Home
News

UPI பரிவர்த்தனை லிமிட் மாறுது.. உடனே கவனியுங்க.. இனி 2 லட்சம் இல்லை.. அதைவிட ஜாஸ்தி.. SEBI-ன் புது ரூல்ஸ்..

யுபிஐ (UPI) என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) சேவையை பயன்படுத்தும் பயனர்களுக்கு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. குறிப்பாக, யுபிஐ மூலம் முதலீடு செய்யும் நபர்கள் இந்த செய்தியை கட்டாயம் முழுமையாக படிக்க வேண்டும். UPI மூலம் மேற்கொள்ளப்படும் மூலதன சந்தை பரிவர்த்தனைகளுக்கான, பரிவர்த்தனை வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்க SEBI முன்மொழிந்துள்ளது. இந்த புதிய மாற்றம் UPI பரிவர்த்தனை செயல்முறையை மிகவும் சீராக மாற்றும் என்று SEBI கூறியுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

SEBI என்று சுருக்கமாக அழைக்கப்படும் சந்தை ஒழுங்குமுறை நிறுவனம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Market regulator Securities and Exchange Board of India) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின் படி, கேப்பிட்டல் மார்க்கெட்டில் முதலீடு (capital market investment transactions) செய்ய, யுபிஐ சேவை (UPI service) மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனை வரம்பை (UPI for capital market transactions limit) SEBI அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

UPI பரிவர்த்தனை லிமிட் மாறுது.. உடனே கவனியுங்க.. இனி 2 லட்சம் இல்லை..

UPI பரிவர்த்தனை லிமிட் மாறுது.. உடனே கவனியுங்க.. இனி 2 லட்சம் இல்லை.. 5 லட்சமாக உயர்த்த ஆலோசனை:

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைப்படி, UPI மூலம் மேற்கொள்ளப்படும் மூலதன சந்தை பரிவர்த்தனைகளுக்கான, பரிவர்த்தனை வரம்பு ரூ. 2,00,000 ஆக இருக்கிறது (current UPI transaction limit for capital investment) என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த 2 லட்சம் பரிவர்த்தனை வரம்பை SEBI ரூ. 5,00,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பெரியளவில் பயன்பெறுவார்கள் என்று SEBI நம்புகிறது.

இருப்பினும், இந்த மாற்றம் தற்போது SEBI இன் ஆலோசனைக் கட்டுரையின் ஒரு பகுதியாக மட்டுமே காணப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) NPCI உடன் இணைந்து, இந்த விதிமுறையை கூடுதல் மதிப்பீடு செய்யப்படும். இதன் பிறகு இவை நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் டிஜிட்டல் கட்டணத்திற்கான பாதுகாப்பான (digital payment safety) மற்றும் திறமையான வழிமுறைகள் ஆகியவை இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று SEBI குறிப்பிட்டுள்ளது.

SEBI இந்த முடிவை எடுப்பதற்கு முன் என்ன ஆய்வை மேற்கொண்டது?

இந்த முடிவை எடுப்பதற்கு முன், SEBI சிறந்த ப்ரோக்கர்களுடனான வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வில் 92.9% பரிவர்த்தனைகள் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அதே நேரத்தில், ரூ. 1 லட்சத்திற்கும் மற்றும் ரூ. 2 லட்சத்திற்கும் இடையிலான பரிவர்த்தனைகள் 3.9% சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர, ரூ. 2 லட்சத்திற்கும் மற்றும் ரூ. 3 லட்சத்திற்கும் இடையிலான பரிவர்த்தனைகள் 1.3% ஆக இருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளுக்கு பிறகு தான் சந்தை ஒழுங்குமுறை நிறுவனம் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (Market regulator Securities and Exchange Board of India), UPI மூலம் மேற்கொள்ளப்படும் மூலதன சந்தை பரிவர்த்தனைகளுக்கான, பரிவர்த்தனை வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் பரிவர்த்தனை செயல்முறையை மிகவும் சீராக மாற்றும் என்று SEBI நம்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Transaction Limit Change From Rs 2 Lakh To Rs 5 Lakh Expected As SEBI Planning to Increase Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X