UPI.. ரூ.1000 லிமிட்.. Google Pay, PhonePe, Paytm-க்கு இதுதான் லிமிட்.. 24 மணி நேரத்துல ரூ.5 லட்சம் வரை.. ஆனா?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்தி பணப்பரிவத்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு தினசரி லிமிட் இருக்கிறது. ஆகவே, ஒரு நாளுக்கான யுபிஐ பரிவர்த்தனை லிமிட் (UPI Transaction Limits) எவ்வளவு? யுபிஐ 123பே லிமிட் (UPI 123Pay Limits) எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் யுபிஐ பரிவர்த்தனைகள் வந்துவிட்டன. ஆனால், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆகவே, இதற்கு லிமிட்டும் இருக்கிறது. 24 மணி நேரத்தில் எவ்வளவு பணத்தை அனுப்பி கொள்ளலாம் என்பதற்கும், எத்தனை முறை செய்யலாம் என்பதற்கும் விளக்கம் இருக்கிறது.

அதே நேரத்தில் மருத்துவமனையில் செலுத்தும் கட்டணம், பள்ளியில் செலுத்தும் கட்டணம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக லிமிட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. முதலில் ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைக்கும் இருக்கும் லிமிட்டில் இருந்து பார்க்கலாம். யுபிஐ ஆப்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளை இரண்டாக பிரித்து கொள்ள முடியும்.
பர்சன்-டூ-பர்சன் (Person-to-person) பரிவர்த்தனைகள் மற்றும் பர்சன்-டூ-மெர்ச்சன்ட் (Person-to-Merchant) பரிவர்த்தனைகள் என்று பிரிக்கலாம். பர்சன்-டூ-பர்சன் பரிவர்த்தனைகளானது ஒரு தனி நபர் மற்றொரு தனிநபருக்கு பணத்தை அனுப்புவதாகும். ஆனால், பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளானது ஒரு தனிநபரிடம் இருந்து வியாபாரிகளுக்கு பணத்தை அனுப்புவதாகும்.
இந்த பரிவர்த்தனைகளில் தனிநபர்களிடையே செய்யப்பட்டும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த லிமிட்டுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளுக்கும் இதே ரூ.1 லட்சம் பொருந்தும்.
ஆனால், இதே பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளில் சில பரிவர்த்தனைகளுக்கு மட்டும் கூடுதல் லிமிட் கொடுக்கப்படும். அதாவது, மருத்துவமனையில் செலுத்தும் கட்டணம், பள்ளி அல்லது கல்லூரி உள்ளிட்ட கல்வி சார்ந்த கட்டணம் செலுத்தும்போக ரூ.1 லட்சத்துக்கும் மேல் அனுப்பி கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் பரிமாற்றம் செய்யலாம்.
பங்கு சந்தையில் முதலீடு செய்தால், ஒரு பரிவர்த்தனையில் ரூ.5 லட்சத்தை செலுத்தலாம். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை செலுத்தும்போது, யுபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனையில் ரூ.5 லட்சத்தை அனுப்பி கொள்ளலாம்.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அரசின் டெண்டர்களை எடுப்பது, அரசு இ-சந்தை கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்டவற்றுக்கு யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சத்தை அனுப்பி கொள்ளலாம். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் அனுப்பி கொள்ளலாம்.
டிராவலுக்காக செய்யப்படும் பரிவர்த்தனைகளில் டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றில் பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளை செய்தால் ஒரு பரிவர்த்தனைக்குக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சத்தை அனுப்பலாம். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் பரிமாற்றம் செய்யலாம். யுபிஐ லைட்டில் 1 பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.1,000 அனுப்பி கொள்ளலாம்.
அதிகபட்சமாக ரூ.5,000 பேலன்ஸ் வைத்து கொள்ளலாம். பீச்சர் போன்களில் பயன்படுத்தப்படும் யுபிஐ 123பே பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்ச வரம்பு ரூ.10,000ஆக இருக்கிறது. இந்த வரம்புகளின்படியே கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ ஆப்களில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications