Home
News

பேங்க் அக்கவுண்ட் கதை முடிந்தது.. ரூ.15,000 லிமிட்டில் Google Pay, PhonePe, Paytm பேமெண்ட்.. UPI ஐடி போதும்!

பேங்க் அக்கவுண்ட் இல்லாமல், கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களை வைத்து மட்டுமே பரிவர்த்தனைகளை செய்து கொள்ளும்படி யுபிஐ சர்க்கிள் பேமெண்ட்களை (UPI Circle Payments) என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) ஆனது கொண்டுவந்தது.

இந்த யுபிஐ சர்க்கிள் பேமெண்ட்களுக்கு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. அதாவது, வழக்கமாக பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஆப்களை (UPI Apps) வைத்து அந்த அக்கவுண்ட்டில் இருக்கும் முழு தொகையையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், பேங்க் அக்கவுண்ட் இல்லாமல், யுபிஐ ஆப்களை பயன்படுத்தும்போது, வரம்புகள் இருக்கும்.

பேங்க் அக்கவுண்ட் கதை முடிந்தது.. ரூ.15,000 லிமிட்டில் Google Pay!

ஆகவே, மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ.15,000 மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த ரூ.15,000 லிமிட்டை விருப்பத்துக்கு ஏற்ப ரூ.10,000, ரூ.5,000 என்று மாற்றியும் பயன்படுத்தி கொள்ள முடியும். யுபிஐ ஐடியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட ஒரே பேங்க் அக்கவுண்ட்டை வைத்து, பேங்க் அக்கவுண்ட் இல்லாத 5 பேருக்கு யுபிஐ பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்க முடியும்.

இந்த 5 பேருக்கும் மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுக்கலாம். இந்த வரம்புகளை யுபிஐ ஐடியுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டை வைத்திருக்கும் நபர் மட்டுமே செய்ய முடியும். இதை கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாகவே செய்து கொள்ளலாம்.

கூகுள் பே ஆப்பில் பாக்கெட் மணி (Pocket Money), போன்பே ஆப்பிள் யுபிஐ சர்க்கிள் (UPI Circle), பேடிஎம் ஆப்பில் பாக்கெட் மணி (Pocket Money), பீம் ஆப்பில் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) ஆகிய விருப்பங்களின் கீழ் இந்த யுபிஐ சர்க்கிள் பேமெண்ட்களை செட் செய்யலாம். பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடியை வைத்துருக்கும் நபர் இதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் கீழ் இயங்கும் பீம் ஆப்பில் எப்படி யுபிஐ சர்க்கிள் பேமெண்ட்களை செய்வது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. பீம் யுபிஐ (BHIM UPI) ஆப்பை ஓப்பன் செய்து கொள்ளவும். ஹோம் பேஜில் இருக்கும் யுபிஐ சர்க்கிள் விருப்பத்துக்கு செல்லவும்.

இதில் சர்க்கிள் அழைப்பு (Invite to Circle) விருப்பம் தோன்றும். இதில் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். அதாவது, பேங்க் அக்கவுண்ட் இல்லாமல், வெறும் பீம் யுபிஐ ஆப்பை மட்டுமே வைத்திருக்கும் நபரின் மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும். மொபைல் நம்பரை உங்களது கான்டாக்ட்ஸ் (Contacts) மெமரியில் வைத்திருக்க வேண்டும்.

இந்த நம்பரை கொடுத்த பிறகு மாதாந்திர வரம்பை அங்கீகரிக்க (Approve a Monthly Limit) வேண்டும். இதில் விருப்பமான தொகையை தேர்வு செய்து கொள்ளலாம். ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) விருப்பத்தை கொடுத்தால், மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுவிடும். ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும்போது நோட்டிபிகேஷன் வரும்.

பிறகு, உங்களது உறவை தேர்வுசெய்க (Choose your relationship) விருப்பத்தில் பேங்க் அக்கவுண்ட் இல்லாமல் யுபிஐ ஐடி வைத்திருக்கும் நபரின் உறவு முறையை குறிப்பிடுங்கள். இப்போது, அவர்களது ஆதார் எண் வழியாக அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். பிறகு வேலிடிட்டி செட் செய்ய வேண்டும். 1 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரையில் இந்த யுபிஐ சர்க்கிள் ஆக்டிவ்வில் வைக்கலாம்.

இப்போது, யுபிஐ பின் நம்பர் கொடுத்து அந்த ஐடியை அங்கீகரிக்க வேண்டும். இதை செய்து முடித்த பிறகு பேங்க் அக்கவுண்ட் இல்லாத நபரும் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்யலாம். இதேபோல கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களிலும் பேங்க் அக்கவுண்ட் இல்லாத நபரை யுபிஐ ஆப்களை மட்டுமே வைத்து பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம்.

Best Mobiles in India

English summary
UPI Circle Payments Without Bank Account For Google Pay PhonePe Paytm Monthly Limit Rs 15000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X