UPI சேவையில் முதல் முறையாக.. ரூ.59 போதும்.. PhonePe-வின் 2 இன்சூரன்ஸ் பிளான்.. ஆடிப்போன Google Pay, பேடிஎம்!
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payments Interface) சேவையில்.. இப்படி ஒரு வசதியை முதல் முறையாக அறிமுகம் செய்வது போன்பே (PhonePe) நிறுவனம் தான். அதுவும் வெறும் ரூ.59 க்கு! அது என்னது? யாருக்கு எல்லாம் கிடைக்கும்? என்ன பயன்? இதோ விவரங்கள்:
அதென்ன அறிமுகம்? 2025 ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் பயணிகளுக்காக, போன்பே நிறுவனமானது இன்சூரன்ஸ் கவரேஜை (PhonePe Insurance Coverage) அறிமுகப்படுத்தி உள்ளது. போன்பேவின் இந்த விரிவான காப்பீட்டுத் திட்டம் 2 வகைகளில் (2 comprehensive insurance plans) கிடைக்கிறது.

அதென்ன வகைகள்? போன்பேவின் இந்த இன்சூரன்ஸ் கவரேஜை ரயில் அல்லது பேருந்தில் பயணம் செய்யும் நபர்கள் ரூ.59 க்கும், உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் நபர்கள் ரூ.99 க்கும் பெறலாம். இதற்காக போன்பே நிறுவனமானது ஐசிஐசிஐ லாம்பார்ட் ஜெனெரல் இன்சூரன்ஸ் (ICICI Lombard General Insurance) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
போன்பேவின் இந்த இன்சூரன்ஸ் கவரேஜின் கீழ் என்னென்ன கிடைக்கும்? மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், மருத்துவரின் ஆலோசனை, வெளிநோயாளர் சிகிச்சை, தனிப்பட்ட விபத்துக் காப்பீடு, செக்-இன் சாமான்கள் இழப்பு, பயண ரத்து காப்பீடு, தவறவிட்ட கனெக்டிங் ஃப்ளைட் கவர், மீதமுள்ளவைகளை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துக்களுக்கு விரிவான கவரேஜ் கிடைக்கும்.
போன்பேவின் இந்த இன்சூரன்ஸ் கவரேஜ் எப்போது வரை கிடைக்கும்? போன்பே பிளாட்ஃபார்மில் (PhonePe Platform) வருகிற பிப்ரவரி 25, 2025 வரை இந்த காப்பீட்டு திட்டங்கள் அணுக கிடைக்கும் என்றும், பயனர்கள் தங்கள் பயணத்தின் முழுக் காலத்திற்கும் முழுமையான கவரேஜை பெறலாம் என்றும், மகா கும்பமேளாவில் தங்கலாம் என்றும் போன்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக போன்பே நிறுவனம் 2025 பிப்ரவரி 26 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் கேஷ்பேக் ஆபர் (Cashback Offer) ஒன்றையும் அறிவித்திருந்தது. போன்பே நிறுவனம் இந்த ரூ.144 கேஷ்பேக் ஆபரை (Rs.144 Cashback Offer) 2025 மஹாகும்பமேளாவிற்கான ஆபர் (Mahakumbh Mela Offer 2025) என்று அழைக்கிறது. அதாவது இதுவும் மஹாகும்பமேளாவில் கலந்துகொள்பவர்களுக்கான ஆபர் ஆகும்.
இதன்கீழ் மஹாகும்பமேளாவில், முதல் முறையாக போன்பே ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்பினால், அவர்களுடைய முதல் பரிவர்த்தனைக்கு ரூ.144 பிளாட் கேஷ்பேக் (Flat Cashback) கிடைக்கும் என்று போன்பே அறிவித்துள்ளது. இந்த ரூ.144 பிளாட் கேஷ்பேக் ஆபர் ஆனது பிப்ரவரி 26 ஆம் தேதி வரை, அதாவது 2025 மஹாகும்பமேளா முடியும் வரை அணுக கிடைக்கும.
சுவாரசியமாக இந்த கேஷ்பேக் ஆபர் ஆனது ரூ.1 ரூபாய் என்கிற குறைவான பரிவர்த்தனைகளுக்கும் கூட பொருந்தும். இதற்காகாக மஹாகும்பமேளாவில் கலந்துகொள்ளும் போது நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்.. உங்களுடைய ஐஓஎஸ் (iOS) அல்லது ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போனில் போன்பே ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
பின்னர் உங்களுடைய பேங்க் அக்கவுண்ட்டை யுபிஐ பின்-ஐ செட் (UPI PIN Setup) செய்யவும், பின்னர் போன்பே ஆப்பில் உங்களுடைய லோக்கேஷன் பெர்மிஷன்களை எனேபிள் (Enable Location Permissions) செய்யவும். இந்த கேஷ்பேக் ஆபர் ஆனது போன்பே ஆப்பில் ஸ்கிராட்ச் கார்டு (Scratch Card) வடிவில் வழங்கப்படும். முக்கியமாக இந்த சலுகை பிரயாக்ராஜ் நகரத்தில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அங்கு மஹாகும்பமேளாவின் போது பல்வேறு ஸ்டால்கள் மற்றும் கடைகளில் போன்பே வழியிலான யுபிஐ பேமெண்ட்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








