Home
News

புது ரூல்ஸ்.. ஜூன்.16 அமல்.. 100 ரூபாயோ.. 500 ரூபாயோ.. GPay, PhonePe, Paytm-க்கு அமல்.. UPI-க்கு வந்த மாற்றம்!

ஒட்டுமொத்த யுபிஐ ஆப்கள் மூலமும் பணப்பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு என்பிசிஐ (NPCI) என்றழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது இன்று முதல் புது விதிகளை அமல்படுத்தி இருக்கிறது. இனிமேல் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து யுபிஐ மூலம் அனுப்பப்படும் பணம் ரூ.100ஆக இருந்தாலும் சரி, ரூ.500ஆக இருந்தாலும் சரி இந்த புது விதிகள் பின்பற்றப்படும். ஆனால், இது கஸ்டமர்களுக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்தாது. இதுகுறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற ஒட்டுமொத்த பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்கள் மட்டுமல்லாமல், பணத்தை அனுப்பும் பேங்குகள் மற்றும் பணத்தை பெறும் பேங்குகளுக்கும் இந்த யுபிஐ பரிவர்த்தனை விதிகள் பொருந்தும். யுபிஐ டிரான்ஸ்சாக்சன் ரெஸ்பான்ஸ் டைம் (UPI Transactions Response Time) ஆனது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. ஜூன்.16 அமல்.. 100 ரூபாயோ.. 500 ரூபாயோ.. GPay, PhonePe!

இதனால், முன்பு இருந்ததைவிட கூடுதல் வேகத்துடன் உங்களது யுபிஐ பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்படும். அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ ஆப்கள் மூலம் கஸ்டமர்கள் பரிவர்த்தனை செய்யும்போது, அந்த பரிவர்த்தனையை எவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று என்பிசிஐ (NPCI) டைம் லிமிட்டை (Time Limit) வைத்திருக்கிறது.

ஜூன் 16ஆம் தேதிக்கு முன்பு வரையில், ரெக்கொஸ்ட் பே (பணத்தை அனுப்புதல்), ரென்ஸ்பான்ஸ் பே (பணத்தை பெறுதல்) ஆகியவற்றை பேங்குகள் இருந்து யுபிஐ ஆப்கள் மூலம் செய்து முடிப்பதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இந்த டைம், இப்போது 15 நொடிகளுக்கு குறைக்கப்பட்டுவிட்டது. ஆகவே, மேலும் வேகமாக ஒரு யுபிஐ பரிவர்த்தனை செய்து முடிக்கப்படும்.

அதே நேரத்தில் பணத்தை பெற்ற பிறகோ அல்லது அனுப்பிய பிறகோ யுபிஐ ஆப்கள் மூலம் அந்த பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் செக் (Transaction Status Check) செய்யவதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இன்று முதல் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல பணத்தை அனுப்பிய பிறகு அது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ரிவர்ஸ் செய்யப்பட்டால்,

புது ரூல்ஸ்.. ஜூன்.16 அமல்.. 100 ரூபாயோ.. 500 ரூபாயோ.. GPay, PhonePe!

அந்த தொகை மீண்டும் உங்களுக்கு வந்து சேருவதற்கான ரெஸ்பான்ஸ் டைம் 30 நொடிகளாக இருந்தது. இந்த டைமும் இப்போது 10 நொடிகளாக குறைப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரிவர்ஸ் செய்யப்பட்ட தொகை அதிவேகத்தில் உங்களது அக்கவுண்ட்டுக்கு திருப்பி அனுப்பப்படும். பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர் ஆப்கள் மூலம் முகவரி சரிபார்ப்பு (Validate Address) குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, யுபிஐ ஆப்கள் மூலம் மொபைல் நம்பர் அல்லாமல், அக்கவுண்ட் நம்பர், ஐஎப்எஸ்சி கோட் போன்றவற்றின் மூலம் பணத்தை அனுப்பும்போது, அல்லது கலெக்ட் செய்யும்போதோ அதை சரிபார்ப்பு செய்ய எடுத்து கொள்ளப்படும் நேரமும் 15 நொடிகளில் இருந்து 10 நொடிகளாக குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெஸ்பான்ஸ் டைம் விதிகளுடன் இனிமேல் பரிவர்த்தனை நடக்கும்.

இதேபோல ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் நேரடியான மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன. இதுவும் லிமிட் அடிப்படையில் வர இருக்கிறது. பேலன்ஸ் சரிபார்ப்பு ஆனது 24 மணி நேரத்துக்கு 50 முறையாக மாற்றப்படுகிறது. ஆகவே, ஒரு யுபிஐ ஆப் மூலம் ஒரு நாளுக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும்.

பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் சரிபார்ப்பு ஆனது 2 மணி நேரத்துக்கு 3 முறை என்று வர இருக்கிறது. குறைந்தது 90 நொடிகள் இடைவெளியில் சரிபார்ப்பு செய்யலாம். இப்படி ஏகப்பட்ட விதிகள் ஆகஸ்ட் மாதம் வர இருக்கிறது. இதனால், யுபிஐ பேமெண்ட்களின்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறையும். அதேபோல எந்த தடையும் இல்லாமல், பரிவர்த்தனைகளை செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Transaction Rules Came into Effect on June 16 2025 Response Time Reduction For UPI Payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X