Google Pay, PhonePe யூசர்களுக்கு பகீர் கட்டுப்பாடு.. ஒரு நாளில் 10 முறை தான் ஸ்கேனிங்.. மீறினால் என்னவாகும்?
இந்தியாவில் பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay), அமேசான் பே (Amazon Pay), போன் பே (PhonePe) போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்களுக்கு புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட முறைக்கு மேல் ஸ்கேனிங் செய்ய முடியாது.
மீறினால், என்னவாகும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் யுபிஐ பேமெண்ட் (UPI Payment) சேவையானது, அதீத வளர்ச்சியை கண்டுள்ளது. முக்கிய நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரையில் யுபிஐ பேமெண்ட் சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இப்போது, சாலையோர கடைகளுக்கு போனாலும் சரி, மிகப்பெரிய வணிக வளாகங்களுக்கு போனாலும் சரி யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக செய்துகொள்ள முடிகிறது.

மக்களும் ஏடிஎம் (ATM) எங்கே என்று தேட வேண்டியது கிடையாது, சில்லறைக்கா தவிக்க வேண்டியது கிடையாது என்று யுபிஐ பேமெண்ட் வசதியை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் அதுதொடர்பான ஆப்களின் வளர்ச்சியும் மக்களிடையே அதிகரித்துவிட்டது. அதன்படி கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்கள் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. இந்த ஆப்களை கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால், அவ்வப்போது அவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்திய தேசிய கொAxisடுப்பனவு கழகம் (NPCI) இந்த கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), எச்டிஎப்சி (HDFC), ஆக்ஸிஸ் (Axis) உள்ளிட்ட நாட்டின் முக்கிய தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற ஆப்களின் கியூஆர் கோட் ஸ்கேனிங் முறைக்கு ஆப்பு வைக்கும்படி இருக்கிறது.
புதிய கட்டுப்பாடுகள் என்ன?: இனிமேல் ஒரு நாளுக்கு ஒரு வாடிக்கையாளர் அதிகப்பட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தொகை அந்தந்த வங்கிகளில் வாடிக்கையார்களின் லிமிட்டை பொறுத்து மாறுபடும். அதேபோல 24 மணிநேரத்திற்கு (ஒரு நாள்) அதிகப்பட்சமாக 20 முறை மட்டுமே யுபிஐ பண பரிமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு மேல் செய்ய வேண்டுமானால், அதாவது 21ஆவது முறை செய்ய வேண்டும் என்றால், அடுத்த நாளே செய்ய முடியும்.
குறிப்பாக, யுபிஐ பரிவர்த்தனைகள் செய்ய மக்கள் பயன்படுத்தும் கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் ஆகிய ஆப்களில், இனிமேல் ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 10 பரிமாற்றங்கள் மட்டுமே செய்ய வேண்டும். இதில் ஸ்கேனிங் பரிவர்த்தனையும் அடங்கும். இதற்கு ரூ.1 லட்சமே அதிகபட்ச லிமிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் யுபிஐ வாடிக்கையாளர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதுகுறித்து முழு விவரம் சில நாட்களில் தெரியவரும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications