Google Pay, PhonePe-க்கு குறிச்சாச்சு.. இனி ரூ.500 இல்ல, ரூ.2000.. அதுக்குமேல இல்ல.. UPI வரம்புல Paytm வருது!
யுபிஐ (UPI) அல்லது யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) மூலம் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்களின் சேவையானது, பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் கிடைக்கின்றன. இவற்றில் ஏற்படும் மாற்றங்களுக்கு கட்டுப்பட வேண்டியிருக்கிறது.
யுபிஐ ஆப்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) மற்றும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதில் பேடிஎம் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், அதன் ஆப் யூசர்கள் படாதபாடுபட்டனர்.

இப்போது, கூகுள் பே, போன்பே ஆப்களை தூக்கி சாப்பிடும்படி என்பிசிஐ-இன் (NPCI) யுபிஐ லைட் ஆட்டோமேட்டிக் டாப் அப் (UPI Lite Automatic Top Up) சேவையுடன் பேடிஎம் களமிறங்கி இருக்கிறது. ஆகவே, யுபிஐ ஆப்களுக்கு மிகப்பெரிய போட்டியாளராக பேடிஎம் மாறியிருக்கிறது. பேடிஎம் ஆப் மூலம் கிடைக்கும் இந்த யுபிஐ லைட் சேவைக்கு (Paytm UPI Lite Service) வரம்புகள் உள்ளன.
பொட்டிக்கடை, டீக்கடை, மளிகை கடை போன்ற சிறிய அளவிலான தொகை தேவைப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்த பேடிஎம் யுபிஐ லைட் சேவை கிடைக்க இருக்கிறது. இந்த சேவைக்கு பின் நம்பர் தேவையில்லை. டாப்-அப் செய்வதன் மூலம் குறிப்பிட்ட தொகைக்குள் யுபிஐ பரிவர்த்தனைகளை (UPI Transaction) பேடிஎம் யூசர்கள் செய்து கொள்ள முடியும்.
அதாவது, யுபிஐ லைட் சேவையை வாலெட் சேவையை போல பயன்படுத்தி கொள்ள முடியும். குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே யுபிஐ லைட் சேவையில் டாப்-அப் செய்துவிட்டு, அதன்பிறகு அந்த தொகையை பயன்படுத்தி கொள்ளலாம். இது சிறிய அளவிலான தொகையாக இருப்பதால், ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும்போதும் பின் நம்பர் கேட்கப்படாது.
யுபிஐ லைட் சேவைக்கான தொகையில் வரம்பு இருக்கிறது. அதாவது, ஒரு முறை பரிவர்த்தனை செய்யும்போது, அதிகபட்சம் ரூ.500 மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டுமானால், முதலில் ரூ.500 அனுப்பிவிட்டு மறுபடியும் தொகையை தேர்வு செய்து அனுப்பி கொள்ளலாம். அதே நேரத்தில் ஒரு நாளுக்கு அதிகபட்ச தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அதாவது, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.500 என்றால், ஒரு நாளுக்கு ரூ.2000 மட்டுமே அதிகபட்சமாக யுபிஐ லைட் சேவையில் பயன்படுத்த முடியும். இந்த ரூ.2000 தொகை வாலெட்டில் இருந்து தீர்ந்து போகும்பட்சத்தில் பேடிஎம் ஆப் மூலம் ஆட்டோமேட்டிக் டாப்-அப் செய்து கொள்ளலாம். இந்த டாப்-அப் சேவை குறிப்பிட்ட சில பேங்குகளுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இப்போதைக்கு யெஸ் பேங்க் (Yes Bank) மற்றும் ஆக்சிஸ் பேங்க் (Axis Bank) கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மற்ற பேங்குகளுக்கு தொடங்கப்பட இருக்கிறது. போன்பே, கூகுள்பே ஆப்களுக்கு போட்டியாளராக பேடிஎம் இருக்கிறது. சிறிய கடைகளில் கூட பேடிஎம் கியூஆர் கோட் இருப்பதை பார்க்கலாம். இப்போது, இந்த யுபிஐ லைட் டாப்-அப் சேவை மேலும் பலமாக இருக்கிறது.
முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, இந்த யுபிஐ லைட் சேவையின் டாப்-அப் தொகையை அதிகரித்தது. அதாவது, ரூ.2000ஆ இருந்த யுபிஐ லைட் தொகையை ரூ.5000ஆக மாற்றி கொடுத்தது. அதேபோல ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500ஆக இருந்த ஒரு வரம்பை ரூ.1000ஆக அதிகரித்தது. இப்போது, இந்த தொகைகளில் சேவையை தொடர முடிகிறது.
ஆனால், பேடிஎம் நிறுவனம், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 மற்றும் தினசரிக்கு அதிகபட்சமாக ரூ.2000 தொகையை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த ரூ.2000 தொகை வாலெட்டில் இருந்து தீர்ந்தால், பேடிஎம் ஆப் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ஆட்டோமோட்டிக்காக டாப் அப் செய்து கொள்ளப்படும். இதற்கும் நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








