புது UPI ரூல்ஸ்.. ரூ.2,000 மேல் ரூ.5 சார்ஜ்.. அக்.15 கதையை முடிச்சு விட்ட NPCI.. இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் யுபிஐ (UPI) என்கிற யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்பும் மற்றும் பெறும் கோடிக்கணக்கான மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் குறிப்பிட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு (Merchant Transactions) எம்டிஆர் (MDR) கட்டணம் அமல்படுத்துவது தொடர்பாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இதை கொடுத்துள்ளது.
என்பிசிஐ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு யுபிஐ மற்றும் சேவைகள் வழிநடத்தல் குழு (UPI and Services Steering Committee) ஆனது இந்த முடிவை எடுத்துள்ளது. ஆகவே, பர்சன்-டு-மெர்ச்சன்ட் (Person-to-Merchant) பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கும் நடைமுறையானது தீபாவளிக்கு பிறகு அமல்படுத்தப்பட இருக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்க வர வாய்ப்புள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட எம்டிஆர் கட்டண முறையின்படி, தனி நபர்களுக்கு இடையே (Person-to-Person) நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்தாது. அதேபோல, தனிநபர் மற்றும் வணிகர்களுக்கு இடையேயும் ரூ.2000-க்கும் கீழ் பரிவர்த்தனை நடந்தால் அப்போதும் எம்டிஆர் கட்டணம் பொருந்தாது. ரூ.1 லட்சத்துக்குள் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கும் இந்த எம்டிஆர் கட்டணம் பொருந்தாது.
ஆகவே, ரூ.1 லட்சம் மேல் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கு செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் செல்லும்போது மட்டுமே 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும். இதையும் கியூஆர் கோட் வழியாக பணத்தை அனுப்பும் தனிநபர்கள் செய்ய வேண்டியது கிடையாது. பணத்தை பெறும் வணிகர்களே செலுத்த வேண்டும். ஆகவே, இது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் விதியாக இருக்கிறது.
இந்த எம்டிஆர் கட்டணத்திலும் விலக்குகள் இருக்கின்றன. அதாவது, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (National Payments Corporation of India) விதிகளின்படி, ஒரு கடையில் பொருள் வாங்கிவிட்டு ரூ.2000 மேல் சென்று ரூ.3,000 பணத்தை யுபிஐ வழியாக அனுப்பினால், அதற்கு 0.4 சதவீத கட்டணம் இருக்கும். ஆகவே, ரூ.12 செலுத்த வேண்டும். இதை ரூ.3,000 பணத்தை அனுப்பும் தனநபர்கள் செலுத்த வேண்டியது கிடையாது.
அந்த ரூ.3,000 பணத்தை பெறும் கடைக்காரர் செலுத்த வேண்டும். ஒருவேளை அவர் ரூ.1 லட்சத்துக்குள் மாத பரிவர்த்தனை செய்கிறார் என்றால், அந்த கட்டணமும் அவருக்கு கிடையாது. இப்படி ரூ.2,000 மேல் அதிகபட்சம் ரூ.75,000 வரையில் பரிமாற்றம் செய்யப்படும் பணத்துக்கு மட்டுமே எம்டிஆர் கட்டணம் இருக்கிறது. அதற்கு மேல் சென்றால், ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படும். அதாவது, ரூ.75,000-க்கு ரூ.300 எம்டிஆர் கட்டணமாக உள்ளது.
ஆனால், இதுதான் அதிகபட்சம் என்பதால், ரூ.80,000 அனுப்பினாலும் அதே ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படும். ரூ.90,000 அனுப்பினாலும் அதே ரூ.300 மட்டுமே வசூலிக்கப்படும். யுபிஐ வழியாக ரூ.1 லட்சம் வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். ஆகவே, ரூ.300 மேல் செலுத்த வேண்டியது கிடையாது. இதுபோக குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்யும்போது, எம்டிஆர் கட்டணம் வசூலிக்கப்படாது.
ரயில்வே (Railway) டிக்கெட் புக்கிங், டெலிகாம் (Telecom) ரீசார்ஜ்கள், இன்சூரன்ஸ் (Insurace) பிரீமியம் செலுத்துதல் மற்றும் பெட்ரோல், டீசல் ரீபில் ஆகிய பரிவர்த்தனைகளில் ரூ.2000 மேல் சென்றால், ரூ.5 மட்டுமே செலுத்தினால் போதும். இதற்கும் 0.4 சதவீத எம்டிஆர் கட்டணத்துக்கும் சம்பந்தமில்லை. ரூ.5 கட்டணம் மட்டுமே அதிகபட்சமாக வசூலிக்கப்படும். இந்த விதிகள் அக்டோபர் 15ஆம் தேதி அமல் செய்யப்பட இருந்தது. இப்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
