Home
News

இனி ரூ.500 அனுப்பலாம்.. UPI லைட் சேவையில் வரும் முக்கிய மாற்றம்.. எல்லோரும் ரெடியா இருங்க..

இந்தியா முழுவதும் யுபிஐ (UPI) சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இந்த யுபிஐ சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

அதேபோல் யுபிஐ பயன்பாடு இப்போது நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், யுபிஐ லைட் (UPI LITE) எனும் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு அதன் மூலம் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்யும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த யுபிஐ லைட் சேவை ஆனது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

UPI லைட் சேவையில் வரும் முக்கிய மாற்றம்.. எல்லோரும் ரெடியா இருங்க..

தற்போது இந்த யுபிஐ லைட் சேவை மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும் 200 ரூபாய்க்கும் கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 200 ரூபாய்க்கும் கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்து கொள்ளும் அளவீட்டை மாற்ற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இந்த அளவீட்டை தற்போது ரூ.500-ஆக உயர்த்த இருப்பதாக ஆர்பிஐ கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று நாணய கொள்கை கூட்டத்தில் தெரிவித்தார். எனவே விரைவில் யுபிஐ லைட் சேவை மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையும் 500 ரூபாய்க்கும் கீழ் பாஸ்வேர்டு இல்லாமல் பேமெண்ட் செய்துகொள்ள முடியும்.

குறிப்பாக யுபிஐ லைட் சேவையில் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தும் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் யுபிஐ ஆப்லைன் பேமெண்ட் முறைகளில் பிரபலமான என்எப்சி (NFC) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக near-field tech எனப்படும் NFC பயன்படுத்தி ஆப்லைன் வாயிலாக யூபிஐ பேமெண்ட் சேவைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் போன், வாட்ச் ஆகியவற்றின் மூலம் பேமேண்ட் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த யுபிஐ சேவைகளில் நாம் தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் அனுப்பிவிட்டால் அதை திரும்பப் பெறுவது தற்போது எளிதாகவிட்டது. அதாவது எளிமையான வழிமுறைகள் மூலம் இந்த யுபிஐ செயலிகளில் பணத்தைத் திரும்ப பெற முடியும். மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, தவறான பணப் பரிமாற்றம் நடந்தால், 24-48 மணி நேரத்தில் உங்களது பணத்தைத் திரும்பப் பெறலாம். குறிப்பாக பணம் பெறுபவர் மற்றும் பணம் செலுத்துபவர் வங்கிகள் ஒரே வங்கியாக இருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதற்குக் குறைந்த நேரம்தான் எடுக்கும். அதேசமயம் இரண்டு வங்கிக் கணக்குகளும் இரண்டு வேறு வங்கிகளில் இருந்தால் பணத்தை பெற சற்று அதிக நேரம் எடுக்கும்.

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, நீங்கள் தவறான பரிவர்த்தனை மேற்கொண்டால், உடனே நீங்கள் பரிவர்த்தனை மேற்கொண்ட யுபிஐ செயலியில் புகார் கொடுக்கலாம். பின்பு தவறான பரிவர்த்தனையின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து, நீங்கள் பணத்தை மாற்றிய கூகுள் பே, பேடிஎம், போன்பே அல்லது யுபிஐ ஆப்ஸின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் ஹெல்ப்லைனில் மெசேஜாக அனுப்ப வேண்டும்.

அதன்பின்பு கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். குறிப்பாக NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPIஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதை தேர்ந்தெடுக்கவும். அந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவேண்டும்.

புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும். பின்பு இதைச் செய்தும் பணம் வரவில்லை என்றால் நேரடியாக ஆர்பிஐ பக்கத்தில் உள்ள புகார் தளத்தில் புகார் கொடுத்து பணத்தை திரும்பப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Lite transaction limit is Rs.500 has been recommended by RBI: check full details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X