UPI கிரெடிட் கார்டு.. இனி பணம் இல்லாமல் பொருள் வாங்கலாம்.. RBI அதிரடி.. இது தெரியாம போச்சே!
யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கவும் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் ஆப் வழியாக பணம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் கட்டாயம் யுபிஐ கிரெடிட் கார்டு பற்றி அறிந்துகொள்ள வேண்டும். UPI கிரெடிட் கார்டு என்றால்? இதன் கீழ் பணம் இல்லாமால் பொருட்களை வாங்குவது எப்படி? இதோ விவரங்கள்:
யுபிஐ பயனர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைக்க ஆர்பிஐ அனுமதித்தது. பிஓஎஸ்-ல் ஸ்வைப் செய்வதிலிருந்து ஓடிபி பகிர்வது வரை, ஃபிசிக்கல் கார்டை பயன்படுத்துவதில் உள்ள தொந்தரவின் காரணமாக இந்த அனுமதி வழங்கப்பட்டது.

இதன்மூலம் வங்கியின் யுபிஐ ஆப் மூலம் வணிகர்கள் மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கு நிகழ்நேரத்தில் பணம் செலுத்தலாம். ஆனால் யுபிஐ சேவையில் உள்ளதை போலல்லாமல், உங்களின் சேமிப்பு வங்கி கணக்கில் இருந்தால் மட்டுமே, பிறருக்கு பணம் அனுப்ப முடியும் என்கிற நிலை இதில் இல்லை. இதன் கீழ் நீங்கள் கிரெடிட்டில் பெற்ற பணத்தை டிரான்ஸ்பர் செய்ய முடியும்
கிரெடிட் கார்டுகளை யுபிஐ உடன் இணைப்பதன் மூலம், கார்டு பயனர்கள் இரு உலகங்களிலும் (பிஸிக்கல் மற்றும் ஆன்லைன்) சிறந்ததை பெற முடியும். அவர்கள் ஸ்மார்ட் போன்கள் மூலம் நிகழ்நேரத்தில் பணம் செலுத்துவது மட்டுமல்லாமல், மற்றொரு பேமண்ட் பில்டரையும் சேர்க்க முடியும். இது அவர்களுக்கு இரண்டு வழிகளில் பயனளிக்கும்:
1. குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் அவர்கள் சில பொருட்களை வாங்கலாம் அல்லது பணம் செலுத்தலாம். இதை கடனின் கீழ் செய்யலாம்.
2. அனைத்து பேமண்ட்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, கிரெடிட் கார்டு பில் மூலம் செலுத்தப்படுவதால், அவர்களின் பேங்க் ஸ்டேட்மென்ட் குழப்பமடையாது.
எடுத்துக்காட்டுக்கு, யூபிஐ செயலி மூலம் ஒரு மாதத்தில் 100 சிறிய பரிவர்த்தனைகளைச் செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம், அதன் பிறகு மாத இறுதியில், உங்கள் பேங்க் ஸ்டேட்மென்ட் ஆனது இந்த 100 பரிவர்த்தனைகளையும் தனித்தனியாக பதிவு செய்யும். மறுபுறம், இந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, அவை கிரெடிட் கார்டு அறிக்கையில் பதிவு செய்யப்படும்.
கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியின் முடிவில், நீங்கள் அதற்கு பணம் செலுத்தும் போது, பில் செலுத்துவதற்கான ஒரு பரிவர்த்தனை மட்டுமே பேங்க் ஸ்டேட்மென்ட்டில் பதிவு செய்யப்படும்.
யுபிஐ கிரெடிட் கார்டு எப்படி செயல்படும் என்றால்..
1. யுபிஐ உடன் இணைத்தல்: கிரெடிட் கார்டு வங்கி கணக்கிற்குப் பதிலாக யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்டு ருக்கும்
2 பரிவர்த்தனை: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் போது, அந்த தொகை வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படுவதற்கு பதிலாக கிரெடிட் கார்டில் வசூலிக்கப்படும்.
3. திருப்பிச் செலுத்துதல்: வழக்கமான பில்லிங் சுழற்சியின்படி பயனர் கிரெடிட் கார்டுக்கு பில் செலுத்த வேண்டும்.
இதேபோல யுபிஐ தொடர்பான சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, 2 வகையான கேஷ்பேக் சலுகைகளை (Cashback Offers) முன்வைத்து கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பிரபலமான யுபிஐ ஆப்களுக்கு நேரடி போட்டியாக, பெங்களூரை சேர்ந்த ஃபின்டெக் நிறுவனமான கிரெடிட்.பே அதன் புதிய யுபிஐ ஆப்பை (Kredit Pe UPI App) அறிமுகம் செய்துள்ளது.
கிரெடிட்.பே யுபிஐ ஆப் வழியாக செய்யப்படும் அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் ரூபே கிரெடிட் கார்டை பயன்படுத்தி செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 2% கேஷ்பேக் கிடைக்கும் என்றும் கிரெடிட்.பே நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








