Home
News

ATM கார்டுக்கு கும்பிடு.. UPI அக்கவுண்ட் இருக்குல.. இனிமே பணம் அனுப்ப அதுதான்.. யுபிஐ பரிவர்த்தனையில் மாற்றம்!

யுபிஐ (UPI) பரிவர்த்தனை லிமிட் தொடர்பான விதிகள் நவம்பர் 1ஆம் தேதியில் அமலுக்கு வந்த நேரத்தில் டெபிட் கார்டு வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களின் வயிற்றில் புளியை கரைக்கும்படி மற்றொரு மிகப்பெரிய மாற்றம் நடந்து முடிந்து இருக்கிறது. ஐஎம்பிஎஸ் (IMPS), ஏஇபிஎஸ் (AePS) போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளிலும் இதில் அடங்குகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) ஆனது இதுகுறித்து விளக்கமளித்து இருக்கிறது.

ATM கார்டுக்கு கும்பிடு.. UPI அக்கவுண்ட் இருக்குல.. இனிமே பணம் அனுப்ப?

பணத்தை கையில் வைத்துக்கொண்டு சுற்றிய காலம் மாறி, ஏடிஎம் கார்டு (ATM Card) வைத்து கொண்டிருந்த காலத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்போது அதற்கும் வேலை இல்லாமல் ஆக்கும்படி யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் - யுபிஐ (Unified Payments Interface - UPI) வந்துவிட்டது. அக்டோபரில் டெபிட் கார்ட் கதையை முடிக்கும்படி சம்பவம் செய்துள்ளது.

ATM கார்டுக்கு கும்பிடு.. UPI அக்கவுண்ட் இருக்குல.. இனிமே பணம் அனுப்ப?

சொல்லப்போனால், பெட்டிக்கடைகளில் கூட யுபிஐ இருக்கிறது. 2 ரூபாய்க்கு ஷாம்பு வாங்கினாலும், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால், யுபிஐ விதிகளில் அடிக்கடி புது விதிகளும் வருகின்றன. யுபிஐ ஆப்களை பயன்படுத்தும் பேங்க் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

இதனால், ஏடிஎம் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் அரிதாகி வருகின்றன. அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலமாக 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ ஆப்கள் மூலம் நடந்த இந்த பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 23.5 லட்சம் கோடியை எட்டி இருக்கிறது. இது 10 சதவீதம் அதிகமாகும்.

அதாவது, செப்டம்பர் மாதத்தில் நடந்த யுபிஐ பரிவர்த்தனைகளை (UPI Transactions) விட அதிகமாக நடந்துள்ளது. அதே நேரத்தில் 14 சதவீதம் தொகையின் மதிப்பும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் அக்டோபரில் மாதத்தில் ஒரு நாளுக்கு நடந்த சராசரியாக நடந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 535 மில்லியனை தாண்டி இருக்கிறது. இந்த தொகையின் மதிப்பு ரூ.75,801 கோடியாகும்.

இதேபோல ஐஎம்பிஎஸ், ஏஇபிஎஸ் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் அதிகரித்து இருக்கின்றன. இதில் ஆதார் எனபில்ட் பேமெண்ட் சிஸ்டம் (Aadhaar Enabled Payment System - AePS) பரிவர்த்தனைகள் ஆனது 26 சதவீதம் அதிகரித்து இருக்கின்றன. இப்படி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. ஆனால், ஏடிஎம் பரிவர்த்தனைகள் கவலைக்கிடமாக இருக்கிறது.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) ஆனது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்ட பட்டியலின்படி டெபிட் கார்டு பரிவர்த்தனைகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.43,350 கோடியாக இருந்தன. ஆனால், செப்டம்பர் மாதத்தில் இந்த மதிப்பு ரூ.39,920 கோடியாக குறைந்துவிட்டன. மறுபுறம் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

இதனால், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளின் மதிப்பு, செப்டம்பர் மாதத்தில் ரூ.1.76 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஆகவே, டெபிட் கார்டுக்கான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பேங்க் கஸ்டமர்கள் மாறிவரும் நேரத்தில், டெபிட் கார்டு சேவை இனிமேல் ஆடம்பரமாகிவிடும்.

இல்லையென்றால், கிரெடிட் கார்டு சேவைகளுடன் டெபிட் கார்டு சேவையும் இணைந்துவிடும். முன்னதாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா யுபிஐ லைட் சேவையில் ரூ.500ஆக இருந்த பரிவர்த்தனை வரம்பை ரூ.1,000 ஆக உயர்த்தியது. அதேபோல ரூ.2,000ஆக இருந்த யுபிஐ லைட் வாலட் (UPI Lite Wallet) லிமிட்டும் ரூ.5,000 ஆக உயர்த்தியது. நவம்பர் 1ஆம் தேதி முதல் இது அமலாகியது.

Best Mobiles in India

English summary
UPI Transaction Changes in October 2024 With New Hike Since 2016 ATM Card Transactions Down
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X