2025 மார்ச் முதல் புதிய விதிகள்.. யுபிஐ முதல் EPFO வரை முக்கிய மாற்றங்கள்.. முழு விபரம் இதோ!
பிப்ரவரி மாதம் முடிந்து நாளை மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. குறிப்பாக இந்த 2025 மார்ச் மாதத்தில் யுபிஐ முதல் பிஎஃப் வரை பல முக்கியமான மாற்றங்கள் வரவுள்ளன. இந்த முக்கியமான மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்குத் தகுந்தபடி திட்டமிட்டு செயல்பட முடியும். சரி இப்போது இந்த அந்த மாற்றங்களைப் பார்க்கலாம்.
1.UPI பரிவர்த்தனையில் முக்கிய மாற்றம்: மார்ச் 1-ம் தேதி முதல் யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (UPI) பரிவர்த்தனைகள் தொடர்பான ஒரு பெரிய மாற்றம் இருக்கும். அதாவது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) புதிய விதிகளின்படி, பயனர்கள் யுபிஐ மூலம் காப்பீட்டு பிரீமியத்தைச் செலுத்துவது இனி எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO): சமீபத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது, அதன்படி உலகளாவிய கணக்கு எண்ணை (UAN) செயல்படுத்துவதற்கும் வங்கி கணக்குகளை ஆதார் உடன் இணைப்பதற்கும் காலக்கெடுவை மீண்டும் நீட்டித்துள்ளது EPFO அமைப்பு. அதுவும் வரும் மார்ச் 15 2025 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதுவும் முன்பு யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கி கணக்குகளை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்கான காலக்கெடு 2025 பிப்ரவரி 15-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த காலக்கெடுவை மீண்டும் நீட்டித்து வரும் மார்ச் 15-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு.
UAN செயல்படுத்தப்பட்டதும் ஊழியர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளை ஆன்லைனில் எளிதாக நிர்வகிக்க முடியும். அதாவது ஆன்லைனில் PF பாஸ்புக்கைப் பார்க்கவும் பதிவிறக்கவும் செய்யலாம். பின்பு ஆன்லைனில் பிஎஃப் முன்பணத்திற்கு விண்ணப்பித்தல் மற்றும் உங்கள் கோரிக்கையின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம். இதுதவிர வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை - ஈஎல்ஐ (Employment Linked Incentive- ELI) திட்டத்தை பெறுவதற்கு யுஏஎன் ஆக்டிவேட் (UAN Activate) செய்ய வேண்டும்.
3.சிலிண்டர் விலையில் மாற்றம்: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன. எனவே நாளை அதாவது மார்ச் 1-ம் தேதியன்று சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த முறையாவது சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் அனைத்து பொதுமக்களும் இருக்கின்றனர்.
4.ரயில் பயணம்: மார்ச் மாதத்தில் ரயில் பயணம் செய்ய திட்டமிடுவதற்கு முன்பு நீங்கள் செல்லும் வழித்தடத்தில் குறிப்பிட்ட நாட்களில் ரயில்கள் இயங்குமா அல்லது ரயில் வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் நல்லது. இதன் மூலம் பயணத்தில் எந்தவித சிரமமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
அதேபோல் பொது டிக்கெட் (general ticket) வைத்திருப்பவர்களுக்கான விதிகளில் சில திருத்தம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன்பு கும்பமேளாவிற்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்துக்கு வந்த சிலர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவத்தையடுத்து இந்த மாற்றங்கள் பரிசீலிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது பொதுவாக பயணிகள் பொது டிக்கெட்டுடன் எந்த ரயிலிலும் ஏறலாம், ஆனால் விரைவில் கொண்டுவரப்படும் புதிய மாற்றத்தில் ரயிலின் பெயர் டிக்கெட்டில் குறிப்பிடப்படலாம். இதன்மூலம் பயணிகள் அவரவர் ரயிலுக்கு மட்டும் செல்லும் வகையில் திருத்தம் செய்யப்படலாம். குறிப்பாக இந்த வசதி மூலம் குறிப்பிட்ட ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க முடியும்.

மேலும் பொது டிக்கெட் வாங்கிய நேரத்தில் இருந்து சரியாக 3 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும் என்பது சில பயணிகளுக்குத் தெரியாது. எனவே இந்த காலக்கெடுவிற்குள் பயணம் தொடங்கப்படாவிட்டால், டிக்கெட் செல்லாது. பொது டிக்கெட்டுகளில் ரயில் பெயர்களை குறிப்பிடுவதன் மூலம் பயணிகளின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரிகளுக்கு உதவும். இதுதவிர எந்த ரயிலில் ஏறலாம் என்பது பற்றி பயணிகளிடையே தெளிவு கிடைக்கும்.
பொதுப் பெட்டிகளில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு விரைவில் இந்திய ரயில்வே விதிகளில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications