UPI வழி பண பரிமாற்றங்கள் செய்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்.!
ஆன்லைன் பேமென்ட்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதாவது ஒரு சில கிளிக்குகளில் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் பரிவர்த்தனை செய்வதை எளிதாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் யுபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக ஒருவருக்கு பணம் அனுப்பவும், மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெறவும் நாம் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைத் தான் இப்போது அதிகம் பயன்படுத்தி வருகிறோம். மேலும் டிஜிட்டல் பேமெண்ட் வசதியின் மூலம் நமக்கு நேரம் மிச்சமாகிறது என்பதுடன், நமது வாழ்க்கையும் எளிமையாக மாறியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

UPI ஆப்ஸ்கள் பாதுகாப்பானவை தான் என்றாலும் கூட, அதைப் பயன்படுத்தும் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான பாதுகாப்பு டிப்ஸ்களை பற்றி அறிந்துகொள்வது சிறப்பானது. அதாவது UPI பயனர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் குற்றங்கள் நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த UPI மோசடியிலிருந்து எப்படி உங்களை உஷாராகப் பார்த்துக்கொள்வதென்று பார்க்கலாம்.

Google Play Store, Windows App Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ பிளே ஸ்டோர்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட ஆப் பயன்பாடுகளை மட்டும் பயன்படுத்தவும். அதேபோல் UPI ஆப்ஸ் மற்றும் பரிவர்த்தனை பாஸ்வோர்டுகளை எப்போதும் வலுவான கடவுச்சொல்லுடன் அமைக்க முயலுங்கள். இது உங்கள் ஃபோனையும், உங்கள் கட்டணப் பயன்பாடுகளையும் பாதுகாக்கப் பெரிதும் உதவும்.

உங்கள் UPI ஆப்ஸ் சேவைக்கான பாதுகாப்பு PIN ஐடியை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம். குறிப்பாக தெரியாத தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சலில் இருந்து உங்கள் மொபைல் போனிற்கு வரும் இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்யாதீர்கள். தெரியாத எண்களில் இருந்து வரும் பெரும்பாலான இணைப்புகள் போலியான செய்திகளை வழங்குகிறது. இது உங்களை மோசடி வலையில் சிக்கவைக்க அதிக வாய்ப்புள்ளது. இவற்றை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். குறிப்பாக உங்களை போலியான இணைப்பை கிளிக் செய்ய வைப்பதற்காக சில சலுகைகள் மற்றும் பரிசுகளை தருவதாகக் கோரி ஆசையைக் கிளப்பி, மோசடி வலையில் சிக்க வைப்பார்கள்.

அதேபோல் எந்தவொரு யூபிஐ ஆப்-பிலும் பணம் பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய பின் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆகவே, யாரேனும் உங்களுக்கு பணம் அனுப்பும்போது பின் நம்பர் எண்டர் செய்யுமாறு கூறினால், உடனே நீங்கள் அதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக உங்கள் UPI ஆப்ஸை அப்டேட் செய்யாவிட்டால், உடனே உங்களின் ஆப்ஸிற்கான சமீபத்திய பதிப்பிற்கு உங்களை அப்டேட் செய்துகொண்டு பாதுகாப்பாக இருங்கள். அதேபோல் ஒவ்வொரு மாதமும் உங்கள் UPI பின்னை மாற்றுவது முக்கியம். குறிப்பாக UPI பின்னை மாற்றுவது உங்கள் கணக்கைப் பாதுகாக்க நல்ல நடைமுறையாகும்.


Click it and Unblock the Notifications