அந்த OTP பத்திரம்.. Google Pay வழியாக UPI பேமண்ட் பண்ற எல்லாரும் இந்த வசதியை தெரிஞ்சு வச்சுக்கணும்!
கூகுள் பே (Google Pay) ஆப் தான், நீங்கள் யுபிஐ (UPI) வழியிலாக பணம் அனுப்ப மற்றும் பெற பயன்படுத்தும் பேமண்ட் ஆப்-ஆ.. எப்போவதாவது பயன்படுத்துவேன் என்பதற்கு பதிலாக "அடிக்கடி பயன்படுத்துவேன்.. கூகுள் பே ஆப் இல்லை என்றால் 1 நாள் கூட என்னால் ஓட்ட முடியாது" என்பவாரா நீங்கள்?
ஆம் என்றால், ஏடிஎம் கார்டு தேவை இல்லாமல் செய்யக்கூடிய "இந்த" ஆப்ஷனை பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் எப்போதாவது உங்கள் யுபிஐ பின் (UPI PIN) நம்பரை மறந்துவிட்டாலோ அல்லது உங்களுக்கு தேவைப்படும்போது உங்கள் டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) உங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை என்றாலோ - இந்த ஆப்ஷன் உங்களுக்கு உதவும்!

முன்னதாக கூகுள் பே ஆப்பில், உங்கள் டெபிட் கார்டு விவரங்களை உள்ளிடாமல் உங்கள் யுபிஐ பின் நம்பரை மீட்டமைப்பது (ரீசெட்) சாத்தியமற்றதாக இருந்தது. ஆனால் இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. கூகுள் பே இப்போது பல பயனர்கள் தங்கள் யுபிஐ பின் நம்பரை டெபிட் கார்டு இல்லாமலேயே மீட்டமைக்க அனுமதிக்கிறது, டெபிட் கார்டுக்கு பதிலாக ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை பயன்படுத்துகிறது.
உங்கள் டெபிட் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது உங்களிடம் அது இல்லையென்றால் இந்த செயல்முறை நிச்சயம் உங்களை காப்பாற்றும். உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கும் வங்கி ஆனது ஆதார் அங்கீகாரத்தை ஆதரிக்கும் வரை மற்றும் உங்கள் ஆதார் அட்டை உங்களுடைய தற்போதைய மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் வரை, உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம். டக்குனு யுபிஐ பின் நம்பரை மீட்டமைக்கலாம்.
டெபிட் கார்டு இல்லாமலேயே கூகுள் பே ஆப்பில் யுபிஐ பின் நம்பரை ரீசெட் செய்வது எப்படி? நீங்கள் இதை செய்ய தொடங்குவதற்கு முன், ஒவ்வொரு வங்கியும் இந்த விருப்பத்தை இன்னும் இயக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே உங்கள் வங்கியை பொறுத்து உங்கள் அனுபவம் மாறுபடலாம். ஆனால் உங்கள் வங்கி இதை ஆதரித்தால், இந்த செயல்முறை விரைவானது மற்றும் முழுமையாக டிஜிட்டல் முறையில், டெபிட் கார்டு இல்லாமல் முடிக்கலாம்
1. முதலில், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் பே ஆப்பை திறந்து, நீங்கள் சரியாக லாக்-இன் செய்துளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. பின்னர் ஹோம் ஸ்க்ரீனுக்கு வந்ததும், மேல் வலது மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் போட்டோவை கிளிக் செய்து, பேங்க் அக்கவுண்ட் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம்.
3. பின்னர் உங்கள் யுபிஐ பின் நம்பரை மீட்டமைக்க விரும்பும் குறிப்பிட்ட பேங்க் அக்கவுண்ட்டை தேர்வுசெய்ய வேண்டும்.
4. அக்கவுண்ட் விவரங்கள் தொடர்பான பக்கத்தில், ரீசெட் செயல்முறையை தொடங்க, யுபிஐ பின் நம்பர் மறந்து விட்டது என்கிற விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
5. அடுத்து, உங்கள் வங்கி இந்த செயல்முறைக்கான ஆதரவை கொண்டிருந்தால், நீங்கள் யுபிஐ அக்கவுண்ட்-ஐ ஆதாரை பயன்படுத்தி சேர்த்திருந்தால், நீங்கள் ஆதார் சரிபார்ப்பு முறையை தேர்ந்தெடுக்கலாம்.
6. இந்த கட்டத்தில், உங்கள் ஆதார் எண்ணின் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிட்டு, ஸ்க்ரீனில் தோன்றும் அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்ற வேண்டும்.
7. செய்து முடித்ததும், உங்கள் ஆதார்-இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு ஒடிபி -ஐ பெறுவீர்கள், அதை உங்கள் அடையாளத்தை சரிபார்க்க நீங்கள் உள்ளிட வேண்டும்.
8. இறுதியாக, நீங்கள் ஒரு புதிய யுபிஐ பின் நம்பரை உருவாக்கி, அதை உறுதிப்படுத்தி, ரீசெட் செயல்முறையை வெற்றிகரமாக முடிக்கவும்.
ஆதார் சரிபார்ப்பை பயன்படுத்தி கூகுள் பே ஆப்பில் பேங்க் அக்கவுண்ட்டை சேர்த்திருந்தால் மட்டுமே மேற்கண்ட முறை செயல்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் ஆதார் உங்கள் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட அதே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டும் இருக்க வேண்டும், இல்லையெனில் ஒடிபி அனுப்பப்படாது. நீங்கள் தவறான யுபிஐ பின்-ஐ பல முறை உள்ளிட்டால், உங்கள் யுபிஐ அக்கவுண்ட் 24 மணிநேரம் வரை தடுக்கப்படலாம். அப்படியானால், மீண்டும் முயற்சிப்பதற்கு முன்பு லாக்அவுட் காலம் முடிவடையும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








