UPI பணப் பரிவர்த்தனை.. கூகுள் பே முதல் பேடிஎம் வரை.. ஒரு நாளில் எவ்வளவு பணம் அனுப்பலாம்? இதோ விவரம்..
இந்தியாவில் யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும்போது ஒரு நாளில் குறிப்பிட்ட வரம்பிற்குள் தான் பணம் அனுப்ப முடியும் என்ற விதிகள் உள்ளது. ஆனாலும் அனைத்திற்கும் ஒரே அளவில் பண வரம்பு கிடையாது. அதாவது தேவைக்கு ஏற்ப பண வரம்பு மாறும். அந்த வகையில் எந்தெந்த தேவைகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்பதைக் குறித்து இப்போது விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
தினசரி தேவைகளுக்கு இதுதான் லிமிட்
நண்பர்கள் அல்லது உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது, சிறிய கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கான கட்டணம் செலுத்துவது போன்ற வழக்கமான பரிவர்த்தனைகளுக்கு, UPI மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பணம் அனுப்ப முடியும்.

சிறப்பு தேவைகள்
மருத்துவச் செலவுகள், அரசு வரி செலுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்கள், பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகையான பரிவர்த்தனைகளுக்கு UPI மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்ப முடியும்.
யுபிஐ லைட் (UPI Lite)
சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளை விரைவாக மேற்கொள்ள UPI Lite வசதியைப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு முறையும் UPI PIN-ஐ உள்ளிடாமல் எளிதாகப் பணம் செலுத்தும் வகையில் இது செயல்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக ரூ.1,000 வரை பரிவர்த்தனை செய்ய முடியும்.
யுபிஐ 123பே (UPI 123Pay)
இணைய வசதி இல்லாத சாதாரண பட்டன் போன் பயன்படுத்துபவர்களும் UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். குறிப்பாக இதன் மூலம் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.10,000 வரை பணம் அனுப்ப முடியும்.
குறிப்பாக சாதாரண UPI பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதேவேளையில், மருத்துவச் செலவுகள், கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசாங்க வரி செலுத்துதல் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கான பரிவர்த்தனைகளில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை UPI மூலம் பணம் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக Google Pay, PhonePe, Paytm போன்ற UPI செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கும் பயனர்களுக்கு, முதல் 24 மணி நேரத்திற்கு பணப் பரிவர்த்தனையில் குறிப்பிட்ட வரம்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே UPI மூலம் பணம் அனுப்ப முடியும்.
அதேபோல், UPI PIN-ஐ புதிதாக மாற்றி அமைத்தாலும் பணப் பரிவர்த்தனைக்கு தற்காலிக வரம்பு விதிக்கப்படுகிறது. PIN மாற்றிய முதல் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.5,000 வரை மட்டுமே பணம் அனுப்ப அனுமதிக்கப்படும்.

இந்த பணப் பரிவர்த்தனை வரம்பு, ஆன்லைன் மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்களில் இருந்து பயனர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய UPI பயன்பாட்டைத் தொடங்கும் போது அதிக தொகை ஒரே நேரத்தில் பரிமாற்றம் செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
மேலும், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைகள் போன்ற நிதி மோசடிகளைத் தடுப்பதிலும் இந்த வரம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் புதிய UPI பயனாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications