Home
News

போனில் நெட் இல்லாமலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.. RBI-ன் புதிய வசதி.. இதோ முழு விவரம்..

இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ (UPI) செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக இந்த யுபிஐ செயலிகள் மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் இந்த யுபிஐ வசதியை நாடு முழுவதும் அதிக மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஆனாலும் சில நேரங்களில் நம் மொபைலில் நெட் இல்லாமல் போனாலோ, சர்வர் பிரச்சனை ஏற்பட்டாலோ, டவர் சரியாக கிடைக்காததால் நெட் ஸ்லோவாக இருந்தாலோ UPI பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக இதுபோன்ற பிரச்சனைகளில் பணப் பரிவர்த்தனை சரியாக நடக்காமல் போகலாம்.

போனில் நெட் இல்லாமலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.. RBI-ன் புதிய வசதி!

இந்நிலையில் இதுபோன்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தவிர்க்கவே தற்போது RBI புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. அதாவது நெட் இல்லாமலே இனி UPI கட்டணம் செலுத்தலாம். அதற்கான வசதியை RBI அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி NFC வசதியுள்ள ஸ்மார்ட்போன் மூலம், இணையதள வசதி இல்லாமலேயே, 'UPI Tap & Pay' வழியாக பணம் செலுத்தும் புதிய வசதியை RBI அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களின் மொபைலில் இன்டர்நெட் டேட்டா ஆன் செய்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

UPI Tap & Pay என்பது ஸ்மார்ட்போனில் உள்ள NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்த உதவும் நவீன வசதியாகும். இதன் மூலம் கடைகளில் உள்ள POS இயந்திரத்தின் அருகில் NFC வசதி கொண்ட மொபைல் போனை வைத்தவுடன், போனுக்கும் இயந்திரத்திற்கும் இடையே வயர்லெஸ் இணைப்பு ஏற்பட்டு, UPI வழியாக எளிதாகப் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.

குறிப்பாக இந்த முறையைப் பயன்படுத்தும்போது உங்களது போனில் நெட் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்டணம் செலுத்த கடைக்காரர்களிடம் இருக்கும் இயந்திரத்தின் இணைப்பே போதுமானது. மேலும் நம் போனை POS இயந்திரத்தின் டேப் செய்தாலே போதும், கட்டணம் செலுத்திவிடலாம்.

அதுவும் இந்த வசதியை மேலும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், PIN இல்லாமல் மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகளுக்கான பண வரம்பையும் RBI உயர்த்தியுள்ளது. இதனால், குறிப்பிட்ட வரம்புக்குள் PIN உள்ளிடாமல் விரைவாக பணம் செலுத்தும் வசதி பயனர்களுக்குக் கிடைக்கிறது.

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.5,000 அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், UPI PIN-ஐ உள்ளிட வேண்டிய அவசியமில்லை. NFC வசதி கொண்ட மொபைல் போனை POS இயந்திரத்தின் அருகில் டேப் செய்தாலே, விரைவாக பணப்பரிவர்த்தனையை முடித்துவிடலாம்.

அதேசமயம் ரூ.5,000-க்கு மேல் தொகையை செலுத்தும்போது, பரிவர்த்தனையின் பாதுகாப்பை உறுதி செய்ய UPI PIN-ஐ உள்ளிடுவது கட்டாயமாகும். இந்த பாதுகாப்பு விதியை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

போனில் நெட் இல்லாமலும் UPI மூலம் பணம் செலுத்தலாம்.. RBI-ன் புதிய வசதி!

UPI Tap & Pay பயன்படுத்தும் வழிகள்:

  • உங்கள் மொபைலில் செட்டிங்க்ஸுக்கு சென்று NFC-ஐ ஆன் செய்யவும்.
  • அடுத்து UPI செயலிகளில் Tap & Pay வசதியை தேர்வு செய்யவும்.
  • அதன்பின்பு கடைகளில் இருக்கும் POS இயந்திரத்தின் அருகில் சென்று டேப் செய்தால் கட்டணம் செலுத்தப்படும்.

மலைப் பகுதிகள், இணைய வசதி குறைவான கிராமங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த UPI Tap & Pay வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இணையச் சிக்கல் இருந்தாலும் எளிதாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்ய இது உதவும்.

Best Mobiles in India

English summary
UPI Tap and Pay Explained: How It Works, Key Features, Limits and Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X