Home
News

GPay, PhonePe-க்கு வச்சாச்சு.. நாளுக்கு ரூ.5000.. மாசம் ரூ.15000.. இனிமே BHIM-க்கு மாறுவீங்க.. UPI சர்க்கிள்!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் மூலம் பண பரிவர்த்தனை செய்துவரும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் யுபிஐ சர்க்கிள் விதிகளை (UPI Circle Rules) பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஒரே பேங்க் அக்கவுண்ட், நாளுக்கு ரூ.5,000 மற்றும் மாதத்துக்கு ரூ.15,000 லிமிட் கொடுக்கும் இந்த யுபிஐ விதிகளால் மத்திய அரசின் பிம் (BHIM) ஆப் மூலம் இனிமேல் பரிவர்த்தனை செய்யலாமே என்ற முடிவைகூட நீங்கள் எடுக்கலாம்.

இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்பிசிஐ (National Payments Corporation of India - NPCI) ஆனது யுபிஐ சர்க்கிள் விதிகளை கொண்டு வந்தது. இந்த விதிகள் மூலம் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே யுபிஐ பேமெண்ட்களை (UPI Payments) செய்து கொள்ளலாம். அதாவது, பிரைமரி பயனர் (Primary User) மற்றும் செகண்டரி பயனர் (Secondary User) என்று 2 அக்கவுண்ட்களுக்கும் மேல் அனுமதி கிடைக்கும்.

GPay, PhonePe-க்கு வச்சாச்சு.. இனி நாளுக்கு ரூ.5000.. மாசம் ரூ.15000!

இந்த செகண்டரி பயனர்கள், உங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களாக இருக்கலாம். இவர்களுக்கு உங்களது பேங்க் அக்கவுண்ட் மூலமே கூடுதலாக யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொடுக்கலாம். இந்த கூடுதல் யுபிஐ அக்கவுண்ட்கள் மூலம் ஒரு நாளுக்கு ரூ.5000 மற்றும் மாதத்துக்கு ரூ.15,000 வரையில் உச்ச வரம்பை பிரைமரி பயனர்கள் செட் செய்து வைத்து கொள்ளலாம்.

இல்லையென்றால், ஒவ்வொரு முறை அவர்கள் பேமெண்ட்களை செய்யும்போதும் அனுமதி வழங்கி உங்களது அக்கவுண்ட்டில் இருந்து தொகையை கொடுக்கலாம். ஆகவே, யுபிஐ பேமெண்ட்கள் முற்றிலும் பிரைமரி பயனரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த செகண்டரி பயனர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் தேவையில்லை. ஸ்மார்ட்போன், மொபைல் நம்பர் மற்றும் இன்டர்நெட் இருந்தால் மட்டுமே போதும்.

இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளுக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளானது அனைத்து யுபிஐ ஆப்களும் பொருந்தும். ஆனால், கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களுக்கு அதிக பேங்க் கஸ்டமர்கள் செல்வதை இந்த விதிகள் தடுக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால், ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் ஒரு யுபிஐ அக்கவுண்ட் (UPI Account) மட்டுமே ஓப்பன் செய்ய முடிகிறது. யுபிஐ ஆப்கள் (UPI Apps) வேறு வேறாக இருந்தாலும், மொபைல் நம்பர் ஒன்றாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளில் ஒரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு பல மொபைல் நம்பர்கள் மற்றும் யுபிஐ அக்கவுண்ட்கள் ஓப்பன் செய்ய முடியும்.

இருப்பினும், இந்த யுபிஐ சர்க்கிள் ஆப்ஷனை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற நிறுவனங்கள் கொண்டுவர இருக்கின்றன. ஏனென்றால், இந்த யுபிஐ சர்க்கிள் ஆப்ஷனானது, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் பிம் ஆப்பில் ஏற்கனவே வந்துவிட்டது. இதன் மூலம் பேங்க் கஸ்டமர்கள் செகண்டரி பயனர்களுக்கு அக்கவுண்ட்களை ஓப்பன் செய்துவருகின்றனர்.

இதனால், பேங்க் அக்கவுண்ட்கள் இல்லாமலேயே யுபிஐ அக்கவுண்ட்கள் அதிகரித்துள்ளன. அதிகபட்சம் 5 செகண்டரி பயனர்களுக்கு பிம் ஆப் அனுமதி கொடுக்கிறது. இந்த யுபிஐ சர்க்கிள் பீச்சரை எப்படி பயன்படுத்துவது? முதலில் உங்களது பிம் ஆப்-ஐ அப்டேட் செய்து கொள்ளுங்கள். அதன்பிறகு ஓப்பன் செய்தால், ஹோம் பக்கத்தில் யுபிஐ சர்க்கிள் டேப் தோன்றும்.

இதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, உங்களது ஃபேமிலி அல்லது நண்பர்களின் யுபிஐ ஐடிக்களை இணைக்க வேண்டும். இல்லையென்றால், அதில் இருக்கும் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து இணைக்கலாம். இதன் பிறகு அவர்களது மொபைல் நம்பரை இணைத்துவிட்டு, யுபிஐ சர்க்கிள் விதிகளின்படி பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கலாம்.

Best Mobiles in India

English summary
UPI Circle Rules For BHIM Secondary Users Make Digital Payments Without Account Daily Limit Rs 5000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X