Home
News

புது UPI ரூல்ஸ்.. செப்.15 முதல் அமல்.. GPay, PhonePe, Paytm-க்கு இனிமே ரூ.2 லட்சம் இல்லை.. என்னென்ன மாறுது?

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்கில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆனது குறிப்பிட்ட வகைகளுக்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்புகளை (UPI Transactions Limits) அதிகரித்துள்ளது. இந்த புதிய மாற்றங்கள் வருகிற செப்டம்பர் 15ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வருகின்றன.

ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் இந்த புதிய வரம்புகள் பொருந்தும். ஆகவே, ஜிபோ, போன்பே, பேடிஎம், பீம் அல்லது எந்தவொரு யுபிஐ ஆப்கள் மூலமும் செய்யப்படும் பரிவர்த்தனைகள் இந்த புதிய வரம்புகளின்படியே செய்யப்பட இருக்கின்றன. தனிநபர்களின் பரிவர்த்தனைகளுக்கு இந்த புதிய வரம்புகள் இருக்காது. அதிகரிக்கப்பட்ட வரம்புகளின் விவரங்கள் இதோ.

புது UPI ரூல்ஸ்.. செப்.15 முதல் அமல்.. GPay, PhonePe, Paytm-க்கு இனி?

மூலதனச் சந்தை (Capital Market):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் வரம்பு இருக்கிறது. மூலதனச் சந்தையில் முதலீடு செய்தல், புதிய பங்குகளுக்கு விண்ணப்பித்தலுக்கு பொருந்தும்.

காப்பீடு (Insurance):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் வரம்பு இருக்கிறது. கார்கள், பைக்குகள் அல்லது லைப் இன்சூரன்ஸ் போன்றவற்றுக்கு பொருந்தும்.

அரசு இ-சந்தை (Government e-Market):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் வரம்பு இருக்கிறது. டெண்டர் எடுத்தல், அரசு சேவைக்காக பணம் செலுத்துதல் உள்ளிட்டவைக்கு பொருந்தும்.

பயணம் (Travel):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் வரம்பு இருக்கிறது. டிக்கெட் புக்கிங், ஹோட்டல் புக்கிங் போன்றவற்றுக்கு இது பொருந்தும்.

கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் (Credit Card Bill Payments):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.6 லட்சம் வரம்பு இருக்கிறது. வழக்கம்போல கிரெடிட் கார்டு பில்களை செலுத்தலில் பொருந்தும்.

வசூல்கள் (Collections):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.10 லட்சம் வரம்பு இருக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வசூல் போன்றவற்றுத்து இந்த வரம்புகள் பொருந்தும்.

வியாபாரம்/வணிகர் (Business/Merchant):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு. 24 மணி நேரத்துக்கு வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. வியாபாரம் அல்லது வணிகம் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.

நகைகள் (Jewellery):
ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணிநேரத்திற்கு ரூ.6 லட்சம் வரம்பு இருக்கிறது. தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட ஆபரணங்கள் வாங்க பொருந்தும்.

டிஜிட்டல் கணக்கு தொடக்கம் (Digital Account Opening):
கால வைப்பு நிதிக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. அதுவே ஆரம்ப நிதிக்கு ரூ.2 லட்சம் வரம்பு இருக்கிறது. டிஜிட்டல் கணக்கு தொடங்கும்போது, டெபாசிட் செய்ய பொருந்தும்.

இந்த புதிய வரம்புகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல் செய்யப்படுகின்றன. ஆகவே, அந்த தேதியில் இருந்து உங்களது பேங்குகள் மற்றும் யுபிஐ ஆப்கள் மூலம் இந்த புதிய வரம்புகளின்படி பரிவர்த்தனைகளுக்கு அனுமதி கொடுக்கப்படும். 24 மணி நேரத்துக்கு விதிக்கப்பட்ட வரம்புகளே அதிகபட்சமாகும். அதற்கு மேல் பணத்தை அனுப்ப முடியாது.

அதேபோல புதிய வரம்புகள் வணிக ரீதியான முதலீடு மற்றும் சேமிப்பு போன்றவற்றுக்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே, நீங்கள் தனிநபருக்கு பணத்தை அனுப்பினாலோ அல்லது வாங்கினாலோ ரூ.1 லட்சத்தில் மட்டுமே பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும். இது வழக்கம்போல மாற்றம் இல்லாமல் இருக்கிறது.

இது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்வதை எளிதாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரத்திய் டிஜிட்டல் பரிவர்த்தனை மற்றும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்னும் என்பிசிஐ ஆனது அதிக முக்கியத்துவம் கொடுப்பதையும் காட்டி இருக்கிறது.

Best Mobiles in India

English summary
UPI Transaction Limit Increased NPCI Raises Per Transaction Cap to Rs 5 Lakh for Key Categories Here Full List And Limits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X