாக ரூ.1,000 அனுப்பினாலும் இந்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் பணம் போகாது. இது ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. ஆகவே, எந்த பேங்க் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும்.

எச்டிஎப்சி பேங்க் (HDFC Bank) கஸ்டமர்களுக்கு மட்டுமே யுபிஐ பரிவர்த்தனைகள் வழியாக பணத்தை அனுப்ப முடியாமல் இருக்கப் போகிறது. அதாவது, எச்டிஎப்சி பேங்க் ஆனது பராமரிப்பு பணிக்காக திட்டமிடப்பட்ட செயலற்ற நேரம் (Scheduled Downtime) என்பதை பின்பற்றுகிறது. இதை முன்கூட்டியே அதனுடைய கஸ்டமர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.

பேங்க் அக்கவுண்ட்.. Google Pay, PhonePe வழியாக ரூ.1,000 கூட போகாது!

அதன்படி டிசம்பர் 13ஆம் தேதியில் 4 மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்ட செயலற்ற நேரம் இருக்கப் போகிறது. ஆகவே, டிசம்பர் 13ஆம் தேதி நள்ளிரவு 2.30 மணி முதல் காலை 6.30 மணி வரையில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. ஆகவே, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) ஆப்களில் ரூ.1,000 கூட அனுப்ப முடியாது.

காலை 6.30 மணிக்கு மேல் வழக்கம்போல பணத்தை அனுப்பி கொள்ளலாம். இந்த யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) மட்டுமல்லாமல், மொபைல் பேங்கிங் மற்றும் நெட்பேங்கிங் வழியாகவும் பணத்தை அனுப்ப முடியாது. இது எச்டிஎப்சி பேங்கின் 2 அக்வுண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். அது எந்தெந்த அக்கவுண்ட்கள் என்பதை பார்ப்போம்.

யுபிஐ பரிவர்த்தனைகள்: எச்டிஎப்சி பேங்க் நடப்பு கணக்கு (HDFC Bank Current Account) மற்றும் எச்டிஎப்சி சேமிப்பு கணக்கு (HDFC Savings Accounts) ஆகியவற்றின் கஸ்டமர்கள் யுபிஐ ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. அதேபோல இந்த கஸ்டமர்களின் ரூபே கிரிடெட் கார்டுகளையும் (RuPay Credit Cards) பயன்படுத்த முடியாது.

மேலும், இந்த அக்கவுண்ட்களுடன் இணைக்கப்பட்ட எச்டிஎப்சி மொபைல் பேங்கிங் ஆப்களில் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாது. இது ஒட்டுமொத்த மூன்றாம் தர யுபிஐ ஆப்களுக்கும் பொருந்தும். ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களிலும் பணத்தை அனுப்ப முடியாது. தனிநபர்களுக்கு மட்டுமல்ல.

வணிகர்கள் வைத்து இருக்கும் எச்டிஎப்சி பேங்க் அக்கவுண்ட்டிலும் இந்த பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. யுபிஐ வழியாகவும், மொபைல் பேங்கிங் வழியாகவும் பணத்தை அனுப்ப முடியாது. ஆகவே, இது யுபிஐ சர்க்கிள் (UPI Circle) அம்சத்துக்கும் பொருந்தும். ஆன்லைன் பேமெண்ட்களில் பணத்தை அனுப்ப முடியாது. யுபிஐ சர்க்கிளில் ரூ.15,000 வரையில் மாதாந்திரம் அனுப்ப முடியும்.

இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்பில் ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே, எந்த பேங்க் கஸ்டமர்களும் பீம் ஆப் வைத்திருந்தால் போதும், யுபிஐ சர்க்கிள் வழியாக ரூ.15,000 வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். அதிகபட்சமாக 5 செகண்டரி பயனர்களுக்கு யுபிஐ சர்க்கிள் வழியாக பணத்தை அனுப்ப அனுமதி கொடுக்கலாம்.

இது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் கிடைக்காது. பார்சியல் டெலிகேஷன் மட்டுமே அந்த ஆப்களில் அமலுக்கு வந்துள்ளது. இந்த ரூ.15,000 தொகை ஃபுல் டெலிகேஷனாக இருக்கிறது. இதைவிட குறைவான தொகையை யுபிஐ கஸ்டமர்கள் வைத்து கொள்ளலாம். மாதத்துக்கு ரூ.15,000 வரையில் யுபிஐ சர்க்கிளில் பயன்படுத்த அனுமதி கொடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Transactions 4 Hours Downtime Unable To Send Even Rs 1000 on December 13 For HDFC Bank Customers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X