புது UPI ரூல்ஸ்.. இனி ரூ.2 லட்சம் லிமிட்.. வங்கி கணக்குக்கு லிமிட்.. 1 நாளுக்கு, 1 பரிவர்த்தனைக்கு வந்தது!
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக செய்யும் பரிவர்த்தனைகளில் புதிய லிமிட்டை அமல் செய்துள்ளது. ஒரு நாள் மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கு இருந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) உள்ளிட்ட யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு ஒரு நாளுக்கு லிமிட் மற்றும் ஒரு பரிவர்த்தனைக்கு லிமிட் இருக்கிறது. இந்தியாவில் ரூ.1 லட்சமாக லிமிட் இருக்கிறது. குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 முதல் ரூ.10 லட்சம் வரையில் லிமிட் இருக்கிறது.

இதேபோல யுபிஐ குளோபல் அக்செப்ட்டென்ஸ் (UPI Global Acceptance) வழியாக வெளிநாடுகளில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கும் லிமிட் விதிக்கப்படுகிறது. யுபிஐ பரிவர்த்தனைகளை ஏற்று கொள்ளும் நாடுகளில் இப்படி லிமிட் இருக்கிறது. ஆனால், இது வங்கிகளின் லிமிட்டுக்கு ஏற்ப மாறுப்படுகிறது. இதில் ஐரோப்பாவில் புதிய லிமிட் அமலுக்கு வந்துள்ளது.
ஐரோப்பாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு ஒரு பரிவர்த்தனை மற்றும் ஒரு நாள் லிமிட் ஆனது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக பொருந்தக்கூடிய லிமிட்டாக இருக்கிறது. இருப்பினும், அந்தந்த வங்கிகளும் லிமிட்களை நிர்ணயித்துக்கொள்ள இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அனுமதி கொடுத்துள்ளது.
இந்த யுபிஐ குளோபல் அக்செப்ட்டென்ஸ் சேவையில் பி2எம் (P2M) சுருக்கமாக அழைக்கப்படும் பர்சன்-டு-மெர்ச்சன்ட் (Person-to-Merchant) பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும். பர்சன்-டு-பர்சன் பரிவர்த்தனைகளுக்கு கொடுக்கப்படாது. ஆகவே, ஐரோப்பாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்தால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையில் செலவு செய்து கொள்ளலாம்.
இந்தியாவில் பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கும் லிமிட் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ரூ.1 லட்சம் ஆனது ஒரு பரிவர்த்தனை மற்றும் ஒரு நாளுக்கான லிமிட்டாக இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை செய்யும்போது, கூடுதலாக பணத்தை அனுப்பி கொள்ளலாம். கிரெடிட் கார்டு கட்டணங்களை ஒரு பரிவர்த்தனையில் ரூ.5 லட்சம் வரையில் செலுத்தி கொள்ளலாம்.
இந்த லிமிட் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2 லட்சமாக இருந்தது. ஒரு நாளுக்கு ரூ.6 லட்சம் வரையிலும் செலுத்தலாம், இந்த லிமிட் ரூ.5 லட்சமாக இருந்தது. தங்கம், வெள்ளி போன்ற நகைகளை வாங்கும்போது, ஒரு பரிவர்த்தனைக்கான லிமிட்டானது ரூ.2 லட்சமாக இறுக்கிறது. இது ரூ.1 லட்சமாக இருந்தது. ஒரு நாளுக்கு ரூ.6 லட்சம் வரையில் பரிவர்த்தனை செய்யலாம்.
மூலதன சந்தையில் முதலீடு செய்ய யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தினால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. இருப்பினும், 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் பணத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த லிமிட் ரூ.2 லட்சமாக மட்டுமே இருந்தது. டிராவலின் போது ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் லிமிட்டாக இருக்கிறது.
24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் லிமிட் இருக்கிறது. இந்த லிமிட் ரூ.2 லட்மாக மட்டுமே இருந்தது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக கட்டணங்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.5 லட்சமாக லிமிட் இருக்கிறது. யுபிஐ ஆப்கள் வழியாக வருமான வரியை செலுத்தினால், ரூ.5 லட்சம் லிமிட்டாக இருக்கிறது. இன்சூரன்ஸ் சந்தாவை செலுத்த பழைய லிமிட் ரூ.2 லட்சமாக இருந்தது.
இப்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சமாக லிமிட் இருக்கிறது. ஒரு நாளுக்கு ரூ.10 லட்சமாக இருக்கிறது. இந்த லிமிட் இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த வங்கிகள் மற்றும் யுபிஐ ஆப்களுக்கு பொருந்தும். இருப்பினும், வங்கிகளில் தொடங்கிய கணக்கின் அடிப்படையிலும் இந்த லிமிட் மாறும். யுபிஐ குளோபல் அக்செப்ட்டென்ஸ் ஐரோப்பா மட்டுமல்லாமல், பல நாடுகளில் இருக்கிறது.
பஹ்ரைன், கம்போடியா, கனடா, குவைத், நியூசிலாந்து, ஓமன், தென்னாப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இது அந்தந்த நாடுகளின் கரென்சிக்கு ஏற்ப பரிவர்த்தனை செய்து முடிக்கிறது. இதற்கு ஏற்றபடி இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆனது லிமிட்டை அமலுக்கு கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications