Home
News

புதிய விதிகள்.. ரூ.2 லட்சம் மேல Gold.. இனி இதுதான் புதிய வரம்பு.. விக்குற விலைக்கு UPI-க்கு கும்பிடுதான்!

யுபிஐ (UPI) வரம்பின் அதிகரிப்பால் தங்கம் வாங்குவோருக்கு புதிய வரம்புகள் வந்துவிட்டன. தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், அதை வாங்குவதற்கான வரம்புகளை தெரிந்து வாங்குங்கள். ஒரு நாளுக்கு எவ்வளவு தங்கம் வாங்லாம் (Gold Purchase), ஒரு பரிவர்த்தனையில் எவ்வளவு தங்கம் வாங்கலாம் என்று வரம்புகள் இருக்கின்றன. இதில் டிஜிட்டல் தங்கமும் (Digital Gold) அடங்கும்.

என்பிசிஐ (NPCI) ஆனது யுபிஐ மூலம் தங்கம் வாங்கும் வரம்புகளை அதிகரித்துவிட்டது. ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்து தங்கத்தை வாங்கி கொள்ளலாம். அதேபோல ஒரு நாளுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சத்துக்கு தங்கத்தை வாங்கி கொள்ளலாம். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த வரம்பு பொருந்துகிறது.

புதிய விதிகள்.. ரூ.2 லட்சம் மேல Gold.. இனி இதுதான் புதிய வரம்பு.. விக்

இதில் தங்கம் மட்டுமல்லாமல், வைரம், வெள்ளி போன்ற ஆபரணங்களை (Jewellery) வாங்கவும், இந்த புதிய வரம்பு பொருந்துகிறது. இந்த வரம்பின்படி டிஜிட்டல் கோல்டு வாங்கி கொள்ளலாம். அதேபோல தங்கத்தை நேரடியாக வாங்கும்போதும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஆனால், இது அந்தந்த யுபிஐ ஆப்களுக்கு இருக்கும் வரம்பின்படியும் இருக்கும்.

தங்கம் விலை அதிகரித்து வருவதால், அதில் முதலீடு செய்ய வங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு ஏற்ப தங்கம் வாங்குவதையும் என்பிசிஐ ஆனது எளிதாக்கி வருகிறது. இதனாலேயே யுபிஐ மூலம் தங்கம் வாங்கும் வரம்பை அதிகரித்துள்ளது. இந்த புதிய வரம்புகள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

இதனால், கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்கள் மூலமும் ஒரு நாளுக்கு ரூ.6 லட்சம் வரையில் தங்கத்தை வாங்கி கொள்ளலாம். ஒரே பரிவர்த்தனையில் ரூ.2 லட்சம் வரையில் தங்கம் வாங்கலாம். யுபிஐ ஆப்களில் டிஜிட்டல் கோல்டு கிடைக்கின்றன. இதனால், தங்கம் வாங்குதல் அதிகரித்துள்ளது. அதேபோல தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது.

கூகுள் பே (Google Pay) ஆப் மூலமாக அதிகபட்சம் ரூ.50,000 வரையில் மட்டுமே டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்க முடியும். கோல்டு லாக்கர் (Gold Locker) மூலம் இந்த சேவை கொடுக்கப்படுகிறது. உங்களிடம் ரூ.10 இருந்தால் கூட போதும் டிஜிட்டல் கோல்டு வாங்கி கொள்ளலாம். அதேபோல ரூ.100, ரூ.200 போன்ற இருக்கும் பணத்துக்கு ஏற்ப வாங்கி கொள்ளலாம்.

அதேபோல போன்பே (PhonePe) ஆப் மூலமும் டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கி கொள்ளலாம். ஆனால், இதில் ரூ.2 லட்சம் வரையில் தங்கம் வாங்கி கொள்ள முடியும். ஆகவே, இது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (National Payments Corporation of India) புதிய யுபிஐ விதிகளின்படி டிஜிட்டல் தங்கத்தை வாங்க அனுமதிக்கிறது.

மேலும், பேடிஎம் ஆப் மூலமும் ரூ.2 லட்சம் வரையில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையில் இந்த டிஜிட்டல் தங்கம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதற்கும் ஜிஎஸ்டி (GST) போன்ற விதிகள் இருக்கும். ஆனால், கார்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி வாங்கும்போது ஏற்படும் கூடுதல் சார்ஜ்கள் இல்லாமல் வாங்கலாம்.

இதுபோல யுபிஐ ஆப்கள் மட்டுமல்லாமல், பங்கு சந்தை சேவையை வழங்கும் ஆப்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும்போதும், அதில் யுபிஐ ஆப்களில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்யும்போது நேரடியாக ரூ.2 லட்சத்துக்கு டிஜிட்டல் தங்கத்தை வாங்கி கொள்ளலாம். இப்போது, ஒட்டுமொத்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் புதிய வரம்புகள் வந்துவிட்டன.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, இதேபோல பல்வேறு விதிகளை யுபிஐ பரிவர்த்தனைகளில் கொண்டுவருகிறது. அக்டோபர் 1ஆம் தேதி மற்றும் நவம்பர் 3ஆம் தேதிகளிலும் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதில் யுபிஐ ஆப்களுக்கு பல்வேறு மாற்றங்கள் இருக்கப்போகின்றன.

Best Mobiles in India

English summary
UPI Transaction Limit For Gold Purchase Daily Gold Purchase Limit to Per Transaction Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X