Home
News

புது ரூல்ஸ்.. ஜூன் 1 முதல் அமல்.. Gas சிலிண்டர் புக்கிங், UPI பணம் அனுப்ப வருது மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க!

ஜூன் 1ஆம் தேதி முதல் உங்கள் பாக்கெட்டையும், சமையலறை செலவுகளையும் நேரடியாக பாதிக்கக்கூடிய சில முக்கிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான யுபிஐ (UPI) மற்றும் சமையல் எரிவாயுவான எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) ஆகியவற்றில் வரும் இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்.

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை பயன்படுத்துபவர்கள் இனி கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டும். பயோமெட்ரிக் மற்றும் டு-பேக்டர் ஆதன்டிகேஷன் (Two-Factor Authentication) வர இருக்கிறது. இனி பெரிய தொகையை (High-value) பரிவர்த்தனை செய்யும்போது, வெறும் 4 அல்லது 6 இலக்க யுபிஐ பின் (UPi PIN) நம்பர் மட்டும் போதாது.

புது ரூல்ஸ்.. ஜூன் 1 முதல் அமல்.. Gas சிலிண்டர் புக்கிங், UPI பணம்!

கூடவே கைரேகை (Fingerprint), முக அங்கீகாரம் (FaceID) அல்லது மொபைல் மூலமான டு-பேக்டர் ஆதன்டிகேஷன் (2FA) போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயமாக்கப்படுகின்றன.
அனுப்புவதற்கு முன்பே பெயர் சரிபார்ப்பு (Pre-Transaction Name Verification) செய்யப்பட இருக்கிறது. தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் அனுப்புவதைத் தடுக்க இது வருகிறது.

அதாவது, நீங்கள் யாருக்குப் பணம் அனுப்புகிறீர்களோ, அவருடைய வங்கிக் கணக்கில் உள்ள அதிகாரப்பூர்வ முழுப் பெயர் (Verified Name) பணத்தை அனுப்பும் முன்பே உங்கள் மொபைல் திரையில் தெளிவாகக் காட்டப்படும். ஏடிஎம் (ATM) கார்டு இல்லாத பணப் பரிவர்த்தனைக்கான வரம்புகள் வருகின்றன. கார்டு இல்லாமல் யுபிஐ மூலமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அமலாகிறது.

இனி உங்களுடைய மாதாந்திர இலவச ஏடிஎம் வித்ராயல் வரம்பிற்குள் (Monthly Free Quotas) யுபிஐ வழியான ஏடிஎம் பரிவர்த்தனைகளும் கணக்கிடப்படும். இந்த வரம்பைத் தாண்டினால், கார்டுகளைப் போலவே இதற்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும். இதுபோக எல்பிஜி சமையல் சிலிண்டருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக, எல்பிஜி சிலிண்டர் பயன்பாட்டைக் குறைத்து, குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை அதிகரிக்க அரசு இந்த கடுமையான விதிகளை அமல்படுத்துகிறது. உங்கள் வீட்டிற்குப் புதிய பிஎன்எஜி (குழாய் எரிவாயு) இணைப்பு கிடைத்துவிட்டால், அடுத்த 30 நாட்களுக்குள் உங்களிடம் இருக்கும் பழைய எல்பிஜி (LPG) இணைப்பைத் துண்டித்து சிலிண்டரை ஒப்படைக்க வேண்டும்.

புதிய சிலிண்டர் வாங்குவதற்குத் தடையும் இருக்கிறது. அதாவது, ஏற்கனவே வீட்டில் குழாய் எரிவாயு (PNG) இணைப்பு வைத்திருப்பவர்கள், புதிதாக எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பைப் பெறவோ அல்லது ரீஃபில் செய்யவோ முடியாது. சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி அதிகரிப்பு (Refill Lock-in) செய்யப்பட்டு உள்ளது.

ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, அடுத்த சிலிண்டர் புக் செய்வதற்கான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் 25 நாட்களுக்குப் பிறகும், கிராமப்புறங்களில் உள்ளவர்கள் 45 நாட்களுக்குப் பிறகும் தான் அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியும். ஒரே வீட்டிற்கு ஒரே ஒரு கனெக்சன் (One House One Connection) மட்டும் கிடைக்கும்.

ஒரு வீட்டில் வசிப்பவர்கள் தங்களின் பெயர்களில் பல கேஸ் கனெக்ஷன்களை பதுக்கி வைப்பதைத் தடுக்க, 'ஒரு வீட்டிற்கு ஒரு இணைப்பு' என்ற விதிமுறை மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட உள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை உயர்வால் கேஸ் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கைகள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இதேபோல பான் கார்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரூ.50,000 மேல் ரொக்கமாக பேங்கில் டெபாசிட் செய்தால், பான் விவரங்கள் கேட்கப்பட்டன. இனிமேல் ரூ.10 லட்சம் வரையில் பான் கார்டு விவரங்கள் இல்லாமலேயே பணத்தை டெபாசிட் செய்யலாம். அதேபோல பணத்தை எடுக்கவும் முடியும். இந்த விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டன.

Best Mobiles in India

English summary
UPI Transaction And LPG Gas Cylinder Rules Changed From June 1 2026 Now What Customer Needs To Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X