Home
News

அப்படி போடு.. UPI பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் புதிய வசதி..

ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவோருக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃபர் இந்தியா தற்போது இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான தகவல்களை இப்போது பார்க்கலாம்.

அதாவது தற்போது யுபிஐ (UPI) பரிவர்த்தனை தொடர்பான விதிமுறைகளில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக இந்த மாற்றங்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். பணம் அனுப்பவதில் நிறையக் கட்டுப்பாடுகள் வருவதாலும், சில சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் யுபிஐ பயனர்கள் அடுத்து என்ன விதிமுறை வருவோ என்ற அச்சத்தில் உள்ளன் என்று தான் கூறவேண்டும்.

அப்படி போடு.. UPI பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

தற்போது யுபிஐ பயனர்கள் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆனால் சில சில சூழ்நிலைகளில் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். எனவே இப்போது எந்த நாளில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை ஒரே நேரத்தில் ஆன்லைனில் செலுத்தலாம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்படி மருத்துவமனைகள் அல்லது படிப்பு தொடர்பான வசதிகளின் போது மக்கள் இந்த வசதியைப் பெறமுடியும். குறிப்பாக இந்த இடங்களில் தான் ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இந்த வசதி ஜனவரி 10 முதல் அதாவது இன்று முதல் தொடங்கப்படுகிறது. சமீபத்தில் தான் மருத்துவமனை மற்றும் கல்விச் சேவைகளுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

அப்படி போடு.. UPI பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், மருத்துவமனை மற்றும் கல்வி சேவைகளுக்குப் பணம் செலுத்துவதில் தான் மக்கள் அதிக பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலைமை உள்ளது. ஆனால் இந்த புதிய சேவை தொடங்கப்பட்ட பிறகு யுபிஐ பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.

அதேபோல் பணம் செலுத்துவதற்கான யுபிஐ பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் NPCI கேட்டுக் கொண்டுள்ளது. முன்பு வெளியான அறிவிப்பின்படி ரூ.1 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும். ஆனால் இனி 5 லட்சம் வரை அனுப்பலாம். அதுவும் சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மற்ற யுபிஐ பரிவர்த்தனைக்கு ஒரு நாள் வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர யுபிஐ பயன்பாட்டில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிதாக சில விதிகள் இதில் சேர்க்கப்பட்டு உள்ளன. அதன்படி ஓராண்டுக்கு மேல் செயல்படுத்தப்படாமல் இருக்கும் யுபிஐ ஐடியகளை செயலிழக்கச் செய்ய கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளுக்கு என்பிசிஐ அறிவுறுத்தல்.

அப்படி போடு.. UPI பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..

அடுத்து மோசடிகளைத் தடுக்க ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு யுபிஐ பரிவர்த்தனையில் டேப் அண்ட் பே வசதியும் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதேபோல் ப்ரீபெய்ட் பேமண்ட் கருவி மூலம் ரூ.2000-க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1 பரிமாற்ற கட்டணம் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதேபோல் கூகுள் பே, போன்பே பேடிஎம் போன்ற யுபிஐ சேவைகளை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாகக் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI higher transfer limit for hospital and educational services will be applicable from January 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X