UPI லிமிட் ரூல்ஸ்.. இனி 1,000 ரூபாயோ.. 10,000 ரூபாயோ.. Google Pay, PhonePe, Paytm-க்கு இதுதான் 2025 லிமிட்!
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களில் பணப்பரிவத்தனைகளை செய்யும் பேங்க் கஸ்டமர்களுக்கு பணத்தை அனுப்ப லிமிட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லிமிட்டின்படி பேங்க் கஸ்டமர்கள் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். அதற்கு மேல் பணத்தை அனுப்ப முடியாது. ஆகவே, இந்த யுபிஐ லிமிட் விதிகள் (UPI Limit Rules) குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
2025ஆம் ஆண்டில் யுபிஐ லிமிட் விதிகள் மாற்றப்பட்டன. இப்போது, 2026ஆம் ஆண்டு நெருங்கிவிட்டது. ஆகவே, மீண்டும் யுபிஐ லிமிட்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படலாம். இப்போது, யுபிஐ ஆப்களில் பணப்பரிவர்த்தனை செய்ய 24 மணி நேர லிமிட் அமலில் இருக்கிறது. அதேபோல எத்தனை முறை பரிவர்த்தனைகள் செய்யலாம் என்பதற்கும் லிமிட் இருக்கிறது.

இந்த பரிவர்த்தனை லிமிட்கள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது, பர்சன்-டூ-பர்சன் பரிவர்த்தனைகள் இருக்கிறது. இரண்டாவதாக பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகள் இருக்கிறது. இதில் பர்சன்-டூ-பர்சன் பரிவர்த்தனைகள் ஆனது கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் கஸ்டமர்கள் வழக்கமாக பயன்படுத்துவது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணத்தை அனுப்புவதாகும்.
இதற்கு 24 நேரத்துக்கு ரூ.1,00,000 லிமிட்டாக இருக்கிறது. இதை ரூ.1,000 ஆகவோ, ரூ.10,000 ஆகவோ எத்தனை முறை வேண்டுமானலும் பிரித்து அனுப்பி கொள்ளலாம். ஆனால், 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.1,00,000 லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். அதற்கு மேல் அடுத்த 24 மணி நேரம் கழித்து மட்டுமே அனுப்பி கொள்ள முடியும். இதில் சில பரிவர்த்தனைகளுக்கு விலக்கு உள்ளது.
1. மூலதனச் சந்தை முதலீடுகளுக்கு ரூ.2 லட்சமாக லிமிட் இருந்தது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக லிமிட் இருக்கிறது. 24 மணி நேரத்துக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் வரையில் பணத்தை அனுப்பி கொள்ளலாம். இது பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளின் கீழ் வருகிறது.
2. இன்சூரன்ஸ் செலுத்தல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 லட்சமாக லிமிட் இருந்தது. இப்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக அனுப்பி கொள்ளலாம். 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் அனுப்பி கொள்ளலாம். ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்டவை இதில் வருகிறது.
3. அரசு இ-சந்தை கட்டணங்கள் அல்லது பேமெண்ட்களுக்கு ரூ.1 லட்சமாக லிமிட் இருந்தது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அனுப்பி கொள்ளலாம். 24 மணி நேரத்துக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சத்தை பரிமாற்றம் செய்யலாம். இது டெண்டர்கள் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும்.
4. டிராவல் செய்யும்போது, பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளை செய்தால் அதற்கு லிமிட் ரூ.1 லட்சமாக இருந்தது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்குக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் அனுப்பி கொள்ளலாம். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவைகளுக்கு இது பொருந்தும்.
5. பேங்க் கஸ்டமர்கள் அதிகமாக பயன்படுத்தும் கிரெடிட் கார்டு பேமெண்ட்களை யுபிஐ ஆப்கள் வழியாக செய்யும்போது, அதற்கான லிமிட் ரூ.2 லட்சமாக இருந்தது. இப்போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.
6. கலெக்சன்களை செய்யும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சமாக லிமிட் இருக்கிறது. மேலும், கோல்டு, சில்வர் உள்ளிட்ட நகைகளை வாங்கும்போது, அதிகபட்சமாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சம் அனுப்பலாம். 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சத்துக்கு பரிவர்த்தனை செய்யலாம்.
மேலும், யுபிஐ சர்க்கிள் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டன. மாதத்துக்கு ரூ.15,000 லிமிட் என்னும் ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) விதிகள்இந்திய அரசின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்புக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








