Home
News

புது UPI விதி.. மாதாந்திரம் ரூ.15,000 அனுப்புங்க.. அதுக்கு மேல முடியாது.. ஷாக்காக வேண்டாம்.. ஏன் தெரியுமா?

யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளில் மாதத்துக்கு இனிமேல் அதிகபட்சமாக ரூ.15,000 அனுப்பி கொள்ள முடியும். இதற்கு மேல் அனுப்ப முடியாது என்று சொன்னால் ஷாக்காகத்தான் இருக்கும். ஆனால், இது வழக்கமாக பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ கஸ்டமர்களுக்கு கிடையாது. பேங்க் அக்கவுண்ட் இல்லாமல் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) வழியாக பரிவர்த்தனைகளை செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த யுபிஐ சர்க்கிள் வரம்பே மாதத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. மாதத்துக்கு எவ்வளவு, ஒரு நாளுக்கு எவ்வளவு உள்ளிட்ட விவரங்கள் இதோ.

பேங்க் அக்கவுண்ட் இல்லாத கஸ்டமர்களுக்காகவே யுபிஐ சர்க்கிள் கொண்டுவரப்பட்டது. அதாவது, பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட பிரைமரி யூசரின் யுபிஐ ஐடியை வைத்து, பேங்க் அக்கவுண்ட் இல்லாத யூசர்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்துகொள்ள அனுமதி கொடுக்க முடியும். இந்த பரிவர்த்தனைக்கு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

புது UPI விதி.. மாதாந்திரம் ரூ.15,000 அனுப்புங்க.. அதுக்கு மேல இல்ல!

இதை என்பிசிஐ (NPCI) கொண்டுவந்தது. பீம் (BHIM) செயலியில் கொண்டுவரப்பட்டது. பிறகு கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகளுக்கு விரிவாக்கப்பட்டது. இப்போது, பீம் செயலியில் மாதத்துக்கு ரூ.15,000 வரையில் யுபிஐ சர்க்கிள் லிமிட் (UPI Circle Limit) கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே, இனிமேல் ரூ.15,000 வரை செகண்டரி யூசர்கள் பரிவர்த்தனை செய்யலாம்.

அதேபோல 5 ஆண்டுகள் வரை காலாவதி காலத்தை பிரைமரி யூசர் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வரம்பை என்பிஎஸ்எல் (NBSL) என்னும் என்பிசிஐ பீம் சர்வீசஸ் லிமிடெட் ( NPCI BHIM Services Limited) கொண்டுவந்துள்ளது. இந்த ரூ.15,000 வரம்பானது, யுபிஐ சர்க்கிளின் ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) ஆகும். இதற்கு குறைவாகவும் மாதாந்திர வரம்பை பிரைமரி யூசர்கள் செட் செய்து வைத்து கொள்ள முடியும்.

யுபிஐ சர்க்கிள் பரிவர்த்தனை வரம்பு: பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட யுபிஐ ஐடியை வைத்திருக்கும் பிரைமரி யூசர்கள், 5 செகண்டர் யூசர்களுக்கு பரிவர்த்தனை செய்து கொள்ள அனுமதி வழங்க முடியும். ஆகவே, ஒரு செகண்டரி யூசருக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சம் ரூ.5,000 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதி வழங்கலாம். மாதத்துக்கு ரூ.15,000 வரம்பு வைக்கலாம்.

புதிதாக இணைக்கப்பட்ட செகண்டரி யூசர் அக்கவுண்ட்டில் இருந்து 24 மணி நேரத்துக்கு ரூ.2,000 மட்டுமே அனுப்ப முடியும். 24 மணி நேரம் முடிந்த பிறகு ரூ.5,000 வரம்பு வைத்து கொள்ளலாம். இந்த வரம்புகள் அதிகப்பட்சமாக இருப்பவையாகும். பிரைமரி யூசர்கள் அவர்களுக்கு விரும்பான வரம்பையும் (1 நாளுக்கு ரூ.1000, மாதத்துக்கு ரூ.8,000) செட் செய்து கொள்ளலாம். ஆகவே, குறிப்பிட்ட தொகையை பராமரிக்க முடியும்.

செகண்டரி யூசரை இணைப்பது எப்படி? கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பீம் போன்ற யுபிஐ செயலிகள், பிரைமரி யூசர் மற்றும் செகண்டரி யூசரிடம் இருக்க வேண்டும். செகண்டரி யூசர்களின் மொபைல் நம்பர் பிரைமரி யூசரின் கான்டாக்ட் (Contact) பட்டியலில் இருக்க வேண்டும். செகண்டரி யூசர்களிடம் பேங்க் அக்கவுண்ட் தேவை கிடையாது. யுபிஐ செயலியை ஓப்பன் செய்து யுபிஐ சர்க்கிள் விருப்பத்துக்கு செல்ல வேண்டும்.

இதில் ஆட் (Add) செய்தல் அல்லது ஆட் செய்ய பரிந்துரை செய்தல் (Request to Add) என்று 2 விருப்பங்கள் இருக்கும். நீங்கள் பிரைமரி யூசராக இருந்தால், ஆட் விருப்பத்தை தேர்ந்தெடுத்து செகண்டரி யூசர்களின் மொபைல் நம்பரை கொடுத்து ஆட் செய்யலாம். செகண்டரி யூசர்களாக இருந்தால், பரிந்துரை விருப்பத்தை தேர்வு செய்யலாம். பிறகு கியூஆர் கோட் கிடைக்கும். இதை பிரைமரி யூசரை ஸ்கேன் செய்ய சொல்லி சேர்ந்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
UPI Circle Limit Secondary User Maximum Monthly Limit Rs 15000 Check BHIM Transaction Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X