Home
News

100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. GPay, PhonePe, Paytm-இல் போகும் பணம்.. UPI-க்கு 1 நாள் ரூல்ஸ்.. எவ்வளவு முடியும்?

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலமாக ஒரு நாளுக்கு எத்தனை முறை பரிவர்த்தனைகள் செய்ய முடியும், எவ்வளவு பணத்தை அனுப்ப முடியும், பர்சன் டு பர்சன் (Person to Person) எவ்வளவு, பர்சன் டு மெர்ச்சன்ட் (Person to Merchant) எவ்வளவு ஆகியவற்றுக்கு விதிகள் இருக்கின்றன.

இந்த விதிகள் ஜிபே (GPay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களுக்கு இருக்கிறது. இது அந்தந்த பேங்குகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆனால், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) ஆனது ஒரு நாளுக்கு எத்தனை முறை பரிவர்த்தனைகள் செய்யவும், எவ்வளவு பணத்தை அனுப்பவும் அனுமதிக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.

100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. GPay, PhonePe, Paytm-இல் போகும் பணம்!

ஏனென்றால், இது மத்திய அரசின் கீழ் சேவைகளை கொடுக்கும் பொதுத்துறை பேங்காகும். அதேபோல ரிசர்வ் பேங் ஆப் இந்தியா (Reserve Bank of India) மற்றும் என்பிசிஐ (NPCI) விதிகளுக்குட்பட்டு இந்த பேங்க் செயல்படுகிறது. ஆகவே, இதில் இருக்கும் வரம்புகளே மற்ற பேங்குகளுக்கும் பொருந்தும்படி இருக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

யுபிஐ விதிகளின்படி ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.1,00,000 வரையில் மட்டுமே அனுப்ப முடியும். இது பர்சன் டு பர்சன் மற்றும் பர்சன் டு மெர்ச்சன்ட் ஆகியவற்றுக்கு பொருந்தும். அதேபோல ஒரு நாளுக்கு பர்சன் டு பர்சன் பரிவர்த்தனைகளை அதிகபட்சம் 20 முறை மட்டுமே செய்ய முடியும். இது மொத்த தொகைக்கும் பொருந்தும்.

அதாவது, ரூ.100 அனுப்பினாலும் சரி, ரூ.1,000 அனுப்பினாலும் சரி அல்லது ரூ.1,00,000-க்குள் எவ்வளவு பணத்தை அனுப்பினாலும் சரி அது 20 பரிவர்த்தனைகளுக்கு மேல் போகாமல் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் மளிகை கடை, சூப்பர் மார்கெட், ஹோட்டல் போன்று பர்சன் டு மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளை செய்யும்போது, அதற்கு வரம்பு ஏதும் கிடையாது.

இந்த விதிகள் பொதுவாக இருக்கிறது. இதில் குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு விலக்குகள் இருக்கின்றன. அதாவது, வருமான வரியை யுபிஐ மூலம் கட்டுதல், பங்கு சந்தையில் யுபிஐ மூலம் ஐபிஓ-க்கு (IPO) அப்ளை செய்தல், ஆர்பிஐ மூலம் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அப்ளை செய்தல், கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றுக்கு விலக்கு இருக்கிறது.

இதுபோன்ற பரிவத்தனைகளின்போது, ஒரு நாளில் ரூ.5 லட்சம் வரையில் பணத்தை செலுத்தி கொள்ளலாம். இதில் மருத்துவனைக்கு பணம் செலுத்துதலும் வருகிறது. இதுபோக கிரெடிட் கார்டு மூலம் பெறப்பட்ட கடனுக்கான கட்டணம், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல், காப்பீடு செலுத்துதல் போன்றவற்றுக்கு ரூ.2,00,000 ஆக ஒரு நாள் வரம்பு இருக்கிறது.

முன்னதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலாக இருக்கும் விதிகளை கொண்டுவந்துள்ளது. இதில் பீர்-டு-பீர் (Peer-to-Peer) பரிவர்த்தனைகளில் கிடைத்துவந்த கலெக்ட் ரெக்கொஸ்ட் (collect requests) சேவையை நிறுத்த இருக்கிறது.

இதை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்துமாறு பேங்குகள் மற்றும் பேமெண்ட் ஆப்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த விதிகளும் போன்பே, ஜிபே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களுக்கு பொருந்தும். பி2பி (P2P) பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளுக்கு ரூ.2,000 வரம்பாக இருக்கிறது. ஆகவே, மலிவான பரிவர்த்தனைகளிலும் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Rules For GPay PhonePe Paytm Per Day Limit How Many Transactions How Much Amount Can Send
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X